ஆப்பிரிக்காவில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் ஓர் அரசர் இருந்தார், அவரிடம் *பத்து காட்டு நாய்கள்* இருந்தன.
தவறு செய்த தனது ஊழியர்களை அந்த காட்டுநாய்களுக்கு இரையாக்குவார்.
ஒரு நாள் வேலைக்காரர்களில் ஒருவர் தவறான ஒரு கருத்தை சொன்னார், அரசருக்கு கோபம் வந்துவிட்டது.
*இவனை நாய்களுக்கு தூக்கி எறியுங்கள்.”*
என்று கட்டளையிட்டார்.
வேலைக்காரன் கெஞ்சினான்,
நான் உங்களுக்கு *பத்து வருடங்களாக சேவைசெய்தேன், நீங்கள் இப்படி ஒரு தண்டனையை எனக்குத் தரலாமா?*
தயவுசெய்து என்னை அந்த நாய்களுக்கு தூக்கி எறிவதற்கு முன் பத்து நாட்கள் அவகாசம்
ஒன்று தாருங்கள்!
ராஜா ஒப்புக் கொண்டார்.
அந்த பத்து நாட்களில், வேலைக்காரன் நாய்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் காவலரிடம் சென்று, அடுத்த *பத்து நாட்களுக்கும் தான் அந்த நாய்களுக்கு சேவை செய்ய விரும்புவதாகக் கூறினான்.*
காவலர் குழப்பமடைந்தார், ஆனாலும் ஒப்புக்
கொண்டார்.
அந்த வேலைக்காரன் அந்த நாய்களுக்கு உணவளித்தான், அவற்றைச் சுத்தம் செய்தான், குளிப்பாட்டவும் தொடங்கினான்.
அவற்றிற்கு அனைத்து விதமான வசதிகளையும் வழங்கி அன்பு காட்டினான்.
பத்து நாட்கள் முடிந்தது.
வேலைக்காரனைத் தண்டிப்பதற்காக நாய்களிடம் தூக்கிஎறியும் படி அரசர் உத்தரவிட்டார்.
*அவன் தூக்கி எறியப்பட்ட போது, அவை ஓடி வந்து அவனின் கால்களை நக்கததொடங்கின*
இதைக் கண்டு அனைவரும் வியந்தனர்!
இதைப் பார்த்து திகைத்த அரசன்,
"என் நாய்களுக்கு என்ன நேர்ந்தது?"என்றான்.
வேலைக்காரன் பதிலளித்தான்,
*நான் பத்து நாட்களுக்கு மட்டுமே இந்த நாய்களுக்குசேவைசெய்தேன்*, அவை *என் சேவையை மறக்கவில்லை*
நான் உங்களுக்கு *பத்து வருடங்கள் சேவை செய்தும் என் முதல் தவறைக் கூட மன்னிக்காமல் நான் உங்களுக்கு செய்த அனைத்தையும்மறந்த என்னை தண்டிக்க உத்தரவிட்டீர்கள்!"*
அரசர் தனது தவறை உணர்ந்து வேலைக்காரனை விடுவிக்க உத்தர விட்டார்.
நம்மிலும் எத்தனையோ
பேர் இப்படி இருக்கிறோம்.
*ஒருவர் செய்த ஒரு தவறுக்காக, அவர் நமக்கு செய்த உதவிகளை எல்லாம் மறந்து* அவரை வாழ்நாளெல்லாம் ஒதுக்கி வாழும் எத்தனையோ பேர் *நம்மிலும் இல்லாமல் இல்லை.*
இருக்கிறார்கள்.
*தவறுசெய்வது மனித சுபாவம்.இதை உணர்ந்து தவறுகளை மன்னிக்கப் பழகுவதும் மனிதசுபாவம்•*
அப்பா ஒரு வரம்
அப்பா . . . . உங்கள் திசையில் காத்திருக்கிறோம். மிஸ்டர் வேம்பு. எழுபது வயது தாத்தா. பூங்காவில் ஒரு பெஞ்சில் அமர்ந்திருக்கிறார். பக்கத்தில் குழந்தைகள் விளையாடும் சத்தம். மரத்தில் பறவைகள் கத்தும் சத்தம். இந்த சூழலை ரசித்துக் கொண்டிருந்தார் மிஸ்டர் வேம்பு. வாழ்க்கையில் இனி ஓடி ஒளிய முடியாமல், பழைய நினைவுகளை உயர்த்திப் பிடித்து அசைபோடும் நிலை அது. அதே பெஞ்சில் அவருடன் அமர்ந்திருந்த நண்பர்கள் யாரும் தற்போது உயிரோடு இல்லை. அந்த சமயத்தில் ஒருவர் வேம்புவின் பக்கத்தில் அமர்கிறார். ‘மிஸ்டர் வேம்பு! நான் தான் கடவுள். உங்களுக்கு ஆசை ஏதாவது இருந்தால் சொல்லுங்கள் நிறைவேற்றுகிறேன்', என்றார் கடவுள். ஆச்சர்யப்பட்டார் வேம்பு. யோசித்தார். பிறகு பேசினார். ‘கடவுளே! என் அப்பாவை பார்க்க வேண்டும். அவரை என் முன் கொண்டு வந்து நிறுத்திவீர்களா?' என்று கேட்டார் வேம்பு. ‘மிஸ்டர் வேம்பு! நீங்களே தாத்தாவாகி பல வருஷங்கள் ஆயிடுச்சு. இன்னமும் உங்கள் அப்பாவை பார்க்கும் ஆசை இருக்கிறதா?' என்று கேட்டார் கடவுள். ‘கடவுளே! ஆம். அவருக்கு நிகர் யாருமில்லை', என்றார் வேம்பு. ‘அப்ப...
Nice 👌 message.
ReplyDelete