Posts

*நாம் துவக்கி வைப்போம்.... இந்த மாற்றத்தை.....👇* குடும்ப உறுப்பினர் ஒருவர் திடீரென இறந்து போகையில் கையில் காசில்லாமல் திணரும் ஒருவரை நீங்கள் கவனித்ததுண்டா...? உண்மையில் பிச்சை எடுக்காத குறையாக அந்த நாள் மாறிவிடும். எளிமையா ப்ரீசர் பாக்ஸ், ஆம்புலன்ஸ், ரெண்டு மாலை, போட்டு சுடுகாட்டு செலவு செய்தாலே இன்றைய தேதிக்கு 30,40 ஆயிரம் இல்லாமல் முடியாது. அப்படி இருக்க உறவொன்று இறந்ததை நினைத்து அழுவதா???? சிலமணி நேரத்தில் பணம் எப்படி தயார் செய்வது???? என்ற நெருக்கடியை நினைத்து அழுவதா..?. கடன் பழக்கமே, இல்லாதவர்களைக் கூட அச்சூழல் வட்டிக்கடைக்கும், அடகு கடைக்கும் கொண்டு போய் தள்ளும். . இது விசயத்தில் முக்கியமான ஒரு கருத்தை எல்லோரும் தயவுசெய்து ஏற்கவேண்டும் அல்லது இனிமேலாவது இந்த செயலை ஏற்படுத்த வேண்டும்... அப்படி என்ன செயல்?... இனிமேல் *எந்த துக்கம் வீட்டுக்கு சென்றாலும், யாரும் பூ மாலை வாங்கி போட வேண்டாம் ஏன்?...* நாம் மாலை வாங்கி போட்ட அடுத்த நிமிடமே..... அந்த மாலையை வெளியே எடுத்து வந்து ஒரு இடத்தில் மாட்டி விடுவார்கள்... பின்னர் அந்த மாலையை ரோட்டில் போட்டு குப்பையாக்கி, அதுவும் மெயின் ரோட்டி
*நோயில்லாமல்வாழ_ஆறுவழிகள்..!!* முன்னோர்களின் #ஆறுவழிகளை நீங்கள் கடைப்பிடித்தால், உங்களுக்குள் உள்ள பிரச்சனைகள் தீர்வதுடன், வாழ்நாள் முழுவதும் எந்த நோய்களும் வராது... *1 - பசி* *2 - தாகம்* *3 - உடல் உழைப்பு* *4 - தூக்கம்* *5 - ஓய்வு* *6 - மன அமைதி-* *■ பசி..* உங்கள் உடலுக்கு உணவு தேவையா இல்லையா என்பது சுவரில் தொங்கும் கடிகாரத்திற்கு தெரியுமா ? தெரியாதல்லவா?? பின் ஏன் நேரம் பார்த்து சாப்பீடுகிறீர்கள்? யாரெல்லாம் நேரம் பார்த்து வேளாவேளைக்கு சரியாக சாப்பிடுகிறாரோ அவர் மிகப்பெரிய நோயாளி ஆகப்போகிறார் என்று அர்த்தம். பசியின் அளவு தெரியாமல் அதிகமாக உண்டால் நோய் அளவில்லாம் வரும் போது, பசியே இல்லாமல் சாப்பிட்டால் என்னவாகும்? உணவை பசித்து, சவைத்து, சுவைத்து கவனித்து, இடையில் தண்ணீர் குடிக்காமல் உண்ண வேண்டும். இதை நீங்கள் சரியாக செய்ததின் மூலம் ஆரோக்கியத்தின் முதல் படியில் கால் வைக்கிறீர்கள். *■ தாகம்..* அனைவருக்கும பொதுவாக தண்ணீரின் அளவு நிர்ணயிக்கப்படுகிறது, இது தவறு. Ac யில் வேலை பார்க்கும நபருக்கு 3 லிட்டர் தண்ணீர் தேவைப்படாது, மீறி குடித்தால் சிறுநீரகம் பாதிக்கப்படும். வெயிலில் கட்ட
🌹கர்நாடகா மாநிலம், ரெய்ச்சூர் மாவட்டம், தேவதுர்கா நகரில் ஸ்ரீ வெங்கடேஸ்வரர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் என்ன சிறப்பு என்றால் கொதிக்கும் நீரை இறைவனுக்கு அபிஷேகம் செய்கிறார்கள் இந்த தீர்த்தத்தை பாதத்தில் பிடித்தால் குளிர்ந்த நீராக வருகிறது இதே குளிர்ந்த நீரை பிடித்து அபிஷேகம் செய்தால் கொதிக்கும் நீராக வருகிறது என்ன விந்தை பார்த்தீர்களா. இதை நீங்களே நேரில் கண்டு களியுங்கள்.
வெட்டியான் ஒருவன் பிணத்துக்காகக் குழி தோண்டும்போது சிவலிங்கம் ஒன்றைக் கண்டெடுத்தான். அதை அரசனிடம் எடுத்துச் சென்றபோது ”சுடுகாட்டில் கிடைத்ததை நீயே வைத்துக்கொள் சுடுகாட்டுச் சாம்பலை வைத்து அபிஷேகம் செய்” என்று ஏளனமாக அரசன் கூறிவிட்டான். இறை வழிபாடு என்றால் என்ன என்று தெரியாத வெட்டியானும் அரசனது வார்த்தைகள் ஏளனமானவை என்பதை அறியாமல், பிணம் எரித்த சாம்பலைக் கொண்டு சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்து வழிபட்டான் . ஒருநாள் திடீரெனப் பெய்த மழையினால், சுடுகாட்டில் இருந்த சாம்பல் முழுவதும் கரைந்து விட்டது. சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்ய சாம்பல் இல்லையே என வருந்திய அவனும் விராட்டிகளை அடுக்கி தீயை மூட்டிவிட்டு தனது மனைவியிடம் ”நான் இந்த தீயில் விழுகிறேன். என் உடல் எரிந்து கிடைக்கும் சாம்பலைக் கொண்டு சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்” என்று கூறினான். ஆனால் மனைவியோ ”நீங்கள் அப்படி இறந்து விட்டால் இங்கு வரும் பிணங்கள் சீரழிந்துவிடும், நானே தீயில் குதிக்கின்றேன்” என்று கூறிக்கொண்டே தீயில் வீழ்ந்தாள். இருவரது பக்தியிலும் திளைத்த பரமசிவன் பார்வதியுடன் பிரத்தியட்சமாகி மனைவியை உயிர்ப்பித்து இருவரையும் ம
கீழ்க்கண்ட ஆங்கில - தமிழ்ச் சொற்களை உற்று கவனியுங்கள்! Mango - மாங்காய் Cash - காசு One - "ஒன்"று Eight - "எட்"டு Victory - வெற்றி Win - வெல்/வென்று Wagon - வாகனம் Elachi - ஏலக்காய் Coir - கயிறு Eve - அவ்வை Terra - தரை Metre - மாத்திரை (unit representation in Tamil) Name - நாமம் (பெயர் - எ.கா சிவனின் நாமத்தை துதிப்போம், இதை இந்தியில் நாம் என்று சொல்வார்கள்) Vomit - ஒமட்டு (குமட்டுதல்) பின்வரும் வார்தையில S ஐ நீக்கிவிட்டு பார்த்தால், அப்படியே தமிழ் சாயல். Script - குறிப்பு Speech-பேச்சு Speed - பீடு/வேகம் (பீடு நடை - வேக நடை) Sponge - பஞ்சு Snake - நாகம் A"ttack" - தாக்கு M"ake" - "ஆக்க"ம் Round - உ"ருண்டை" Lemon - "இளம"ஞ்சள்காய் (எலுமிச்சை) Roll - உ"ருள்" Orate - "உரை"யாற்று "Know"ledge - "ஞான"ம் Ginger - இ"ஞ்சி" Molecule - மூலக்கூறு Kill - கொல் Prize - பரிசு Other - இதர Tele - தொலை Teak - தேக்கு Rice -அரிசி Aqua - அக்கம் Venom - விடம் Fade - வாடு Poly- பல Mega -
அரங்கனுக்கு பழைய சோறும் மாவடுவும். ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ ரங்கநாத பெருமாள் பங்குனி பிரம்மோத்ஸவம் - ஜீய புரம் புறப்பாடு. ‘பழைய சோறும், மாவடுவும்’ என்று புகழப்படும் இந்தத் திருவிழாவில் கலந்து கொள்ள, ரங்கநாத பெருமாள் ஸ்ரீரங்கத்தில் இருந்து, ஜீயர்புரம் என்ற ஊருக்கு புறப்பட்டுச் செல்கிறார். அங்கு சவரத் தொழிலாளர்களின் மண்டகப்படி, பெருமாளுக்கு நடைபெறுகிறது. அந்த விழாவில் முகம் திருத்தும் தொழிலாளி ஒருவர், ரங்கநாத பெருமாளுக்கு எதிரே கண்ணாடி காட்டி கண்ணாடியில் தெரியும் ஆண்டவரின் பிம்பத்திற்கு முகம் திருத்தம் செய்வது போன்று ஒரு நிகழ்வு நடைபெறுகிறது. அதன்பிறகு முகம் திருத்தும் தொழிலாளிக்கு மரியாதை செய்யப்படுகிறது. இந்தத் திருவிழாவில் தான், ரங்கநாதருக்கு நைவேத்தியமாக பழைய சோறும், மாவடுவும் அளிக்கப்படுகிறது. வெண் ணெயை உண்ட அந்த ஆதிமூலப் பெருமாளுக்கு பழைய சோறும், மாவடுவும் விருந்தளிக் கப்படுகிறதா? என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். ஏன்.. அதே ஆதிமூலப் பெருமாள் மண்ணையும் தான் உண்டிருக்கிறாரே.. அவருக்கு பக்திதான் முக்கியம். நைவேத்தியப் பொருள் அல்ல. ஆனால் இந்த பழைய சோறு.. மாவடுவுக்குப் பின்னால், நெஞ்சை உருக்
*இன்றைய சிந்தனை* ( 29.11.2021) *திங்கட்கிழமை என்றாலே சோம்பேறித்தனமா? கோபமாக வருகிறதா?* திங்கட்கிழமை என்றாலே பலருக்கும் சோம்பேறித்தனம் இருக்கும். இன்னும் இரண்டு நாள் விடுமுறை கிடைக்காதா? என்று ஏங்குவோர் பலர். அன்றுதான் தூக்கம் கண்களை விட்டு அகலாது. கட்டிலைவிட்டு எழுந்து கிளம்ப மனம் வராது. இருப்பினும் வேலைக்கு செல்ல வேண்டுமே என கடுப்பாக கிளம்புவார்கள். திங்கட்கிழமையை உற்சாகமாக தொடங்குவது எப்படி? என்பதை பற்றி தெரிந்துக்கொள்வோம். திங்கட்கிழமையை எதிர்கொள்ள எளிய வழிமுறைகள் : திங்கட்கிழமை காலையில் சீக்கிரமாக எழுந்துவிடுங்கள். இல்லையென்றால் கடைசி நேர அவசரம் முதல் நாளையே மனஉளைச்சலை ஏற்படுத்திவிடும். வேலைக்கும் சரியான நேரத்தில் செல்ல முடியாது. திங்கட்கிழமைகளில் உங்களுக்கு பிடித்த, உற்சாகம் கொள்ள வைக்கும் உடைகளை அணியலாம். இது தன்னம்பிக்கையை அதிகரிக்கும். திங்கட்கிழமையை மிகவும் சீரியஸாக எடுத்துக்கொள்ளாமல் ரிலாக்ஸாக தயாராகுங்கள். உங்களுக்கு பிடித்த பாடலை கேட்டு கொண்டும், நடனம் ஆடி கொண்டும், வேலைக்கு தயாராகுங்கள். உங்களின் வேலையை பற்றியும், உங்களை பற்றியும், உங்கள் நிறுவனத்தைப் பற்றியும்,