எத்தகைய அச்சமும் அகலுவதற்கு ஓத வேண்டிய அபிராமி அந்தாதி பாடல் 62. அபிராமி அந்தாதியில் இடம் பெற்றிருக்கும் அனைத்து பாடல்களும் மிகவும் சக்தி வாய்ந்தவையாக கருதப்படுகிறது. ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு பிரச்சினையை தீர்க்கும் வண்ணம் அமையப் பெற்றுள்ளது. முதலில் 101வது பாடலாக வரும் நூல் பயன் பாடலை அபிராமி அன்னையை மனதார வேண்டி மூன்று முறை பாராயணம் செய்ய வேண்டும். பின்னர் என்ன காரிய சித்தி வேண்டுமோ அந்த காரிய சித்திக்கான அபிராமி அந்தாதி பாடலை மூன்று முறை பாராயணம் செய்ய வேண்டும். அபிராமி அந்தாதி நூற்பயன் 101 வது பாடல்: ஆத்தாளை எங்கள் அபிராமவல்லியை அண்டம் எல்லாம் பூத்தாளை மாதுளம் பூ நிறத்தாளை புவி அடங்கக் காத்தாளை அங்குச பாசாங்குசமும் கரும்பும் அங்கை சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கும் இல்லையே. அபிராமி அந்தாதி 101வது பாடல் பொருள்: எங்கள் தாயானவளை, அபிராமி வல்லியை, எல்லா உலகங்களையும் பெற்றவளை, மாதுளம் பூப்போன்ற நிறத்துடையவளை, எல்லா உலகங்களையும் தன் ஆளுகையின் கீழ் கொண்டு காப்பவளை, திருக்கரங்களில் மலர் அம்புகள் ஐந்தையும், பாசத்தையும், அங்குசத்தையும், கரும்பு வில்லையும் வைத்திருபவளை,
Posts
Showing posts from May, 2021
- Get link
- X
- Other Apps
🧚♂️🌷🧚♂️🌷🧚♂️🌷🧚♂️🌷 *'மூன்று திருக்குறளும் ஓரிடத்தில் சந்தித்தபோது ......'* *ஆச்சரியம், ஆனால் உண்மை* 🧚♂️ படித்ததில் பிடித்தது 🌷 சேலம் மாவட்டம். புதிதாக ஒரு இளம் பெண் ஆட்சியர் (வயது 27) பதவியேற்கிறார். அந்த நேரம் பார்த்து, மாவட்டத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஜாதிக் கலவரம் வெடிக்கக்கூடிய அபாயம். மாநில அரசு அவரை உடனடியாகக் கள ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கச் சொன்னதோடு, காவல்துறையையும் தயார் நிலையில் வைக்கும்படி பணித்தது. மறுநாள் அதிகாலை ரெயிலில், களஆய்விற்காக புதிய ஆட்சியர் வருவதாகத் தகவல். அரசு முறைப்படி அவரை மரியாதையோடு வரவேற்று, விருந்தினர் மாளிகைக்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் பொறுப்பு டிஎஸ்பிக்கு (வயது 54). அவரும் அதிகாலையிலேயே நிலையத்திற்கு வந்து காத்திருக்கிறார். பத்திரிக்கை நிருபர்களும் அதி காலையிலேயே குழுமிவிட்டார்கள். அதில் ஒரு ரகசியம் இருப்பது சில மூத்த பத்திரிக்கையாளர்களுக்கு மட்டும் தெரியும். என்ன நடக்கப் போகிறது, எப்படி நடக்கப் போகிறது என்பதைப் பார்ப்பதற்காக ஆவலோடு காத்திருந்தார்கள். புதிதாகவரும் இளம் பெண் ஆட்சியர், டிஎஸ்பியின
- Get link
- X
- Other Apps
டோர் குளோஸரின் விசையை எதிர்த்துக் கதவைத் திறந்துகொண்டு இண்டர்வியு ரூமின் உள்ளே தலையை நீட்டினான் ரமேஷ். ‘பிளீஸ் கம் இன்’ என்றார் ஒருவர். போனான். ‘சிட் டவுன்’ உட்கார்ந்தான். அது ஒரு பெரிய ஹால். வலப்பக்கக் கோடியில் பெரிய திரை. சீலிங்கிலிருந்து டிஜிட்டல் புரஜக்டர் தொங்கியது. கீழே உயர்ந்த கார்ப்பெட். நாற்காலிகள் ஒவ்வொன்றும் அக்பர் சக்கரவர்த்தியின் அரியாசனம் போல் இருந்தன. ஸ்பிளிட் ஏஸிக்கள் ஓசையின்றி ஓடிக் கொண்டிருந்தன. இடப் பக்கச் சுவரின் ஓரம் கசக்கிப் போட்ட காகிதம் ஒன்று உறுத்தலாக இருந்தது. ஒரு நீள்வட்ட மேசையின் எதிர்ப் புறத்தில் நான்கு பேர் உட்கார்ந்திருந்தார்கள். ரமேஷ் வருவதைப் பார்த்ததும் இடது கோடியில் இருந்தவரைப் பார்த்து கொஞ்சம் பவ்யமாக மற்ற மூவரும் ‘ஐயா, நீங்க கேக்கறீங்களா?’ என்பது போல் வளைந்தார்கள். அதற்கு அவர் ‘இட்ஸ் ஓக்கே.. நீங்க ஆரம்பியுங்க’ என்பது போல் ஜாடை காட்டிவிட்டு கொஞ்சம் தளர்ந்து உட்கார்ந்து கொண்டார். வலக் கோடியில் இருப்பவர் ஆரம்பித்தார். ‘எப்படி இருக்கு இந்த அட்மாஸ்பியர்?’ என்றார். ‘இது ஒரு நல்ல கான்ஃபரன்ஸ் ஹால். புரஜக்டர், ஸ்க்ரீன், வொய்ட் போர்ட், மார்க்கர், சவுண்ட் பு
- Get link
- X
- Other Apps
An awesome post that must be read: Dr Sarvepalli Radhakrishnan, a great teacher, Philosopher and former President of India in whose honour Teachers' Day is celebrated , was an exceptionally witty man. The King of Greece came to India on a state visit. President Radhakrishnan welcomed him at Palam Airport. . “Your Majesty! You are the first King of Greece to come to India on invitation. The last time, Alexander the Great came uninvited.” 😂 Gandhiji: Don’t drink milk, which is the essence of beef. Radhakrishnan: “In that case we all are cannibals. For we drink our mother’s milk, which is the essence of human flesh.” 😂 Winston Churchill while having a cup of tea said to Dr. Radhakrishnan: Sugar is the only English word where "s" is pronounced as "sh" Dr. quipped: "Are you sure?" 😂 Once Winston Churchill hosted a State banquet in honor of Dr Radhakrishnan, who washed his hands before eating and used his hands for having the food while Churchill used
- Get link
- X
- Other Apps
*மகிழ்ந்து மகிழ்விக்கவும்.. லாஜிக் தெரியுமா..??* *ஒரு பெண்மணி. 60+ வயதிருக்கும். தன் ஐம்பது வயதுக்கு மேல் தன்னிடம் உள்ள எழுத்துத் திறமையைக் கண்டறிந்து கதை, கவிதை என பத்திரிகைகளுக்கு எழுதி வந்தார்.* *அவர் பிள்ளைகளுக்குத் திருமணம் ஆகிச் சென்று விட அவர் சென்னையில் தனித்து இருக்கிறார். கணவர் 2 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். சென்ற ஆண்டு வரை அவருடன் அவரின் வயதான அம்மாவும் வசித்து வந்தார். அம்மா படுத்தப் படுக்கை என்பதால் அவரை கவனித்துக் கொள்வதிலேயே நிறைய நேரம் செலவாகி விடுவதால் நிறைய எழுத முடிவதில்லை என்று சொல்வார்.* *சென்ற வருடம் அவர் அம்மா இறந்து விட்டார். ஆனால் அதன் பிறகு அவர் எழுதுவது குறைந்தது. ஒருகட்டத்தில் நின்றே போனது. அதற்கு அவர் சொன்ன காரணம் வியப்பாக இருந்தது.* *‘என் அம்மா படுத்தப் படுக்கையில் இருந்தாலும் நிறைய புத்தகங்கள் வாசிப்பார். அன்றாட செய்தித்தாள்களை படித்தும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்தும் நாட்டு நடப்புகளை என்னுடன் பகிர்ந்து கொண்டு விவாதிப்பார். எழுதுவதற்கு என் அம்மா தான் மறைமுகமாக மனதளவில் ஊக்கப்படுத்தி வந்திருக்கிறார் என்பது அவர் உயிருடன் இருந்த போது தெரியவ
- Get link
- X
- Other Apps
A mother casually calls up her son one afternoon. *Mother*: "Hi son, how are you?" *Son*: "I'm fine, Mom". *Mother*: "What did you have for lunch today?" *Son*: Don't you have anything else to ask, Mom? You only ask silly questions like, 'What did you eat?' ...'What dress are you wearing?'...'Whom did you meet.'....'What song did you listen to?'...etc etc! *Mother*: "Oh!!!! Ok, Ok, then tell me, how should the World Bank fight these inflationary trends with minimum intervention in the money markets? And what should be the role of the International Finance Institutions to control inflationary trends across the globe & the slowing down of the World Economy?" *Son*: (After a few seconds silence)...."Mom, I had curd rice with pickle & salad." *_Dedicated to all kids who underestimate their mothers._!*😃👍
- Get link
- X
- Other Apps
OM Sri GURUPYO NAMAHA RESPECTFUL PRANAMS TO KANCHI MAHAPERIYAVA 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏 ஒரு புலவர், தன் குடும்பத்தவருடன் செட்டிநாட்டுப் பகுதியிலிருந்து பயணிக்கும் போது, வழியில் எங்குமே சாப்பிடக் கிடைக்கவில்லை. பசியோ குடலைப் பிடுங்கித் தின்கிறது. நேரமோ நள்ளிரவைத் தாண்டிவிட்டது. அப்போது, புதுக்கோட்டை அருகே ஒரு ஊரில் மகாபெரியவர் தங்கி இருக்கும் அறிவிப்பு அவர் கண்களில் படுகிறது. உடனே காரை அங்கு விடச் சொல்கிறார். குடும்பத்தவர்களோ, ‘நள்ளிரவாகி விட்ட நிலையில், பெரியவர் தங்கி இருக்கும் இடத்துக்குப் போய், அவரை சிரமப்படுத்துவது சரியில்லை’ என்கின்றனர். நாம் சிரமப்படுத்த வேண்டாம். காலை அவரை தரிசித்து விட்டு செல்வோம். இந்தப் பட்டினி அவருக்கான விரதமாக இருக்கட்டும்‘’ என்கிறார் புலவர். காரும் அந்த ஊரை நெருங்கி விட்ட நிலையில், மணி ஒன்று! ஊர் எல்லையிலேயே ஒரு பிராமணர் காத்திருந்து, வழிமறித்து நிறுத்தி, ‘நீங்கள் தானே புலவர்?’ என்று கேட்கிறார். புலவருக்கோ பெரும் வியப்பு…! அந்த நள்ளிரவில் புலவரின் காரை வழிமறித்து, நீங்கள்தானே புலவர்?” என்று அந்த பிராமணர் கேட்டபோது, அந்த புலவருக்கு பெரும் வியப்பு. ஏனென்றால்,
- Get link
- X
- Other Apps
🦜.. *இரட்டை சொற்கள்!* ..🦜 🍀. குண்டக்க மண்டக்க : 🔸குண்டக்க : இடுப்புப்பகுதி, 🔸மண்டக்க: தலைப் பகுதி, சிறுவர்கள் கால் பக்கம், தலைப்பக்கம் எது என தெரியாமல் தூக்குவது, வீட்டில் எந்த எந்த பொருள் எங்கே எங்கே இருக்க வேண்டிய இடத்தில் இல்லாமல் இருப்பதுதான்... 🍀. அந்தி, சந்தி: 🔸அந்தி : . மாலை நேரத்திற்கும் , இரவுக்கும் இடையில் உள்ள பொழுது.. 🔸சந்தி: . இரவு நேரத்திற்கும் , காலை நேரத்திற்கும் இடையில் உள்ள விடியல் பொழுது.. 🍀. அக்குவேர்,ஆணிவேர்:🔸 அக்குவேர் : செடியின் கீழ் உள்ள மெல்லியவேர்...🔸 ஆணி வேர்: செடியின் கீழ் ஆழமாக செல்லும் வேர்... 🍀. அரை குறை: 🔸 அரை : ஒரு பொருளின் சரி பாதி அளவில் உள்ளது..🔸 குறை : அந்த சரிபாதி அளவில் குறைவாக உள்ளது... 🍀. அக்கம், பக்கம்: 🔸 அக்கம்: தன் வீடும், தான் இருக்கும் இடமும்... 🔸 பக்கம்: பக்தத்தில் உளவீடும், பக்கத்தில் உள்ள இடமும்... 🍀 கார சாரம் : 🔸காரம் : உறைப்பு சுவையுள்ளது... 🔸சாரம்: காரம் சார்ந்த சுவையுள்ளது... 🍀.இசகு பிசகு: 🔸 இசகு: தம் இயல்பு தெரிந்து ஏமாற்றுபவர்களிடம் ஏமாறுதல்... 🔸 பிசகு: தம்முடைய அறியாமையால் ஏமாறுதல்...
- Get link
- X
- Other Apps
மரணத்துக்குப் பின்,தன் தந்தையான சூரியனின் இருப்பிடத்தை அடைந்த கர்ணன் சூரியனிடம், "தந்தையே! நான் என் நண்பன் துரியோதனனுக்கு, செஞ்சோற்றுக் கடன் தீர்க்க வேண்டுமென்ற நல்லெண்ணத்தில், அவன் பக்கம் போர் புரிந்தேன்... ஆனால் வஞ்சகன் கண்ணன் என்னை வஞ்சித்து வீழ்த்தி விட்டானே!” என்று புலம்பினான்...! அப்போது சூரிய பகவான், "இல்லை கர்ணா! கண்ணனை வஞ்சகன் என்று சொல்லாதே. நீ ஒரு தவறு செய்துவிட்டாய். செஞ்சோற்றுக் கடன் தீர்ப்பது சிறந்த தர்மம் என்பதில் சந்தேகமே இல்லை...! ஆனால் கண்ணனோ சாமானிய தர்மங்களை விட, உயர்ந்த விசேஷ தர்மமாக விளங்குபவன்....! "க்ருஷ்ணம் தர்மம் ஸனாதனம்” என்று அதனால்தான் சொல்கிறோம்...! அந்தக் 'கண்ணன்' என்ற விசேஷ தர்மத்துக்கும், செஞ்சோற்றுக் கடன் தீர்த்தல் என்ற சாமானிய தர்மத்துக்கும்,முரண்பாடு வருகையில், விசேஷ தர்மத்தை கைக்கொள்ள வேண்டும். நீ அதை விட்டுவிட்டுச் சாமானிய தர்மத்தை கைக்கொண்டு,விசேஷ தர்மத்தைக் கைவிட்டாய். அதனால்தான் அழிந்தாய்...! தந்தைசொல் மிக்க மந்திரம் இல்லை என்பது உயர்ந்த தர்மம் தான்...! அதற்காக இரணியனின் பேச்சைக் கேட்டுப் பிரகலாதன் நடந்தானா? நரசிம்மர்
- Get link
- X
- Other Apps
*திருப்பதி க்ஷேத்ரத்தை காப்பாற்றிய காஞ்சி மஹான்* காஞ்சி மகான் திருப்பதி க்ஷேத்ரத்தை எப்படி காப்பாற்றினார் என்பது பலருக்கு தெரியாமல் போய் விட்ட விஷயம் இது. ஏறக்குறைய 40-50 ஆண்டுகளுக்கு முன் நடந்தது . திருப்பதி கோயிலில் எப்பொழுதும் எதாவது மாறுதல்கள் செய்து கொண்டே இருப்பார்கள் பக்தர்களின் வசதிக்காக. ஒரு முறை அங்கே இருந்த பொதுப்பணி துறை அதிகாரிகளும் அறநிலையத்துறை அமைச்சரும் ஒரு முக்கியமான முடிவுக்கு தயாராகிக் கொண்டிருந்தனர். பொதுமக்கள் மூல ஸ்தானத்திக்குள் போய் அதே வழியாக திரும்பி வருவது வழக்கம், இதை மாற்றி, அதற்கு பதில் மூலஸ்தானத்திகுள் பக்கத்தில் உள்ள அர்த்த மண்டபத்தின் சுவர்களை இடித்து மக்கள் வலப்பக்கம் இடப்பக்கம் வழியாக வந்து போனால் அவர்களுக்கு சௌகரியமாக இருக்கும், நெரிசலும் குறையும் என்று முடிவு செய்து கீழ்மட்ட அளவில் பேசி இதற்காக வெளிநாட்டில் இருந்து 40 லக்க்ஷம் செலவில் கோவில் சுவற்றை இடிக்க ஒரு நவீன இயந்திரத்தை தருவிக்கவும் முடிவு செய்யப்பட்டது . இவையனைத்தையும் கேட்டு மன நிம்மதி இழ
- Get link
- X
- Other Apps
ஆன்மீகக் கதை ..... தேவலோகத்தில் வீணை இசை வாசிப்பதில் சிறந்தவர்கள் நாரதர் மற்றும் தும்புரு. தும்புரு கைலாயத்திலும் நாரதர் வைகுண்டத்திலும் தம்முடைய திறமையை வெளிப்படுத்தி வந்தனர். ஒரு சமயம் இவர்களுக்குள் தம்முள் யார் சிறந்தவர் என்ற சர்ச்சை வந்தது. வைகுண்ட பதியான விஷ்ணுவே மயங்கும் வகையில் வாசிக்கும் தம்முடைய இசைதான் சிறந்தது என்றார் நாரதர். இராவணனின் இசைக்கு மயங்கிவரங்களை கொடுத்தவர் எங்கள் ஈஸ்வரன். அவர் என் இசையை ரசிக்கிறார் எனவே நான் தான் சிறந்தவர் என்றார் தும்புரு. அதெப்படி என் இசையை இதுவரை அவர் கேட்டிருக்கிறாரா? என் பாட்டைக் கேட்டால் அப்புறம் என்னை சிறந்தவன் என்று ஒப்புக்கொள்வார் என்றார் நாரதர். உமக்கு கலகம் செய்யும் அளவிற்கு வாசிக்கத்தெரியுமா? என்று தெரியவில்லை! ஈசன் திரிகால ஞானி அவர் உன்னைப் பற்றி என்ன உலகத்தை பற்றி எல்லாம் அறிந்தவர். அவர் இதுவரை உன்னைப் பற்றியோ உன் இசையைப் பற்றியோ ஒரு வார்த்தை கூட சொன்னதில்லை தெரியுமா?  என்னைப் பற்றி அவர் ஏதும் சொல்லவில்லை என்பதிலிருந்தே அவர் என் இன்னிசையைக் கேட்கவில்லை என்று தோன்றுகிறது. நீ உன் இசையைத் தவிர வேறு எதையும் அவரைக் கேட்கவிட்டால்தானே! எ
- Get link
- X
- Other Apps
நண்பர்களே! கோரோனாவால் பொழுது போகாமல் தவிக்கும் அனைவருக்கும் ஒரு நற்செய்தி. கல்கி நிறுவனத்தினர் தங்களது இணையத்தளத்தில் 1943 -2010 வரையில் வெளியான கல்கி இதழ்கள் அனைத்தையும், வெளியான தீபாவளி மலர்கள் போன்ற மலர்கள் அனைத்தையும் இலவசமாக வாசிக்க அனுமதியளித்துள்ளார்கள். பொன்னியில் செல்வன் , சிவகாமியின் சபதம் போன்ற நாவல்களையெல்லாம் ஓவியர் மணியம் , ஓவியர் வினு ஆகியோரின் ஓவியங்களுடன் மீண்டும் வாசிக்க முடிவது மகிழ்ச்சியை அளிப்பது. இது போல் மீ.ப.சோமுவின் 'கடல் கண்ட கனவு', 'வெண்ணிலவுப் பெண்ணரசி', அகிலனின் 'வேங்கையின் மைந்தன்', 'கயல்விழி', 'வெற்றித்திருநகர்' , நா.பார்த்தசாரதியின் 'மணி பல்லவம்', 'பாண்டிமாதேவி' . கி.ராஜகோபாலனின் சரித்திர நாவல், கெளசிகனின் 'பாமினிப்பாவை', கல்கியின் 'பார்த்திபன் கனவு' , ஜானகிராமனின் 'அன்பே ஆரமுதே' போன்ற நாவல்களையெல்லாம் அத்தியாயங்களைத் தொகுத்து மின்னூல்களாக்கி வைத்துள்ளார்கள் .அவற்றையும் இலவசமாக வாசிக்கலாம். மின்னூல்கள்: https://www.kalkionline.com/publication/fpubbook.php கல்கி இதழ்கள் (19
- Get link
- X
- Other Apps
ஸ்ரீகாளிகாம்பாளை மனம் குளிர வணங்கி இன்றும் என்றும் நன்நாளாய் மாற்றிடுவோம்🙏 🌹 1677 ம் ஆண்டு சத்ரபதி சிவாஜி வணங்கி வழிபட்டு சென்ற, சென்னை காளிகாம்பாள் கோயில் பற்றிய சில தகவல்கள்... 1.காளிகாம்பாள் ஆலயம் 3000 ஆண்டு பழமையானது. மட்டுமின்றி வரலாற்று சிறப்புடையதாகவும் திகழ்கிறது. 2. ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டி ருப்பதால் இத்தலத்தில் நீங்கள் செய்யும் எல்லா வேண்டுதல்களும் குறைவின்றி வெற்றி பெறும். 3. தற்போதுள்ள ஆலயம் 1639-ம் ஆண்டு விஸ்வகர்மா குலத்தவரால் கட்டப்பட்டு, இன்றும் சீரும், சிறப்புமாக பரிபாலனம் செய்யப்பட்டு வருகிறது. 4. சிதம்பரத்தில் வழிபட்டால், திருவண்ணாமலையை நினைத்தால், காளையார் கோவிலில் காலடி எடுத்து வைத்தால், திருவாரூரில் பிறந்தால் மோட்சகம் கிடைக்கும் என்பார்கள். அது போல பாரிமுனை காளிகாம்பாள் தலத்தில் குங்குமம் பிரசாதம் பெற்றாலே வாழ்வில் உயர்வும், மோட்சமும் கிடைக்கும். 5. காளிகாம்பாள் கோவிலுக்கு செல்லும் போது அவசரப்பட்டு வழிபாடுகளை செய்யாதீர்கள். ராஜகோபுரம், நடராஜ மண்டபம், காயத்ரி மண்டபம் அழகுற அமைக்கப்பட்டுள்ளன. நின்று நிதானமாக ரசித்து பார்த்து வரலாம். 6. காளிகாம்பாள் மகாலட
- Get link
- X
- Other Apps
GOOD MORNING FRIENDS A very poor woman with a small family called-in to a radio station asking for help from God. A non-believer man who was also listening to this radio program decided to make fun of the woman. He got her address, called his secretary and ordered her to buy a large amount of foodstuffs and take to the woman. However, he sent it with the following instruction: "When the woman asks who sent the food, tell her that its from the devil.'' When the secretary arrived at the woman's house, the woman was so happy and grateful for the help that had been received. She started putting the food inside her small house. The Secretary then asked her, ''Don't you want to know who sent the food?'' The woman replied, ''No, Say thanks to whomever sent ths! I don't care who the person is because when GOD orders, even the devil obeys! WORRIES END By Where FAITH BEGINS..
- Get link
- X
- Other Apps
200க்கும் அதிகமான மகான்கள் ஒரே இடத்தில்சமாதியான சிவாலயம்.:--- சுமார் 4000 ஆண்டுகளுக்குமுன் ஒரே இடத்தில் மன்னனால் 200க்கும் மேற்பட்ட மகான்களை சமாதி செய்துவைக்கப்பட்ட பிரசித்தமான சிவாலயம்,இன்று பராமரிப்பின்றி தனிநபர் ஒருவரின் அர்ப்பணிப்பால் புதுப்பிக்கபட்டு இருக்கிறது. ஒரு சாதாரண சிவபக்தன் தான் குடியிருந்தவீட்டை விற்று கிடைத்தபணத்தில் ஆலய புணரமைப்பு பணிகளை செய்து வருகிறார். இவ்வாலயத்தின் சிறப்பை வார்த்தையால் சொல்ல இயலவில்லை. ஆலயத்தில் எங்கு நின்றாலும் Cosmic Vibration நம்மை ஆட்கொள்கிறது. நமது வாழ்வியல் முறைகளை அங்குள்ள சிற்பங்கள் பறைசாற்றுகின்றன. அதில் ஒரு சிற்பம்:தாயின் வயிற்றிலிருந்து குழந்தைபிறப்பை காட்டுகிறது, அப்புறம்குழந்தை நிலைதடுமாறியிருக்கும் போது (இன்று Breach என்று சிசேரியன் செய்வார்கள்) மருத்துவம் பார்க்கும் டெக்னிக்கூட தத்ரூபமாக தூணில் சிற்பமாக காட்டபட்டுள்ளது. அதனை தொடும்போது நமது மூச்சுநிலை பிராணாயாமத்தை 💥உணரலாம் *ஒரு தூணில் பிராணயாம பயிற்சியை விளக்கும் அரிய சிற்பம் உள்ளது. ஒரு சிறப்பு என்னவென்றால் அந்த சிற்பத்தின்மீது கை வைத்தாலே நமக்கு மூச்சு மேலும் கீழும் இய
- Get link
- X
- Other Apps
ஒவ்வொரு நிமிடமும் யாரோ ஒருவர் இந்த உலகத்தை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். நாம் அனைவரும் நமக்கே தெரியாமல் அந்த “வரிசையில்” நின்று கொண்டிருக்கிறோம். நமக்கு முன் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியாது. நாம் வரிசையில் , எந்த இடத்தில் பொருத்தப்படுகிறோமோ அந்த இடம் மாறப்போவதில்லை. நாம் வரிசையின் பின்புறம் செல்ல முடியாது. நாம் வரிசையிலிருந்து வெளியேறவும் முடியாது. நாம் வரிசையைத் தவிர்க்க முடியாது. எனவே நாம் வரிசையில் காத்திருக்கும்போது - நம்முடைய தருணம் வரும் என்று உணர்ந்து வாழுங்கள். தேவையானவற்றிற்கு முன்னுரிமைகள் செய்யுங்கள். பிரியமானவர்களுக்காக நேரம் ஒதுக்குங்கள். நியாயமானவற்றிற்காக குரல் கொடுங்கள். உங்கள் முன்னால் எவரையும் பசியில் இருக்க விடாதீர்கள். சின்ன சின்ன தருணங்களையும் அழகாக்குங்கள். சுற்றியுள்ளவர்களை சிரிக்க வையுங்கள். புன்னகை செய்யுங்கள். அன்பை உருவாக்குங்கள். சமாதானம் செய்யுங்கள். நீங்கள் நேசிப்பவர்களிடம் நேசத்தை சொல்லுங்கள் . மகிழ்ச்சியாயிருங்கள், எந்த கவலையும் எதையும் மாற்றப்போவதில்லை. தெய்வ வழிபாட்டை விட்டு விடாதீர்கள் *யாரையும் எக்காரணத்திற்கும் இழக்காதீ
- Get link
- X
- Other Apps
👆கோளறு பதிகம் மகான் திருஞானசம்பந்தர் அருளிய கோளறு பதிகத்தின் பாடல்களைப் தினமும் பாராயணம் செய்து, கிரக தோஷங்களில் இருந்தும் கொடிய நோயின் பிடியிலிருந்தும் விடுபடலாம். இன்றைய சூழ்நிலையில் நோயின்றி வாழ புறத்தூய்மையுடன் சைவநெறியையும், அகத்தூய்மையையும் கடைப்பிடித்து ஞானிகளை வழிபாடு செய்து வரவேண்டும். திருச்சிற்றம்பலம் வேயுறு தோளி பங்கன்விடமுண்ட கண்டன் மிகநல்ல வீணை தடவி மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால் ஞாயிறுதிங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனிபாம் பிரண்டு முடனே ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே. என்பொடு கொம்பொடாமை இவைமார்பிலங்க எருதேறி யேழை யுடனே பொன்பொதி மத்த மாலை புனல்சூடி வந்து என் உளமே புகுந்த அதனால் ஒன்பதொடு ஒன்றொடு ஏழு பதினெட்டொ டுஆறும் உடனாய நாள்கள் அவைதாம் அன்பொடு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே. உருவளர் பவளமேனி ஒளிநீ றணிந்து உமையோடும் வெள்ளைவிடைமேல் முருகலர் கொன்றை திங்கள் முடிமேலணிந்து என் உளமே புகுந்த அதனால் திருமகள் கலைய தூர்தி செயமாது பூமி திசை தெய்வமான பலவும் அறநெறி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.
- Get link
- X
- Other Apps
💚🌸 *#எது_சொர்க்கம்* 💚🌸 *இறைவன் ஒருநாள் நரகத்திற்குப் போனார். பெரிய பெரிய பாத்திரங்களில் சர்க்கரைப் பொங்கலை ஏலக்காயும் சாதிக்காயும் பச்சைக் கற்பூரமும் குங்கும பூவும் மணக்க நெய் ததும்பக் கொண்டுபோய் வைத்தார்.* 💚🌸 *இதை எல்லோரும் வேண்டிய மட்டிலும் உண்ணலாம்.* 💚🌸 *ஒரே ஒரு நிபந்தனை, கையை மடக்காமல் உண்ண வேண்டும். மாலையில் வருவேன். அதற்குள் உண்டு முடியுங்கள் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.* 💚🌸 *அதேபோல சொர்க்கத்திலும் கொண்டுபோய் வைத்தார்.* 💚🌸 *நரக / அசுர வாசிகள் எவ்வாறு உண்பது என்று வேறே வழிகளை யோசிக்காது.* *உண்ணாமலே இருந்துவிட்டனர்.* 💚🌸 *சர்க்கரைப் பொங்கல் அப்படியே இருந்தது, ஒரு சிறிதும் செலவாகமலே,* 💚🌸 *ஆனால்,* *சொர்க்கவாசிகளோ முழுவதையும் சாப்பிட்டு முடித்துப் பாத்திரங்களைக் கழுவிக் கவிழ்த்து வைத்திருந்தனர்.* 💚🌸 *நரகவாசிகளை அழைத்துக்கொண்டு சிவபெருமான் சொர்க்கத்திற்குப் போனார்.* 💚🌸 *சொர்க்கவாசிகளிடம் எவ்வாறு கையை மடக்காமல் சாப்பிட்டீர்கள்? என்று கேட்டார்.* 💚🌸 *அவர்கள் சொன்னார்கள்.* 💚🌸 *நான் எடுத்து அருகிலிருப்பவருக்கு ஊட்டினேன்.* *அவர் எடுத்து எனக்கு ஊட்டினார். இவ்வாற
- Get link
- X
- Other Apps
புண்ணியம் செய்தவர் மட்டுமே உலகிலேயே அழகு ததும்பி வழியும் இந்த நடராஜரை தரிசித்து மகிழும் பாக்கியம் பெற முடியும்…! 🙏🙏 🍁உலகிலேயே அழகான நடராஜர் வீற்றிருக்கும் கோனேரிராஜபுரம். 🍁அந்த சிற்பி, ஆறாவது முறையாக நடராஜப் பெருமாள் திருவுருவத்திற்கு அச்சு செய்து பஞ்ச உலோகங்களை தனியே காய்ச்சி வார்த்துக் கொண்டிருந்தான். 🍁பெரிய திருவாச்சியை தனியே வார்த்தாகி விட்டது. 🍁சிவனுக்குரிய சடையை, அந்த சடையில் இருக்கும் நாகத்தை கங்கை உருவத்தை வார்த்தாகிவிட்டது. 🍁சிவகாமிக்கும், நடராஜருக்கும் தனித்தனியே பீடம் செய்து முடித்தாகி விட்டது. 🍁இப்போது நடராஜரையும், சிவகாமியையும் வார்க்க வேண்டும். 🍁மழு தொலைவே கொதித்துக் கொண்டிருக்கிறது. அவன் அடுப்பைத் துருத்தியால் வேகமாக ஊதி உலையின் தீவிரத்தை அதிகப்படுத்தி மழுவைக் கொதிக்க வைத்துக் கொண்டிருந்தான். மழு தயார் நிலையில் இருந்தது. 🍁திரும்பி மனைவியைப் பார்த்து துவங்கி விடட்டுமா? என்று கேட்டான். மனைவி சரியென்று தலையசைத்தாள். 🍁படுக்க வைக்கப்பட்ட பெரிய களிமண் அச்சுக்கு முன் கைகூப்பி நின்றான். 🍁 இது ஆறாவது முறை. என்ன தவறு செய்தேன் என்று தெரியவில்லை. ஒவ்வொரு முறையும் ஏதேனும
- Get link
- X
- Other Apps
சந்தோஷத்திற்காக காத்திருக்காதீர்கள். சந்தோஷத்தை நீங்களே உருவாக்குங்கள். இரவானதும் விளக்குகளை எரியவிடுகிறோம். காரணம், இருட்டோடு வாழ்வது நமக்குப் பிடிப்பது இல்லை. அதேபோல், அன்றாடம் வீட்டில் சந்தோஷத்தை ஒளிரவிடுகிறோமா?? சந்தோஷத்தை ஏற்படுத்தித் தருவது எளிதானது இல்லை. ஒரு சிலரே, தன்னைச் சுற்றிலும் வெளிச்சத்தைப் போல சந்தோஷத்தைப் பரவவிடுகிறார்கள். பணம் தருவது, உணவு தருவது, உடை தருவது, பரிசுப் பொருட்களை வாங்கித் தருவது… இவைதான் சந்தோஷத்தின் அடையாளமாக உள்ளன. ஆனால், இவற்றைவிடவும் மேலான சந்தோஷங்கள் உலகில் நிறையவே இருக்கின்றன. அந்த சந்தோஷங்களை உருவாக்கிக்கொள்ள பணமோ, பரிசோ தேவையில்லை. சொற்களே போதுமானது! உலகில் அதிகமானோர் சந்தோஷப்படுவது பாராட்டு சொற்களால்தான். அதுவும் மனம் நிறைய யாராவது பாராட்டும்போது ஒருவர் அடையும் சந்தோஷத்துக்கு நிகரே இல்லை. சீனாவின் பழங்கதை ஒன்று இதைப் பற்றிப் பேசுகிறது. அந்தக் காலங்களில் உறைவிடப் பள்ளி ஆசிரியர்கள் வருஷத்துக்கு ஒருமுறை மட்டுமே வீடு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். அதுவும் குறிப்பாக புத்தாண்டு தொடங்கும்போது 10 நாட்கள் அவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படும். அப்போது சிறப்
- Get link
- X
- Other Apps
நாளை(14-5-2021)அட்சய திருதியை அன்று என்ன செய்ய வேண்டும்? 1. அட்சய திருதியை அன்று அதிகாலையில் நீராடி ஸ்ரீமந்த் நாராயணனின் நாமங்களை சொல்லி புதிய செயல்களை தொடங்க வேண்டும். 2. குழந்தைகளுக்கு கல்வி கொடுக்கும் அட்சராயப்பியாசம் செய்யும் சடங்கு 'அட்சய திருதியை' நாளில் செய்யப்படு கிறது. 3. மகாலட்சுமி திருமாள் மார்பில் நீங்காமல் இருப்பதற்காக அட்சய திருதியை தினத்தன்றுதான் சிறப்பு வரம் பெற்றாள். 4. கும்பகோணம் பட்டீஸ்வரர் அருகில் உள்ள முழைநர் ஸ்ரீபரசுநாதர் கோவிலில் அட்சய திருதியை தினத்தன்று சிவபெருமானுக்கு காசு மாலை அணிவித்து குபேர பூஜை நடத்துவார்கள். அப்போது சிவனை தரிசித்தால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. 5. தமிழ்நாட்டில் அட்சய திருதியை விழா திருப்பரங்குன்றம், திருச்சோற்றுத்துறை விளங்குளம் கோவில்களில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 6. அட்ச திருதியை தினத்தில் செய்யப்படும் பித்ரு தர்ப்பணம் பல தலைமுறைக்கு முந்தைய நமது மூதாதையர்களுக்கும் போய் சேரும் என்பது ஐதீகம். எனவே அட்சய திருயை தினத்தன்று செய்யப்படும் பித்ருகடன் மிகமுக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 7. வாசுதேவரை வணங்கி அன்னதானம்
- Get link
- X
- Other Apps
A heartening post. The trend to dismiss old fashioned honesty, ethics, as naivety and lack of smartness, is the reason for lack of moral values in the current world. Educational institutions concentrate on how to make children 'future ready' without taking care of instilling basic values. Sharing a post which brought a lot of hope. ************************** Fourth Leg of Righteousness by Jayanthi Prakash Sarma (Translated by Dr Suguna Kannan) It was early morning when my wife and I boarded the Janmabhoomi train at Visakhapatnam station to attend my friend’s daughter’s wedding at Rajahmundry. The early morning breeze and the train’s rocking movement were soporific and we dozed off until the train halted at Tuni. I hailed a passing vendor and asked for two cups of coffee. I handed over one cup to my wife and took a sip. I complimented him on the coffee and asked, “How much?” as I opened my wallet to find that it had only 200-rupee notes. Hearing his response of twenty rupees,
- Get link
- X
- Other Apps
*அது ஒரு பொற்காலம்!!!* *அத்தை !* *அப்பாவின் உடன் பிறப்பு* எப்படா கோடை விடுமுறை என்று ஏங்கித் தவித்த காலம் உண்டு. இப்போது ஏண்டா கோடைவிடுமுறை வருகிறது என்று பொங்கிக் கலங்குகிற காலமாகிவிட்டது. கோடை காலம் வந்தால், கூடவே விடுமுறையும் வரும். மார்ச் மாத நடுவில், ஊரில் இருந்து அத்தையும் தாத்தாவும் விடுமுறைக்கு குழந்தைகளை விடச் சொல்லி கடிதம் எழுதிப்போட்டிருப்பார்கள். அத்தை வீட்டுக்குப் போவதா, தாத்தா வீட்டுக்குப் போவதா என்று பெற்றோர் குழம்பித் தவிப்பார்கள். *குழந்தைகள், அத்தை வீட்டுக்கும் போறோம், தாத்தா வீட்டுக்கும் போறோம். அங்கே கொஞ்ச நாள். இங்கே கொஞ்சநாள்... என்று சொல்வார்கள்.* *உலகின் அத்தைகள், இன்னொரு அம்மாக்கள். ‘என் அண்ணோவோட புள்ள, என் தம்பியோட பொண்ணு’ என்றெல்லாம் கொண்டாடித் தீர்த்துவிடுவார்கள்.* இத்தனாம்தேதி குழந்தைகளுடன் வருகிறோம் என்று கடிதம் கைக்கு வந்ததுமே அத்தைகளுக்கு றெக்கையே முளைத்துவிடும். தெருவுக்கே சொல்லிவிடுவார்கள். எப்போதும் அம்மாவின் முந்தானையைப் பிடித்துக்கொண்டே வலம் வரும் குழந்தைகள், அப்பாவைக் கட்டிக்கொண்டே தூங்கிப் பழகிய குழந்தைகள், அத்தை வீட்டுக்குள் நுழைந்ததும்,