Posts

Showing posts from June, 2020

Spread the Positivity

Spread the Positivity Imagine you were born in 1900. When you're 14, World War I begins and ends when you're 18 with 22 million dead. Soon after a global pandemic, the Spanish Flu, appears, killing 50 million people. And you're alive and 20 years old. When you're 29 you survive the global economic crisis that started with the collapse of the New York Stock Exchange, causing inflation, unemployment and famine. When you're 33 years old the nazis come to power. When you're 39, World War II begins and ends when you're 45 years old with a 60 million dead. In the Holocaust 6 million Jews die. When you're 52, the Korean War begins. When you're 64, the Vietnam War begins and ends when you're 75. A child born in 1985 thinks his grandparents have no idea how difficult life is, but they have survived several wars and catastrophes. Today we have all the comforts in a new world, amid a new pandemic. But we complain because we need to wear masks. We...

அப்பா ஒரு வரம்

அப்பா . . . . உங்கள் திசையில் காத்திருக்கிறோம். மிஸ்டர் வேம்பு. எழுபது வயது தாத்தா. பூங்காவில் ஒரு பெஞ்சில் அமர்ந்திருக்கிறார். பக்கத்தில் குழந்தைகள் விளையாடும் சத்தம். மரத்தில் பறவைகள் கத்தும் சத்தம். இந்த சூழலை ரசித்துக் கொண்டிருந்தார் மிஸ்டர் வேம்பு. வாழ்க்கையில் இனி ஓடி ஒளிய முடியாமல், பழைய நினைவுகளை உயர்த்திப் பிடித்து அசைபோடும் நிலை அது. அதே பெஞ்சில் அவருடன் அமர்ந்திருந்த நண்பர்கள் யாரும் தற்போது உயிரோடு இல்லை. அந்த சமயத்தில் ஒருவர் வேம்புவின் பக்கத்தில் அமர்கிறார். ‘மிஸ்டர் வேம்பு! நான் தான் கடவுள். உங்களுக்கு ஆசை ஏதாவது இருந்தால் சொல்லுங்கள் நிறைவேற்றுகிறேன்', என்றார் கடவுள். ஆச்சர்யப்பட்டார் வேம்பு. யோசித்தார். பிறகு பேசினார். ‘கடவுளே! என் அப்பாவை பார்க்க வேண்டும். அவரை என் முன் கொண்டு வந்து நிறுத்திவீர்களா?' என்று கேட்டார் வேம்பு. ‘மிஸ்டர் வேம்பு! நீங்களே தாத்தாவாகி பல வருஷங்கள் ஆயிடுச்சு. இன்னமும் உங்கள் அப்பாவை பார்க்கும் ஆசை இருக்கிறதா?' என்று கேட்டார் கடவுள். ‘கடவுளே! ஆம். அவருக்கு நிகர் யாருமில்லை', என்றார் வேம்பு. ‘அப்ப...

மாட்டேன் - சிறுகதை

மாட்டேன் ! ( சிறு கதை ) 1958 அம்மா ! இதென்னம்மா பேரு ? புவனேஸ்வரின்னு ? ஸ்கூல்ல எல்லாம் சிரிக்கிறா, மீனா , கமலான்னு எத்தனை சின்ன பேரெல்லாம் இருக்கு. அதெல்லாம் விட்டுவிட்டு இவ்வளோ பெரிய பேரு. எடு கட்டய. ஏழு வயசு ஆகல . அதுக்குள்ள பேச்ச பாரு ! பாட்டி காதுல விழுந்தா துடப்பம் பிஞ்சுடும். போயி பாடத்த படி. 1963. அம்மா.ப்ளீஸ். ஒத்த பின்னல் வேண்டாமா. இரட்டை ஜடை போடும்மா. மாமி மாதிரி ஒத்த பின்னல். அதுல சாயம் போன ரிப்பன். அவமானமா இருக்குமா .ப்ளீஸ் .. என்னடி ஸ்டைல் வேணுமா இருக்கு. இரட்டை ஜடயாம். மண்ணாங்கட்டியாம். முன்னால போட்டுண்டு மினுக்கணுமாக்கும். போய்ப் பாரு அலமுவ. ஒன் வயசுதானே. எதாவது பேசராளான்னு. அவளப் பார்த்து கத்துக்கோ. வந்து சேர்ந்தயே எனக்குன்னு எங்கேயிருந்தோ. ...... 1965. அப்பா. ப்ளீஸ் படிக்கரேம்பா. நாந்தான் ஸ்கூல் ஃபர்ஸ்ட் . ஸ்காலர்ஷிப் கூட கிடைக்கும். என்ன படிக்கிறயா . அதெல்லாம...

Kallanai Anjaneyar

கல்லணை ஆஞ்சநேயர்! கதையல்ல நிஜம்!! தஞ்சை மாவட்டத்தின் பெரிய கல்லணையின் பத்தொன்பதாவது மதகின் ஒரு புறம் மதில் சுவரால் ஏறக்குறைய மறைந்த நிலையில் காணப்படுவது ஓர் ஆஞ்சநேயரின் கற்சிற்பம். ஓர் ஆராய்ச்சியின் மூலம் இந்த இடத்திலுள்ள இச்சிறு கோயிலின் சரித்திரம் நமக்கு விளங்கும். சங்க காலச் சோழ மன்னர் கரிகால் பெருவளத்தான் காவேரி கொள்ளிடம் நீர் போக்கைச் சரி செய்து நீர் பாசனத்தைச் சீரமைக்க காவேரியின் மீது ஓர் அணை கட்டினார். இந்த அணை நவீன தொழில் நுட்பத்திற்குச் சவாலாக அமைந்துள்ளது. இதன் கட்டுமானத்தைக் கண்டு வியந்த ஆங்கிலேயர்கள் இதை கிராண்ட் அனிக்கட் என்று பாராட்டினர். இக்கட்டுமானம் களிமண்ணில் புதைந்த மிகப் பெரிய பாறாங்கற்களால் ஆனது இதன் நீளம் 1080 அடி, அகலம் 66 அடி மற்றும் ஆழம் 15 லிருந்து 18 அடிவரை கொண்டது. இது நதி நீர் வெளியேறும் பகுதியில் பாம்பு போல் வளைந்த நிலையில் கட்டப்பட்டது. தற்போதுள்ள பெரிய கல்லணை 1806 இல் ஆங்கிலேய பொறியாளர்களால் நிர்மாணிக்கப்பட்டது. பல வருடங்களாக நடந்த மிகப் பெரிய முயற்சியின் காரணமாக அடித்தளம் அமைத்து அணையின் பாதைகள் உயர்த்தப்பட்டு சாலைவசதி ஏற்படுத்தித் தந்தனர். இப...

ராஜாவின் உடை

ஞாயிறு கதை. அரண்மனையை ஒட்டி வசித்த பிச்சைக்காரன் ஒருவன், அந்த அரண்மனைக் கதவில் ஒட்டப்பட்டிருந்த அறிவிப்பைக் கண்டான். அதில், மன்னர் விருந்தளிக்கப் போவதாகவும், அரச உடை அணிந்து வருவோர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. பிச்சைக்காரன், தான் அணிந்திருந்த கந்தல் உடைகளை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்துக்கொண்டான். நிச்சயமாக அரசரும், அவருடைய குடும்பத்தினரும் மட்டுமே ராஜ உடை உடுத்தியிருக்க முடியும் என எண்ணினான். திடீரென அவனுக்குள் ஓர் எண்ணம்... அந்த மாதிரி எண்ணுகிற அளவுக்குத் தனக்குள் ஏற்பட்ட துணிச்சலைப் பற்றி யோசித்த போதே, அவனுக்குள் நடுக்கம் ஏற்பட்டது. இருந்தாலும், தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, அரண்மனை வாசலை அடைந்தான். வாயிற்காவலனிடம், ''ராஜாவைப் பார்க்க வேண்டும்'' என்றான். அந்தக் காவலன், அரசரிடம் அனுமதி வாங்கி வந்தான். உள்ளே வந்த பிச்சைக்காரனிடம், ''என்னைப் பார்க்கவேண்டும் என்றாயாமே?'' என்றார் அரசர். ''ஆமாம்! நீங்கள் அளிக்கும் விருந்தில் கலந்துகொள்ள எனக்கும் ஆசை. ஆனால், என்னிடம் ராஜ உடைகள் இல்லை. என்னை அதிகப்பிரசங்கி எ...

Keep Your Fork - A Touching Story

Keep your fork - very touching* There was a young woman who had been diagnosed with a terminal illness and had been given three months to live. So as she was getting her things 'in order,' she contacted her Pastor and had him come to her house to discuss certain aspects of her final wishes. She told him which songs she wanted sung at the service, what scriptures she would like read, and what outfit she wanted to be buried in. Everything was in order and the Pastor was preparing to leave when the young woman suddenly remembered something very important to her. 'There's one more thing,' she said excitedly.. 'What's that?' came the Pastor's reply? 'This is very important,' the young woman continued. 'I want to be buried with a fork in my Right hand.' The Pastor stood looking at the young woman, not knowing quite what to say. That surprises you, doesn't it?' the young woman asked. 'Well, to be honest, I'm puzzled by the r...

Corona Jokes

*கொரோனா கால திருமண வைபவம்* பெண் பார்க்கும் படலம் *** என்னடா, பொண்ண நல்லா பாத்தியா? அப்புறம், அது சரியில்ல, இது சரியில்லன்னு சொல்லக்கூடாது. ஆமா, இங்க தெரியறதே கண்ணு மட்டும் தான். மாஸ்க்கை எடுக்க சொல்லுங்கப்பா. *** இங்க உட்கார்ந்திருக்கிறவங்களில் யாரு மாப்பிள்ளைன்னு பொண்ணுக்கு தெரியலையாம். மாப்பிள்ளை பையன் எந்த கலர் மாஸ்க் போட்டுருக்கார்னு சொன்னா சௌகரியமா இருக்கும். *** என்னடா இது உன்னோட கல்யாண பத்திரிகைல மாஸ்க் குமார் வெட்ஸ் மாஸ்க் ப்ரீதா ன்னு ப்ரிண்ட் பண்ணியிருக்கு? என்ன பண்றது? கல்யாணத்துக்கு பர்மிஷன் அப்பதான் கிடைக்குமாம். **** இந்த புடவை கடைல கல்யாண புடவை வாங்கறவங்களுக்கு புடவைக்கு மேட்சா நாலு பட்டு மாஸ்க்கு ஃப்ரீயாம். இங்கயே வாங்கிடலாம்பா. அப்படியே மாப்பிள்ளை பட்டு வேஷ்டிக்கும் மாஸ்க் இருக்கான்னு கேளு. இல்லாட்டி அங்க வஸ்திரத்தை கிழிச்சு தைக்க வேண்டியிருக்கும். **** மனைவி : என்னங்க, நம்ம பொண்ணு கல்யாணத்திற்காக நகை சீட்டு கட்டியிருந்தோம் இல்ல, அதுக்கு குலுக்கல்ல வெள்ளி மாஸ்க் ப்ரைஸ் கிடச்சிருக்கு. சீர் வரிசைல இத பாத்து எல்லாரும் மூக்கு மேல விரல் வைக்க போறாங்க! க...

Think Differently!

*வித்தியாசமாக சிந்தியுங்கள் !* *சில சிறிய மாற்றங்களால் பெரிய விளைவுகளை ஏற்படுத்த முடியுமா* என்று யோசியுங்கள். முன்னொரு காலத்தில் சீனாவில் ஒரு பெரிய வியாபாரி தனக்குப் பின் வியாபாரத்தை தன் மூன்று மகன்களில் யார் வசம் ஒப்படைப்பது என்று தீர்மானிக்க அவர்களுக்கு ஒரு போட்டி வைத்தான். யார் அதிக அளவு சீப்புகளை புத்த மடாலயத்திற்கு விற்கிறார்களோ அவன் தான் தன் வியாபாரத்தை நிர்வகிக்கத் தகுதியானவன் என்று அறிவித்தான். மொட்டை அடித்துள்ள புத்த பிக்குகளிடம் சீப்பு வியாபாரமா என்று மகன்கள் மூவரும் ஆரம்பத்தில் திகைத்தனர். ஒரு சீப்பைக் கூட விற்க முடியாதே என்று நினைத்தனர். ஆனால் பின் மூவரும் முயற்சி எடுப்பது என்று முடிவு செய்தனர். அவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த சில நாட்கள் அவகாசம் கொடுத்த அந்த வியாபாரி அது முடிந்தவுடன் மகன்களை அழைத்து அவர்கள் எந்த அளவு வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்று கேட்டான். ஓரு மகன் சொன்னான், “நான் இரண்டு சீப்புகள் புத்த மடாலயத்திற்கு விற்றேன்” வியாபாரி கேட்டான். “எப்படி?” “புத்த பிக்குகளிடம் இந்த சீப்பை முதுகு சொறியவும் உபயோகிக்கலாம் என்று சொல்லிப் பார்த்தேன். இரண்டு புத்த...

Beautiful Story

அருமையான குட்டி கதை அவசியம் படியுங்கள்...... சிந்தித்து செயலாற்றுங்கள்..... ஐந்து வயது சிறுமி தன் அம்மாவுடன் சூப்பர் மார்க்கெட் சென்றிருந்தாள். அங்கே ஒரு முத்துமாலையை பார்த்தாள். அது வேண்டுமென தன் தாயிடம் அடம்பிடித்தாள். “இது அழகா இருக்கு, ஆனால் விலை அதிகமா இருக்கே தவிர இது தரமில்லாத ப்ளாஸ்டிக் மாலை" என்றாள் தாய்... நான் உன்னோட பிறந்தநாளைக்கு அப்பாகிட்ட சொல்லி 'ரியலான ஒரிஜினல் பியர்ள்ஸ்' மாலை வாங்கி தரசொல்றேன்... இது வேண்டாம்மா" என்றாள் தாய்..... ஆனால் அச் சிறுமி, அழுது பிடிவாதம் செய்து அந்த ப்ளாஸ்டிக் முத்துமாலையை வாங்கிக் கொண்டாள்... அந்த சிறுமிக்கு அந்த முத்துமாலை மிகவும் ஃபேவரெட் ஆன பொருளாகிப்போனது.... அதை எங்கு சென்றாலும் அணிந்திருந்தாள் உடன் வைத்திருந்தாள். பள்ளிக்கு செல்லும்போதும், நண்பர்களுடன் விளையாடும்போதும், ஏன் படுக்கும்போது கூட உடன் கழுத்தில் போட்டிருந்தாள். பிளாஸ்டிக் மாலையை கழுத்திலேயே போட்டிருந்தாள் அலர்ஜியால் கழுத்து நிறம் மாறி விடும் என என்னென்னவோ தாய் சொல்லியும் கூட கேட்கவில்லை. எப்போதும் அதைப் பிரிய மனமில்லை அவளுக்கு. ... அச்சிறுமிய...

Panduranga - For A Devotee!

பக்தனுக்காக சமையல்காரனாக_மாறிய பாண்டுரங்கன் அது கல்யாண வீடு என்பதற்கு வாசலில் இருந்த இரண்டு வாழை மரங்களே சாட்சியாக நின்றிருந்தன. வேறு எந்த ஆர்ப்பரிப்பும் அங்கு இல்லை. ஆடம்பரமாக திருமணத்தை நடத்த அது ஒன்றும் பணக்காரரின் வீடும் அல்ல, ஏதோ ஒரு தொழில் செய்து அதன் மூலம் வரும் வருமானத்தை வைத்து பிழைக்கும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவரின் வீடும் அல்ல. தனக்கும், தன் மனைவி மற்றும் மகளுக்கும் தேவையான உணவை, தினமும் உஞ்ச விருத்தி எடுத்து சாப்பிட்டு வரும், பாண்டுரங்கனின் பரம பக்தன் நீளோபாவின் வீடு. பிம்பளம் என்ற அழகிய நகரத்தின் நடுவே அமைந்திருந்த நீளோபாவின் வீட்டில்தான் திருமண நிகழ்ச்சி. திருமண ஏற்பாடு அழகு இருந்தும், பணம் இல்லாததால் தன் மகளுக்கு திருமணம் நடைபெறுமா? என்ற கவலையில் தவித்து வந்தார் நீளோபாவின் மனைவி. ஆனால் ‘எல்லாம் இறைவனுக்குத் தெரியும். அவன் பார்த்துக் கொள்வான்’ என்று அவன்மேல் பாரத்தைப் போட்டு விட்டு, பகவானின் பதத்தை பணிவதிலேயே தன் காலத்தைக் கழித்து வந்தார் நீளோபா. இந்த நிலையில் நீளோபா புதல்வியின் அழகில் மயங்கிய வாலிபன் ஒருவன், அவளை மணம் செய்து கொள்ள வலிய வந்தான். அவனும் ஏழைதான...

Jokes - Funny Definitions

Wonderful Definitions*🤣 *School* A place where Parents pay and children play *Life Insurance* A contract that keeps you poor all your life so that you can die Rich. *Nurse*: A person who wakes u up to give you sleeping pills. *Marriage* It's an agreement in which a man loses his bachelor degree and a woman gains her masters.. *Tears* The hydraulic force by which masculine willpower is defeated by feminine waterpower. *Lecture* An art of transferring information from the notes of the Lecturer to the notes of the students without passing through "the minds of either" *Conference* The confusion of one man multiplied by the number present. *Conference Room* A place where everybody talks, nobody listens and everybody disagrees later on *Father* A banker provided by nature *Criminal* A person no different from the rest ....except that he/she got caught *Boss* Someone who is early when you are late and late when you are early *Politician* One who shakes your ...

Lockdown Joke

கவலையை மறந்து கொஞ்சம் சிரிங்க! “ஏங்க! துவரம் பருப்பு தீர்ந்து போச்சு!” “அதுக்குள்ளயா! போன வாரந்தானே மளிகை சாமான் வாங்கிட்டு வந்தோம்!” “நம்ம வீட்டிலே இன்னும் ஆறு லாக் டவுனுக்கு தேவையான சாமான் இருக்கு! கிச்சன்ல இருக்கிற டப்பா காலியாயிடுச்சு! ஸ்டோர் ரூமிலிருந்து எடுத்துட்டு வாங்க!” ஸ்டோர் ரூமில் எங்கே காலை வைப்பது என்று தடுமாறினேன். இரண்டு மூன்று அட்டைப் பெட்டிகளை திறந்து தலைகீழாகப் புரட்டி ஒரு வழியாக பருப்பு பாக்கெட்டை எடுத்து வந்தேன். “இது கடலைப் பருப்பு! இதை எடுத்த இடத்திலேயே வச்சுட்டு துவரம் பருப்பை எடுத்துட்டு வாங்க! இது அரை கிலோ பாக்கெட்! துவரம் பருப்பு ஒரு கிலோ பாக்கெட்! நல்ல வேளை, பாசிப் பருப்பை எடுத்துட்டு வராம போனீங்களே!” கண்ணாடி போடாமல் போயிருந்தால் அதைத் தான் எடுத்துக் கொண்டு வந்திருப்பேன். இந்த முறை பாக்கெட்டை ஒரு ஓரத்தில் பல்லால் கடித்து பிய்த்து விட்டு (கத்திரி எடுக்கப் போனா அவ பிச்சிடுவாளே!) ஒரு பருப்பை வாயில் மென்று துவரம் பருப்பு என்பதை உறுதி செய்து கொண்டு, கொண்டு போனேன். “இந்த பாக்கெட்டை எந்த பெட்டியிலிருந்து எடுத்துட்டு வந்தீங்க?” “இது து.பருப்பு தானே?” “அது...

Dharma

🔯*தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்*🔯 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚 தசரதன் ஒரு பிள்ளையை வேண்டினார். ஆனால், அவருக்கு நான்கு பிள்ளைகள் பிறந்தன. இது ஏனென்று உங்களுக்குத் தெரியுமா? 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 தர்மம் நான்கு வகைப்படும். அதில் முதலாவது 🦚*சாமான்ய தர்மம்.*🦚 🦚பிள்ளைகள் பெற்றோரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? சீடன் குருவிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? கணவன் மனைவியிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? இத்தகைய சாமான்ய தர்மங்களைத் தானே பின்பற்றி எடுத்துக் காட்டினான்🙏🌹 இராமர்.🌹🙏 இரண்டாவது🦚 *சேஷ தர்மம்.*🦚 சாமானிய தர்மங்களை, ஒழுங்காகச் செய்து கொண்டு வந்தால், கடைசியில் ஒரு நிலை வரும். அந்த நிலையில் பகவானுடைய பாதங்களைத் தவிர, வேறு ஒன்றும் சதம் அல்ல என்ற நினைப்பு ஏற்படும். இத்தகைய தர்மத்துக்கு🌹 சேஷ தர்மம் 🌹என்று பெயர். இதைப் பின்பற்றிக் காட்டினான் 🌹🙏இலட்சுமணன்.🌹🙏 மூன்றாவது 🦚*விசேஷ தர்மம்.*🦚 தூரத்தில் இருந்து கொண்டே, எப்போதும் பகவானின் சிந்தனையாகவே இருப்பது 🌹விசேஷ தர்மம். 🌹இது சேஷ தர்மத்தைக் காட்டிலும் கடினமானது. இதைக் கடைப்பிடித்துக் காட்டியவன் 🌹🙏பரதன்.🌹🙏 நான்காவது ...

Dedicated to all Upma Lovers!

Dedicated to all upma lovers! சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா? நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்படலாம். பொருளில்தான் குற்றமிருக்கிறது. சிவன் : என்ன குற்றம் கண்டீர்? நக்கீரர் : எங்கே தாங்கள் இயற்றிய செய்யுளைச் சொல்லும்? சிவன் : தின்பதோ வாழ்க்கை வேலை வேறில்லை தம்பி ஓமம் சேர்க்காமல் கண்டதும் உளதே கடுகும், பருப்பும், மிளகாயும் சேர்த்து எண்ணெயில் தாளித்த பாவையே! இதை விடுத்து வேறுண்டோ நீயறியும் ரவா உப்புமாவே! நக்கீரர் : இப்பாட்டின் உட்பொருள்? சிவன் : நாடார் கடையில் உள்ள மளிகைப் பொருட்களை எல்லாம் வரிசையாக வாங்கிக் குவிக்கும் பெண்ணே! நீ கண்ட பொருட்களில் ரவாவைப்போல் வேறு அரியவகைப் பொருள் உண்டோ! அதில் நீ செய்த ரவா உப்புமாவிற்குத்தான் ஈடு இணை உண்டோ? என்பதே இதன் பொருள். நக்கீரர் : இப்பாட்டிலிருந்து எம்மன்னருக்குத் தாங்கள் கூறும் முடிவு? சிவன் : ஹஹஹா! புரியவில்லை? பெண்களுக்கு இயற்கையிலேயே ரவா உப்புமா செய்யும் ஆற்றல் உண்டு என்பதுதான் நான் கூறும் முடிவு. நக்கீரர் : ஒருக்காலும் இருக்க முடியாது. அன்னையிடம் ச...

உலகின் சிறந்த பொருளாதாரம்

உலகின் #சிறந்தபொருளாதாரம் எது என்று தெரியுமா *ஒரு பனை ஓலைக் குடிசை...!!!* *உள்ளே நான்கைந்து சட்டி பானை...* *வெளியே ஒரு விசுவாசமான நாய்.* *பால் கறக்கும் இரண்டு பசுமாடு...* *இரண்டு உழவு எருதுகள்..ஒரு ஏர்...* இரண்டு மண்வெட்டி... பத்து ஆடுகள்... ஒரு சேவல்... ஐந்து கோழி...+30 குஞ்சுகள்... *ஐந்து ஏக்கர் நிலம்.... அதிலொரு கிணறு....* *சுற்றிலும் பத்து தென்னை மரங்கள்.* தென்னை மரத்தடியில் ஒரு முருங்கை மரத்தோடு, ஒரு கருவேப்பிலை மரமும்... பக்கத்தில் பத்து வாழைமரம்...! அடுத்து ஒரு புளியமரம்...!!! பிரண்டைக் கொடியும் தூதுவளையும் படர்ந்த ஒரு அகத்தி மரம்...!!! விளைநிலத்தின் ஓரத்தில் ஆங்காங்கே தானாகவே ஏராளமாய் வளரும் கீ்ரைச்செடிகளும்... மண் சட்டி கழுவும் இடத்தில் நாலைந்து மிளகாய் செடிகளும்...!!!!! மீதமுள்ள விளைநிலத்தில் விளையும் கம்பும்...சோளமும்... கேழ்வரகும்...தானியக் குதிருக்குள் சேமிக்கப்படும். இவை மட்டுமே போதும்... *எவனையும் எதிர்பாராமல் உலகின் மிக அழகிய வாழ்வை நூறாண்டுகள் ஓர் பேரரசனைப் போல் நலமோடு அமைதியாய் வாழ்ந்து அனுபவிக்க.....* Source :Whatsapp Forward

Cause of Death at Night

இரவு நேரத்தில் கவனம்! இனியவர்களே! வீட்டை பரிசோதிக்கவோ, அல்லது சிறுநீர் கழிக்கவோ, இரவில் எழுந்திருக்கும் ஒவ்வொரு நபரும் மூன்றரை நிமிடங்கள் கவனிக்க வேண்டும். எப்போதும் ஆரோக்கியமாக இருக்கும் ஒருவர் ஒரு நாள் இரவில் திடீரென காலமானார். "நேற்று, நான் அவருடன் பேசிக் கொண்டிருந்தேன், நல்லாத்தானே இருந்தார்! அவர் ஏன் திடீரென்று இறந்தார்?" காரணம்......? நீங்கள் கழிப்பறைக்குச் செல்ல இரவில் எழுந்தவுடன், அது பெரும்பாலும் விரைவாக நடக்கும். நீங்கள் உடனடியாக படுக்கையில் இருந்து குதித்து எழும் போது, மூளைக்கு இரத்த ஓட்டம் இருக்காது. "மூன்றரை நிமிடங்கள்" ஏன் மிகவும் முக்கியம்? நள்ளிரவில், சிறுநீர் கழிக்கும் ஆசை உங்களை எழுப்பும்போது, ​​ திடீரென்று எழுந்ததன் மூலம், மூளை இரத்த சோகையாக இருக்கும், மேலும் இது இரத்தம் இல்லாததால் இதய செயலிழப்பை ஏற்படுத்துகிறது. மூன்று நிமிடங்கள் மற்றும் ஒன்றரை நிமிடங்கள் பயிற்சி செய்வது நல்லது, அவை யாதெனில்?: 1. நீங்கள் எழுந்ததும், ஒன்றரை நிமிடம் படுக்கையில் இருங்கள். 2. அடுத்த அரை நிமிடத்தில் படுக்கையில் உட்கார்ந்து கொள்ளுங்கள்; 3. உங்கள் கால்களைக் கு...

அனுபவ அறிவு

*ஏன்டா, சளி பிடிச்சிருக்கா? சரியாத் தூங்கலையா? குரல் கம்முது! என்று கேட்டுப் பதறும் நம் அம்மாக்கள், எந்தப் பல்கலைக்கழகத்திலும் எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்றிருக்கவில்லை* வானம் வடக்கே கருக்கலா இருக்கு, மழை வருமாட்டு இருக்கு, மாடில காயிற வத்தலை எடுத்துட்டு வா’ என்று சொன்ன பாட்டி வானிலை அறிவியல் படித்தது இல்லை. ஆடிப் பட்டம் தேடி விதை என இன்றைக்கும் சொல்லும் வரப்புக் குடியானவன் விவசாயக் கல்லூரிக்குள் மழைக்குக் கூட ஒதுங்கியது இல்லை முந்தா நாள் சமைத்த கறி அமுதெனினும் அருந்தோம் எனப் பாடிய தேரன் சித்தர் மைக்ரோபயாலஜி தேர்வுகளில் தேறியது இல்லை. செந்தட்டிக்கும் ஓடைத் திருப்பிக்கும் கொஞ்சம் உடம்புக்கு ஆகலை. எங்கேயோ நின்னுட்டு இருக்குங்க புடிச்சிட்டு வாரேன் எனச் சொல்லி மேய்ச்சல் நிலத்துக்கு ஓடும் சடையனுக்கு 60 ஆடுகளில் இரண்டை மட்டும் காணவில்லை என்பதைக் கண்டு பிடித்து, போதாக்குறைக்கு அதற்கு உடம்பும் சரியில்லை என்றும் சொல்லும் அறிவாற்றலை, எந்த வெர்ட்னரி கல்லூரிப் படிப்பும் அவருக்குக் கொடுத்தது இல்லை. அப்புறம் எப்படி இவர்கள் எல்லாம் இப்படித் துல்லியமாகக் கணக்கிடுகிறார்கள்? அப்போது எங்கிருந்து வந்த...

Life after 60

I asked one of my friends who has crossed 50 & is heading to 60. What sort of change he is feeling in him? He sent me the following very interesting lines, which i would like to share with you all..... 1)After loving my parents, my siblings, my spouse, my children, my friends, now i have started loving myself. 2) i just realised that I am not “Atlas”. The world does not rest on my shoulders. 3) i now stopped bargaining with vegetables & fruits vendors. After all, a few Rupees more is not going to burn a hole in my pocket but it might help the poor fellow save for his daughter’s school fees. 4) i pay the taxi driver without waiting for the change. The extra money might bring a smile on his face. After all he is toiling much harder for a living than me 5) i stopped telling the elderly that they've already narrated that story many times. After all, the story makes them walk down the memory lane & relive the past. 6) i have learnt not to correct people even when I know...

Father's Day Special Story

சிறுகதை..........அப்பா............ சாருமதிக்கு, அவள் மாமியார் சொல்வதின் நியாயம் புரிந்தது. “ரொம்பச் சரியா சொல்லியிருக்கேள் மா. யார் சொல்வா இப்பிடி!” என்று சிலாகித்துக் கொண்டாள். அவள் கணவனும் அதை ஆமோதித்தான். “சாரு, உங்கப்பா தனியா சமச்சி, சாப்டுண்டுனு தன் காரியத்தை தானே பண்ணிண்டு இருக்காரு. உன்னை எப்பிடி கவனிச்சிக்க முடியும்? உங்கம்மா இருந்தா கேள்வியே இல்லை. கண்டிப்பா இத்தனை நேரம் உன்னை அழைச்சி சீராட்டி இருப்பா! நாங்களும் சந்தோஷமா அனுப்பி வைச்சிருப்போம்.” “அதனால சாரு, இங்கேயே இருந்துடு. இங்கேயே வளைகாப்பு, சீமந்தம் பண்ணிப்பிடலாம். பிரசவமும் இங்கேயே வச்சிக்கலாம். நம்ப கிட்ட கார் இருக்கு, டிரைவர் இருக்கார். எப்ப வேணுமின்னாலும் ஆஸ்பத்திரிக்கு போயிக்கலாம். அப்பா ஒண்டியாளு. பொம்மனாட்டி யாராவது இருந்தா அது விஷயம் வேற. தலைப்பிரசவம் வேற . உன்னை வச்சிண்டு சிரமப் பட்டுப் போயிடுவார். நீயே அப்பாகிட்டே பக்குவமா சொல்லிடு” சாருமதிக்கு என்ன சொல்வது என்று புரியவில்லை. கணவரும் மாமியாரும் சொல்வது மனதுக்கு ஹிதமாக இருந்தது. ஆனால்…..இந்த ஆனால்தான் அவளை விட வில்லை. அப்பாவால முடியாதுதான். கிராமம் வேற. அப்பா...

Cybercrime - QR Code Cheating

யூஸ் பண்ணிகிட்டு இருக்கற கட்டில் பழசா போச்சு, இதை வித்துட்டு இன்னும் கொஞ்சம் பணத்தை போட்டு நியூ மாடல்ல ஒண்ணு வாங்கலாம்னு நினைச்சு ஓஎல்எக்ஸ்ல விளம்பரத்தை போட்டு அதனோட விலை 12 ஆயிரம்னு போடறாரு சென்னையில் இருக்கற ஒருத்தரு. அந்த விளம்பரத்தை பார்த்த லோக்கல் ஆள் அந்தநெம்பருக்கு கால் பண்ணிட்டு விலாசம் வாங்கிட்டு வீட்டுக்கு வந்து கட்டிலை பார்த்துட்டு 9 ஆயிரம் ரூபாய்க்கு கேஷ் கொடுத்துட்டு உடனே எடுத்துக்கறேன்னு சொல்றாரு. ஆனா அந்த விலைக்கு விக்கறதுக்கு விளம்பரம் போட்டவர் விரும்பலே. இன்னும் நல்ல விலைக்கு போகும்னு எதிர்பார்த்துகிட்டு இருந்தப்போ ஒருத்தர் தான் ராணுவத்திலே பணிபுரியறதா சொல்லிட்டு இவர் அதை நம்பனும்கிறதுக்காக அவரோட அடையாள அட்டையை வாட்ஸ்அப்ல அனுப்பிவிடறாரு. அந்த கட்டில் தனக்கு பிடிச்சுப்போனதாகவும் அது தனக்கு வேணும்னும் கால் பண்ணி கேட்கறார். நான் வெளியூர்ல இருக்கறேன். வர்றதுக்கு ஒருமாசம் ஆகும். நீங்க சொன்ன விலைக்கே எடுத்துக்கறேன். பணத்தை ஆன்லைன்ல அனுப்பிடறேன், உங்க அக்கவுன்ட் நெம்பர் டீடெய்ல் அனுப்புங்கன்னு சொன்னவுடன், ஆஹா நாம எதிர்பார்த்த ரேட் கிடைச்சுடுச்சுன்னு இவரோட...

Indian Army - The Pride of India!

சகோதர .... சகோதரிகளே.... நீங்கள் நினைப்பதுபோல் இந்திய நாட்டின் ராணுவப் பணி பிறநாட்டின் ராணுவத்தினரைப் போன்று எளிதானதல்ல.... உலகின் வலிமையான ராணுவங்களான....அமெரிக்கா சீனா, ரஷ்யாவே அஞ்சும் சீதோஷ்ண நிலையும், ......போரினால் ஏற்பட்ட சேதத்தை விட இயற்கை... சீதோஷ்ண மாறுபாடுகளால் ஏற்பட்ட வீரர்களின் உயிரிழப்புகள் அதிகம்....கரணம் தப்பினால் மரணம்...என்ற நிலையில்...உலகின் மிகப் பெரிய மலைச் சிகரங்களின் மேல் உள்ள போர்க்களத்தையும் ..... அதற்கான பயிற்சியையும் கொண்ட.... திறமையான பலம் வாய்ந்த உலகின் மிகப்பெரிய ராணுவம் நமது இந்திய ராணுவம்தான். ... ஐ.நா.சபையே....பல போர்களில் இந்திய ராணுவத்தின் உதவியை நாட... முன்னிலையில் நின்று ஐ.நா. படைகள் வெற்றி பெற உதவியிருக்கிறது....இந்திய ராணுவம்... தெரிந்துகொள்ளுங்கள்.... மக்களில் சிலர் ராணுவ வேலையை எண்ணற்ற வேலைகளில்....அதுவும் ஒரு சாதாரண வேலை என்பது போல நினைக்கின்றனர்....நமது ராணுவத்தினர் மிக உயரமான பனிப்பிரதேசங்களுக்கு(Hi Altitude) போய் வருவது மிக சுலபமான வேலை போல் நினைக்கிறார்கள்,.....இந்த பகுதிகள் நீங்கள் நினைப்பது ப...

How to maintain peace?

Martina Navratilova was once asked, “How do you maintain your focus, physique and sharp game even at the age of 43?" She gave a humble reply, “The ball doesn’t know how old I am”. You need to stop yourself from stopping yourself. Every game in life is actually played on a 6 inch ground – the space between your two ears. We don't live in bungalows, duplexes or flats. We live in our mind which is an unlimited area. Life is great when things are sorted and uncluttered there. Keeping the mind messy with hatred growing on the table, regrets piling up in corner, expectations boiling in kitchen, secrets stuffed under the carpet and worries littered everywhere ruins this real home. The key factor to performing well in life and in every arena, is the ability to control the quality and quantity of your “internal dialogue”. Performance is potential minus internal interference. Live in peace, not in pieces. 🙏🙏 A thought to ponder! 😄🙏

How to be a Happy?

My mom had a lot of problems. She did not sleep and she felt exhausted. She was irritable, grumpy, and bitter. She was always sick, until one day, suddenly, she changed. The situation was the same, but she was different. One day my dad said to her: - I've been looking for a job for three months and I haven't found anything, I'm going to have a few beers with friends. My mom replied: - It's okay. My brother said to her: - Mom, I'm doing poorly in all subjects at the University ... My mom replied: - Okay, you will recover, and if you don't, well, you repeat the semester, but you pay the tuition. My sister said to her: - Mom, I hit the car. My mom replied: - Okay daughter, take it to the workshop, find how to pay and while they fix it, get around by bus or subway. Her daughter-in-law said to her: - Mother-in-law, I come to spend a few months with you. My mom replied: - Okay, settle in the living room couch and look for some blankets in the closet....

Apara Ekadasi - Why should we fast?

இன்று ஆனி தேய்பிறை ஏகாதசி தினம் சார்வரி வருடம் ஆனித்திங்கள் 3 ம் நாள் புதன்கிழமை (17.06.2020) தேய்பிறை ஏகாதசி. இவற்றை செய்து மிகுதியான பலன் பெறுங்கள் சூரிய பகவான் சுக்கிரனுக்குரிய ரிஷப ராசியிலிருந்து புதன் பகவானுக்குரிய மிதுன ராசிக்கு பெயர்ச்சியாகும் மாதமே ஆனி மாதம் எனப்படுகிறது. ஆடி மாதம் பல சிறப்புகளைக் கொண்ட மாதமாக இருக்கிறது. பல ஆன்மீக முக்கியத்துவம் கொண்ட தினங்களை கொண்ட ஒரு மாதமாகவும் திகழ்கிறது. அப்படிப்பட்ட ஆனி மாதத்தில் மகாவிஷ்ணு எனப்படும் பெருமாள் வழிபாட்டுக்குரிய ஒரு சிறந்த தினமாக ஆனி மாத தேய்பிறை ஏகாதசி தினம் வருகின்றது. இந்த ஆனி மாத தேய்பிறை ஏகாதசி தினம் அபரா ஏகாதசி எனவும் அழைக்கப்படுகிறது. இந்த ஏகாதசி தினத்தில் நாம் செய்ய வேண்டியது என்ன என்பதையும் அதனால் நமக்கு உண்டாகும் பலன்கள் என்ன என்பதையும் தெரிந்து கொள்ளலாம். வருடம் முழுவதும் வரும் ஏகாதசிகளில் மார்கழி மாதத்தில் வருகின்ற வைகுண்ட ஏகாதசி பிரதானமான ஏகாதசி திதி என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அந்த வைகுண்ட ஏகாதசிக்கு நிகரான ஒரு ஏகாதசி தினமாக இந்த வருதினி ஏகாதசி தினம் இருக்கிறது. மற்ற எந்த ஏகாதசிகளில் விரதம் இருக்க முட...

Believe in God

நம்பிக்கை வைங்க......... ஒரு நாத்திகன் மலைச் சிகரத்தின் மீது நடந்து கொண்டிருக்கும் போது ..மாலை நேரமாகி விட்டது சற்றே மழை ஆரம்பித்தது, கண்ணுக்கெட்டும் தூரத்தில் ஒரு குகை தெரிந்தது அதை அடைந்து விட்டால் இரவுபொழுது தங்கிவிடலாம் என நினைத்து சற்று வேகமாக ஏறினான் பலமான காற்றுவீசியது... ஆ...கால் தடுக்கி கீழே பள்ளத்தில் விழுந்து விட்டான் .. கும்மிருட்டு... கீழே விழும்போது பாறை இடுக்கில் வளர்ந்திருந்த ஒரு மரக்கிளை கைகளில் தட்டுபட்டு கெட்டியாக பிடித்துக் கொண்டான் .. குளிர் காற்று வேகமாக வீசிக்கொண்டிருந்தது.கும்மிருட்டு எதுவுமே கண்ணுக்கு தெரியவில்லை. இந்த இக்கட்டான சூழ்நிலையில் அந்த நாத்திகன் தனது நம்பிக்கையற்ற நிலையைச் சிந்தித்துப் பார்த்தான் .. கீழே பெரும் பாறைகள் மேலே ஏறிச்செல்லவும் முடியாது கிளையின் மீதான பிடிப்பும் நழுவிக் கொண்டிருந்தது .. கடுமையான இருட்டில் எவ்வளவு ஆழமோ... விழுந்தால் உடல் சிதறிப்போகுமோ... என்ன செய்வது தெரியவில்லை. அவன் நினைத்தான் நான் எப்போதும் கடவுளை நம்பியதில்லை .. நான் இதில் தவறு செய்திருக்கலாம் இப்போது நம்புவதில் என்ன இழப்பு வந்து விடப்போகிறது .. இ...

Feeling Tired all the time?

ஸ்ரீராமர் பட்டாபிஷேகம் ஏற்ற பின் ராமரை பார்த்து ஆசி கூற அகஸ்திய மாமுனிவர் அயோத்திக்கு வருகை புரிந்தார். அகஸ்தியர் சபையில் அமர்ந்ததும் ராவண வதம் பற்றி விவாதிக்கலாயினர் அனைவரும். அப்பொழுது அகஸ்தியர் சபையினரை பார்த்து ராவண கும்பகர்ண வதத்தை விட லக்ஷ்மணன் ராவணன் மகன் மேகநாதனை வதைத்ததே மாபெரும் வீர செயல் என்றார் அகஸ்தியர். அதை கேட்டு அனைவரும் ஆச்சரியமாக அகஸ்தியரை பார்க்க ஸ்ரீராமர் ஏதும் அறியாதவர் போல் ஸ்வாமி எதை வைத்து அப்படி கூறினீர்கள். மேகநாதன் அவ்வளவு சக்தியுள்ளவனா என்று கேட்க, அகஸ்தியர் ராமா எல்லாம் அறிந்தவன் நீ ஆனால் ஏதும் அறியாதவன் போல் லக்ஷ்மணனின் பெருமையை என் வாயாலே கூறவேண்டும் என்றுதானே இப்படி அறியாதவன் போல் கேட்கிறாய், சரி நானே கூறுகிறேன் சபையோர்களே ராவணன் மகன் மேகநாதன் தேவலோக அரசன் இந்திரனுடன் போர்புரிந்து அவனை வென்று சிறையில் அடைத்து வைத்தது யாவரும் அறிந்ததே. நான் முக கடவுளான பிரம்மா இந்திரனை விடுவிக்க மேகநாதனிடம் கோரிக்கை வைக்க மேகநாதன் இந்திரனை விடுவிக்க வேண்டுமென்றால் தாங்கள் எனக்கு மூன்று அறிய வரங்கள் தர வேண்டும் என நிபந்தனை வைத்தான். அவை 1.பதினான்கு ஆண்டுகள் உணவு...

கடவுள் வந்தார் - கதை

*_படித்ததில் பிடித்தது._* _கடவுள் வந்தார்...!_ _"என்ன வேண்டும் கேளுங்கள், தருகிறேன்..!” என்றார்.._ _அவரிடம் பத்து மனிதர்கள் தம் தேவைகளைக் கேட்டனர்.._ _முதல் மனிதன் :_ _“எனக்கு கணக்கிலடங்கா காசும், பெரிய பிஸினஸும் வேண்டும்..!”_ _இரண்டாம் மனிதன்:_ _“நான் உலகில் சிறந்தோங்கி ,பெரிய பதவியை அடைய வேண்டும்..!”_ _மூன்றாம் மனிதன் :_ _“உலப்புகழ் பெற்ற நடிகர் போல், மிகப் பெரிய புகழ் வெளிச்சம் வேண்டும்..!”_ _நான்காம் மனுஷி:_ _“உலக அழகியைப் போல பேரழகு வேண்டும்..! உலகமே அதில் மயங்க வேண்டும்..!”_ _இப்படி.._ _இன்னும் ஐந்து பேரும், தமக்கு வேண்டியதைக் கேட்டனர்..!_ _கடவுள் அவர்கள் கேட்ட ஒவ்வொன்றையும் டக் டக்கென்று கொடுத்து விட்டார்..!_ *_பத்தாவது மனிதன் கேட்டான்:_* _“உலகத்தில் ஒரு மனிதன் உச்சகட்டமாய், எந்த அளவு மன நிம்மதியோடும், மன நிறைவோடும் ,வாழ முடியுமோ, அந்த நிலை எனக்கு வேண்டும்..!”_ _ஒன்பது பேரும், அவனை திரும்பிப் பார்த்தனர்.. சிரித்தனர்..!_ *_“ மனநிம்மதி, மன நிறைவு…_* _நாங்களும் அதுக்குதானே இதையெல்லாம் கேட்டோம்..?_ _விரும்பியது கிடைத்தால் மனநிறைவு கிடைத்து விடுமே..?”_ ...

Dharppai Pul

Why Dharba (holy grass) is used as ring during on our auspicious and inauspicious occasions !!.. # Forwarded by a research fellow and known fellow of our Hindu rituals... "This article is on one of the practices widely used by Indian Brahmins all over using a Holy Grass named Darbha, Dharbham or Dharbai. The botanical name is Eragrostis cynosuroides and in Hindi they call this as Kus or Kusha. Brahmins use this Dharbai grass in all functions, auspicious or inauspicious. A performing person needs to wear a ring made of this Dharbham. But many have lost the reason of why it is to be used in the first place. What I learnt from my father is proved to be accurately correct by a Medicine Practitioner. A Medical Practitioner once visited my home. When the topic turned to many subjects, I needed to tell him about the Holy Grass named Dharbham. When I told him about the usage and the values, he could not just believe my words. So, he took out a bunch of the Dharbham from me, went straig...