Hi Friends, குழந்தை வளர்ப்பைப் பற்றிய அருமையான கதை. உங்களுக்கும் பிடிக்கும்னு நினைக்கிறேன். ஒரு முறை மகாகவி காளிதாசர் வயல்வெளியே வெயிலில் நடந்து சென்ற போது தாகம் எடுத்தது..! சற்று தூரத்தில் ஒரு கிராமப்பெண் கிணற்றில் தண்ணீர் சேந்தி குடத்தில் எடுத்து வந்துக்கொண்டிருந்தாள்! காளிதாசர் அவரைப் பார்த்து அம்மா தாகமாகஇருக்கு கொஞ்சம் தண்ணீர் தருவீர்களா? என்று கேட்டார்! .... அந்த கிராமத்துப்பெண்ணும், தருகிறேன் உங்களை அறிமுகப்படுத்தி க்கொள்ளுங்கள் என்றாள்! உடனே காளிதாசருக்கு ஒரு உயர்வு மனப்பான்மை ஏற்பட்டு, இந்த பெண்ணிடம் நாம் யார் என்று சொல்ல வேண்டுமா என நினைத்து நான் ஒரு பயணி அம்மா என்றார்! உடன் அந்த பெண், உலகில் இரண்டு பயணிகள் தான்! ஒருவர் *சந்திரன்* ! ஒருவர் *சூரியன்* ! இவர்கள் தான் இரவு பகலென பயணிப்பவர்கள் என்றாள்! .... சரி என்னை விருந்தினர் என்று வைத்துக் கொள் என்றார் காளிதாசர்! உடனே அந்த பெண், உலகில் இரண்டு விருந்தினர் தான்! ஒன்று *செல்வம்* , இரண்டு *இளமை* ! இவை இரண்டும் தான் விருந்தினராக வந்து உடனே போய் விடும் என்றாள்! சற்று எரிச்சலான காளிதாசர் தான் ஒரு பொறுமைசாலி என்றார்! .... உடனே அந்
Posts
Showing posts from October, 2020
- Get link
- X
- Other Apps
What's the size of God? Excellent reading A boy asked the father: _What’s the size of God?_ Then the father looked up to the sky and seeing an airplane asked the son: What’s the size of that airplane? The boy answered: It’s very small. I can barely see it. So the father took him to the airport and as they approached an airplane he asked: And now, what is the size of this one? The boy answered: Wow daddy, this is huge! Then the father told him: God, is like this, His size depends on the distance between you and Him. *The closer you are to Him, the greater He will be in your life!* 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 I Loved the explanation 👌 Source: Whatsapp Forward
- Get link
- X
- Other Apps
அன்னாபிஷேகம் ஏன்? மகா வில்லாளி அர்ஜுனனுக்கு தன்னைவிட சிறப்பாக சிவபூஜை செய்பவர், சிறப்பான லிங்கத்தை வைத்து பூசிப்பவர் யாருமில்லை என ஒரு கர்வம் கொண்டிருந்தான். அதனை அறிந்த கண்ணன் உன்னைவிட அதிகமான லிங்கங்களை வைத்து சிவபூசை செய்யும் தம்பதியினர் இதே ஊரில் இருக்கின்றனர் , அதனால் உன்னைவிட அவர்களே சிவபூசை செய்வதில் சிறந்தவர்கள் என கண்ணன் சொல்கிறார். யார் என அர்ஜுனன் கேட்க ஒரு குடியானவரையும் அவர் மனைவியையும் காட்டுகிறார். அர்ஜுனன் அக்குடியானவருக்கு தெரியாமல் காலை முதல் இரவு வரை அவரது நடவடிக்கைகளை பார்க்கிறான். ஆனால் சிவபூஜையே அவர் செய்யவில்லை, திரும்ப கண்ணனிடம் வருகிறான், நடந்தவற்றை சொல்லி அவர்கள் சிவபூஜையே செய்யவில்லை, சிவலிங்கமே அவர்கள் வீட்டில் இல்லை , ஒருமுறை சேர்ந்து நின்று சாதம் வடித்த பானையை கும்பிட்டனர் அவ்வளவு தான் என கூறுகிறான். அப்போது கண்ணன் , உலக ஜீவராசிகள் பசிப்பிணி தீர்க்க பொன்மணி தேவையா அரிசிமணி தேவையா என கேட்க , அர்ஜுனனும் அரிசிதான் பொன்னைவிட உயர்வானது. அதனால் தான் அரிசியும் சிவனும் ஒன்னு என பழமொழியே வந்தது என்கிறான். கண்ணனும் அப்படியென்றால் ஒரு அன்ன பருக்கை ஒரு லிங்கத்திற்க
- Get link
- X
- Other Apps
அதானே ... ஒரு பேங்க் ஆபீஸரிடம் ஒரு ஆதிவாசி ஆள் லோன் கேட்டு வந்தார். பேங்க் ஆபீஸர் லோன் அப்ளிகேஷனை எடுத்து கையில் வைத்துக் கொண்டு கேட்டார் “எதுக்காகப் பணம் வேணும்…?” அந்த ஆதிவாசி ஆள் பதில் சொன்னார். “கொஞ்சம் மாடு வாங்கி பால் வியாபாரம் பண்ணலாம்னு இருக்கேன்…!” “அடமானமாய் என்ன தருவீங்க…?” ஆதிவாசி ஆள் லேசாய் குழப்பத்துடன் கேட்டார். “அடமானம்னா என்ன..?”. “நீங்க கேக்கற பணத்தோட மதிப்புக்கு சமமா ஏதாவது சொத்து கொடுத்தாத் தான் பேங்க் பணம் கொடுக்கும்.அதைத்தான் அடமானம்னு சொல்லுவோம்…!” ஆதிவாசி ஆள் சொன்னார். “கொஞ்சம் நிலம் இருக்கு… ரெண்டு குதிரை இருக்கு… எது வேணுமோ அதை நீங்க எடுத்துக்கலாம்…!”. பேங்க் ஆபீஸர் இன்னும் கொஞ்ச நேரம் பேசிவிட்டு, நிலத்தை அடமானமாக வைத்துக் கொண்டு அவருக்குப் பணத்தை லோனாகத் தர ஏற்பாடு செய்தான். சில மாதங்கள் கழிந்தது. அந்த ஆதிவாசி மீண்டும் பேங்க் வந்தார். தன்னுடைய கணக்குப் புத்தகங்களை எடுக்கச் சொன்னார். பைசா பாக்கியில்லாமல் கடன், வட்டி எல்லாவற்றையும் கணக்குப் போட்டு செட்டில் செய்தார். பேங்க் ஆபீஸர் ஆச்சர்யத்துடன் கேட்டார். “கடன் எல்லாவற்றையும் கட்டியாகிவிட்டது. லாபம் எதுவும் இல்
- Get link
- X
- Other Apps
Hi Friends, யாரோ ரொம்ப feel செஞ்சு எழுதின பதிவு. படிச்சு பாருங்களேன். சமைக்குறதெல்லாம் பெரிய விஷயமே இல்ல... எது முக்கியம் தெரியுமா??? சமைக்குறது. இன்னைக்கு சமைக்குறது; அப்புறம் நாளைக்கு சமைக்குறது; அப்புறம் நாளன்னைக்கு சமைக்குறது; சமைச்சுக்கிட்டே இருக்குறது. ஒவ்வொரு நாளும் சமைக்கணும். நேத்து சமைச்ச மாதிரி இல்லாம இன்னிக்கு சமைக்கணும். புதுசு புதுசா சமைக்கணும். ருசியா சமைக்கணும். அது எல்லார்க்குமே பிடிக்கணும். உப்பு கூடிட கூடாது. சோறு குழைஞ்சிட கூடாது. பிடிக்காத ஐட்டங்கள் இருந்துட கூடாது. ஒவ்வாத ஐட்டங்கள் இருந்துடக் கூடாது. இருக்குற பொருள்களை வச்சு அட்ஜஸ்ட் பண்ணனும். வேஸ்ட் பண்ணிடக் கூடாது . இருக்குற காச வச்சு சமைக்கனும். பட்ஜட் இடிச்சிடக் கூடாது. ஒவ்வொரு நாளும் விடியுறப்போ, இன்னைக்கு என்ன கறி வாங்கலாம், என்ன சமைக்கலாம், வீட்டில என்ன இருக்கு, வீட்டில என்ன இல்லன்னு யோசிச்சே விடியும். சமைக்கணும். அதுக்கு ரெடியாகனும். சாப்பிட்டு முடிச்சதும் பாத்திரம் தேய்க்கணும். இதையே ஒரு நாளைக்கு நாலு தடவை பண்ணனும். பகல் சமைச்சு திரும்ப இரவைக்கும் இதையே பண்ணணுமேன்னு மனசுல யோசிக்கும். நாளைக்கும் முதல்
- Get link
- X
- Other Apps
ஒரு ஊரில் ஒரு செல்வந்தார் இருந்தார். அவர் வியாபார நிமித்தமாக வெளியூர் சென்று திரும்பியபோது, *அவரது அழகான பெரிய பண்ணை வீடு தீப்பறி எரிந்து கொண்டிருந்தது*. அந்த ஊரிலேயே மிகவும் அழகான வீடு. *அவருடையது தான்..* அந்த வீட்டை இரண்டு மடங்கு விலை கொடுத்து வாங்க பலரும் தயாராக இருந்தனர். *ஆனால் இவர் தான்* *விற்கவில்லை*. இப்போது, அந்த வீடு அவர் கண் முன்னே *எரிந்துகொண்டிருந்தது.* ஆயிரம் நபர்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். *தீ முழுவதுமாக பரவிவிட்டதால்* *அதைஅணைத்தும்* *பிரயோஜனம் இல்லை என்று* *எந்த முயற்சியும் எடுக்கவில்லை*. . வணிகரோ செய்வதறியாமல் *கண்ணீரோடு புலம்பிகொண்டிருந்தார்.* ஐயோ என் வீடு. *என் வீடு.*. *என்றுஅலறினார்* அப்போது அவரின் மூத்த மகன் ஓடிவந்து,தந்தையே ஏன் அழுகிறீர்கள்..? *இந்த வீட்டை நான் நேற்றே மூன்று மடங்கு லாபத்திற்கு விற்றுவிட்டேன்.. இதனால் நமக்கு நஷ்டம் இல்லை என்று கூறினான்.* இதைக் கேட்ட வணிகருக்கு ஏக மகிழ்ச்சி . *அவரது சோகமனைத்தும் மறைந்து மகிழ்ச்சி உண்டானது.* இப்போது வணிகரும் கூடியிருந்த அந்த கூட்டத்தில் *ஒருவனாக நின்று வே
- Get link
- X
- Other Apps
கொஞ்சம் சிரிக்க நிறைய சிந்திக்க: ஊர் முழுவதும் ஓர் அறிவிப்பு! 400 ரூபாய் இருந்தால் காலம் முழுவதும் உட்கார்ந்து சாப்பிடலாம். இதைக் கண்டுப் பலர் வியந்தனர். இதைப்பற்றி மேலும் விசாரித்தபோது, 400 ரூபாய் பணத்துடன் வந்து சந்திக்க வேண்டிய இடத்தின் முகவரி கிடைத்தது. ஊரே திரண்டு அந்த இடத்திற்கு வந்தது. வெறும் 400 ரூபாயில் வாழ்நாள் முழுவதும் தின்பதென்றால் சும்மாவா. இடத்தை அடைந்த ஒருவன் சக நபரிடம் 400 ரூபாயா? அல்லது 4000, 40,000 ... அப்படி ஏதாவதா? என்று... 400 ரூபாய் மட்டுமே என்றான். வரிசையில் உள்ள ஒவ்வொருவரும் உள்ளே சென்றனர். . . .சார் நீங்க, நானும் காலம் புரா உக்கார்ந்து சாப்பிட போரேன். . .நானும் வரேன். . . .சார் நானும் . . .ஐயா வாங்க . . .அம்மா வாங்க . . . .அக்கா நீயுமா . ' 'வா வா, உக்கார்ந்து. ..400, ரூவா, . . .வாவா . . . . அங்கே ஒருவன் நாற்காலி விற்றுக் கொண்டு இருந்தான். "வாங்க சார்... வாங்க சார்... ஸ்டராங்கான நாற்காலி சார்... இது சீக்கிரத்துல உடையாது சார்... 400 ரூபாய் கொடுத்து வாங்கிட்டு போய் காலம் முழுவதும் இதில் உட்கார்ந்து சாப்பிடலாம் சார்" என்று கூவினான். ந
- Get link
- X
- Other Apps
அழகான மொழி தமிழ். இலைகளுக்கு இவ்வளவு பெயர்களா என்று ஆச்சர்யமாக இருக்கிறது. ஆல், அரசு, வேம்பு, அத்தி, மா, பலா, வாழை, பூவரசம் (இன்னும் பல) போன்ற மரங்களின் இலைகளுக்கு மட்டும் ‘இலை’என்று பெயர். அகத்தி, பசலி, வல்லாரை, முறுங்கை போன்றவற்றின் இலை ‘கீரை’ ஆகின்றது. மண்ணிலே படர்கின்ற கொடிவகை இலை என்றும், நேராக வளர்பவைகளுக்கு ‘பூண்டு’ என்றும் பெயர். அறுகு, கோரை முதலியவைகளின் இலைகள் ‘புல்’ ஆகின்றன. மலையிலே விளைகின்ற உசிலை முதலியவற்றின் இலைகளுக்குப் பெயர் ‘தழை’. நெல்,வரகு முதலியவற்றின் இலைகள் ‘தாள்’ ஆகும். சப்பாத்தி, கள்ளி, தாழை இனங்களின் இலைகளுக்குப் பெயர் ‘மடல்’. கரும்பு, நாணல் முதலியவற்றின் இலைகள் ‘தோகை’ என்றாகின்றது. தென்னை, கமுகு, பனை முதலியவற்றின் இலைகள் ‘ஓலை’ என்று சொல்லப்படுகின்றன. இவ்வாறு தாவரங்களுக்கு வழங்கி வரும் சொற்களுக்குள்ளே இலக்கணம் மட்டுமல்ல,தாவரவியல் அறிவியலும் அடங்கி இருக்கிறது...
- Get link
- X
- Other Apps
*மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் - குழந்தைகளுக்கு பாடம் கற்றுத் தருவது பெரும் பாக்யம்* _தொகுத்தவர்: ரா.வேங்கடசாமி_ _நூல்: காஞ்சி மகானின் கருணை உள்ளம்_ இந்தச் சம்பவம் இடையபலம் ஸ்ரீ ராமகிருஷ்ண தீட்சிதருக்கு ஏற்பட்ட அனுபவம். மகான் ஸ்ரீ அப்பய்ய தீட்சிதர் வம்சத்தைச் சேர்ந்தவரான அவருக்கு, பெரிய பள்ளியில் கௌரவமாக உத்தியோகம் பார்த்த பின்னர், சிறிய பள்ளியில் ஆசிரியர் வேலை பார்க்க மனம் ஒப்பவில்லை. 1968ம் வருடம் அவர் ஒரு உயர்நிலைப் பள்ளியில் சமஸ்கிருத ஆசிரியராகப் பணியாற்றியபோது, சர்க்காரின் இருமொழிக் கொள்கைகளில் அவருக்கு உத்தியோகம் போய்விட்டது. ஆனால் அனுபவம் வாய்ந்த மூத்த பண்டிதர்களுக்கு வேறு பள்ளியில் இடம் கொடுத்தனர். தீட்சிதரை ஒரு ஆரம்பப் பாடசாலையில் ஆசிரியராகப் போட்டனர். பெரிய பள்ளியில் கௌரவமாக உத்தியோகம் பார்த்துவிட்டு,சிறிய பள்ளியில் ஆசிரியர் வேலை பார்க்க மனம் ஒப்பவில்லை. தயங்கிக்கொண்டு இருந்தார். அவரது நண்பர் கோகுல், விஜயவாடாவில் முகாமிட்டு இருந்த மகாபெரியவாளை தரிசிக்கச் சென்றார். அவர் தீட்சிதருடன் சென்றே மகானைத் தரிசிப்பது வழக்கம். முதல் கேள்வியே மகானிடமிருந்து வந்தது. “எங்கே ராமகிருஷ்ணன்?”
- Get link
- X
- Other Apps
*Nine wives celebrating Navratri* *Goddesses* 1. When doing housework in the morning - Ashtabhuja Devi 2. When teaching children - Saraswati 3. When saving from income - Mahalakshmi 4. When making food - Annapoorneshwari 5. When standing up for family - Parvati 6. When the husband asks for the remote - Durgadevi 7. When you forget your wife's birthday - Mahakali 8. Criticizing wife's parents - Mahishasuramardini 9. When the husband praises other women - Ugrachandika Devi *"Happy Navratri"* 🌞🌝🔥💧💨🌏🌪️⭐
- Get link
- X
- Other Apps
*MARIA'S NEW HAT!!!👒* Maria lived with her mother in a small apartment in NYC. She wasn't too young or too old.. not too short or too tall.. not particularly beautiful nor ugly.. She was just an average woman. She worked as a secretary at a large company and her life was pretty much boring and mundane. No one at work paid any attention to her... Those that did considered her to be as boring as her life was. One morning, on her way to work, Maria saw a new hat shop that opened down the street. In a spur of curiosity she walked in! In the shop was a little girl and her mother, who came to pick the girl a hat, and another customer who was trying on hats... Maria also tried on a few hats, until she found one she liked. She put it on and It looked nice! First to notice was the little girl : "Mommy, look how pretty that woman looks with the hat on!" The mother said: "Ma'am, I must say, this hat just looks wonderful on you!" The second buyer also c
- Get link
- X
- Other Apps
A worthy read... பள்ளி இறுதித் தேர்வு முடிவுகள் பத்திரிக்கையில் வெளிவந்த நாள் அன்று! கர்நாடக மாநில அளவில் 8வது இடத்தைப் பிடித்த ஒரு மாணவனின் படம் ஒன்றை காண்கிறார் சுதா மூர்த்தி. ஒல்லியாகவும், வெளிறிப் போயும் இருந்த அந்த சாதாரண மாணவனின் பெயர் ஹனுமந்தப்பா. அவன் கண்களில் ஒரு பிரகாசம் இருந்ததை கவனிக்கிறார் சுதா மூர்த்தி. அடுத்த நாள் அதே பையனின் பேட்டி அன்றைய செய்தித்தாளில் வந்திருந்தது. அந்த ஹனுமந்தப்பா ஒரு கூலித் தொழிலாளியின் மகன் என்றும், பழங்குடி இனத்தைச் சேர்ந்தவன் என்றும் அவன் தந்தை ஒரு நாளைக்கு வெறும் நாற்பது ரூபாய் மட்டுமே சம்பாதிக்கிறார் என்றும் அதனால் மேற்கொண்டு படிக்க வாய்ப்பில்லை என்றும் செய்தி வந்திருந்தது. உடன் அவனது முகவரியைக் கண்ட சுதா மூர்த்தி அவனை பெங்களூரு வரவழைக்க கடிதம் எழுதி உடன் பயணச்செலவும், ஒரு ஆடை வாங்க கூடுதல் பணமும் ஏற்றுக் கொள்வதாக தகவல் அனுப்பியிருக்கிறார். அந்தப் பையன் குறிப்பிட்ட நாளில் சுதாவின் அலுவலகம் நுழைகிறான். பெங்களூருக்கு வருவது அதுவே முதல் முறை. சுதா அவனை வரவேற்று "உன்னுடைய மதிப்பெண்கள் குறித்து மகிழ்ச்சி. நீ விரும்பினால் மேற்படிப்புக்கான செல
- Get link
- X
- Other Apps
கூத்தனூர் சரஸ்வதி கோவில்..... 1. தமிழ்நாட்டிலேயே சரஸ்வதிதேவிக்கென்றே தனிக்கோயில் உள்ள திருத்தலம் கூத்தனூர். 2. சரஸ்வதி இத்தலத்தில் கருவறையில் கோயில் கொண்டதோடு மட்டுமன்றி அரிசொல் ஆறு எனப்படும் அரசலாற்றில் கங்கை, யமுனை நதிகளோடு கலந்து தட்சிண திரிவேணி சங்கமாக பரிணமிக்கிறாள் என பிரமாண்டபுராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 3. ஒரு சமயம் நான்முகனுக்கும் சரஸ்வதிக்கும் ஏற்பட்ட சர்ச்சையின் காரணமாக இருவரும் பூமியில் பகுக்காந்தன், சிரத்தை எனும் பெயர்களில் பிறக்க, சிரத்தையாக பிறந்த சரஸ்வதி இத்தலத்தில் கோயில் கொண்டாள் என தலவரலாறு கூறுகிறது. 4. பகுகாந்தனாகப் பிறந்த நான்முகன் பித்ரு காரியங்களில் முக்கியமாகப் போற்றப்படுவார் என ஈசன் அருள் வழங்கியதால் கூத்தனூரில் அரசலாற்றில் புரியும் பித்ருகாரியங்கள் விசேஷ பலன்களைத் தருவதாக ஐதீகம். 5. அம்பாள்புரி, ஹரிநாகேஸ்வரம் என புராண காலத்தில் அழைக்கப்பட்ட இத்தலத்தை இரண்டாம் ராஜராஜன் தன் சபையில் அரசவைப்புலவராக விளங்கிய சரஸ்வதியின் அருள் பெற்ற ஒட்டக்கூத்தருக்கு பரிசாக வழங்கினார். 6.(ஒட்டக்)கூத்தருக்குப் பரிசாக வழங்கப்பட்டதால் இத்தலம் கூத்தன்+ ஊர் = கூத்தனூர் என்றாயிற்று
கணவன் மனைவி பிரச்சினை தீர
- Get link
- X
- Other Apps
*அடியேனின் இணையதளம்* http://easanaithedi.in புதிய உறுப்பினர்கள் அடியேனின் *ஈசனை தேடி* குழுவில் தாங்கள் இணைய விரும்பினால் - குழு-2 *https://chat.whatsapp.com/FdXFXZYF92Q0aJHykMUUra* அல்லது குழு-1 *https://chat.whatsapp.com/3SZhGkEJoM6ApZO528Ask8* *அடியேனின் யூடியூப் சேனல்* *https://youtube.com/channel/UCXS8nEe-gFYeoiTMwhSn-lA* 👇👇👇👇👇👇👇👇 *பாடல் பெற்ற தலம் இல்லை* *இந்தத் தலம் காசிக்கு இணையான தலம் என்ற பெருமை உடையது.* *குறுங்காலீஸ்வரரைத் தரிசித்தால் ஆயிரம் பிரதோஷ தரிசனம் செய்த பலனும், ஒரு சனி பிரதோஷ தரிசனம் செய்தால் கோடி பிரதோஷ தரிசன பலனும் கிடைக்கும் என்பது ஐதீகம் என்கிறார்கள்.* *வால்மீகி முனிவர், பகவான் ராமனின் மகன்கள் லவன், குசன் ஆகியோர் வழிபட்ட புண்ணியஸ்தலமாக இந்த கோவில் விளங்கி வருகிறது.* *அம்பாள் இடது காலை முன்னோக்கி வைத்தபடி காட்சி தருவது மற்றொரு சிறப்பம்சம்.* *இக்கோயில் வடக்கு நோக்கியிருப்பதால், மோட்ச தலமாக கருதப்படுகிறது.* *இந்த ஈஸ்வரனை வணங்கி லவன், குசன் இருவரும் தோஷ நிவர்த்திப் பெற்றதால், இவரை வணங்குபவர்களின் பித்ரு தோஷம் நீங்கும் என்பது ஐதீகமாகும்.* *சரபேஸ்வரர் வழிபாட
- Get link
- X
- Other Apps
*Ancient Indian 21 suggestions of wisdom.* *Vacho Vegam (WHEN TO REMAIN SILENT ):* 1. Be silent - in the heat of anger. 2. Be silent - when you don't have all the facts. 3. Be silent - when you haven't verified the story. 4. Be silent - if your words will offend a weaker Person. 5. Be silent - when it is time to listen. 6. Be silent - when you are tempted to make light of holy things. 7. Be silent - when you are tempted to joke about sin. 8. Be silent - if you would be ashamed of your word later. 9. Be silent - if your words would convey the wrong impression. 10. Be silent - if the issue is none of your business. 11. Be silent - when you are tempted to tell an outright lie. 12. Be silent - if your words will damage someone else's reputation. 13. Be silent - if your words will damage a friendship. 14. Be silent - when you are feelin
- Get link
- X
- Other Apps
பல வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்வு இது மஹாபெரியவா அப்போது காஞ்சி ஸ்ரீமடத்தில் இருந்தார். மாலை வேளை…. மடத்து வாசலில் ஒரு சைக்கிள் ரிக்ஷா வந்து நின்றது. ரிக்ஷா ஓட்டி கீழிறங்கி வண்டியில் அமர்ந்திருந்த பெரியவர் ஒருவரைக் கைத்தாங்கலாக கீழே இறக்கி விட்டான். ‘என்னை மடத்துக்குள் கொண்டு விடப்பா’ என்பதாக அவனிடம் ஜாடையும் பேச்சும் கலந்து பெரியவர் சொல்ல மடத்துக்குள் அழைத்துச் செல்ல முற்பட்டான் ரிக்ஷா ஓட்டி. கலைந்த தலையும் அழுக்கு லுங்கி அணிந்தபடியும் இருந்ததால், தான் இதே கோலத்தில் ஸ்ரீமடத்துக்குள் செல்வது உசிதமாக இருக்காது என்று ரிக்ஷா ஓட்டியே தீர்மானித்தான் போலும். எனவே, அங்கிருந்த மடத்துச் சிப்பந்தி ஒருவரை அழைத்து ‘ஐயா…இந்தப் பெரியவரு மடத்து சாமியைப் (மஹாபெரியவா) பார்க்கணுமாம். கூட்டியாந்திருக்கேன். கையைப் புடிச்சுக் கூட்டினு போ. சாமியைப் பார்த்து முடிச்சதும் வெளில என் வண்டி கிட்ட கொண்டு வுட்டுரு’ என்று சொல்லிட்டு வெளியே போனான். பெரியவர் கைமாறினார். பெரியவருக்கு எப்படியும் வயது எண்பதுக்கு மேல் இருக்கும் என்று தோற்றம் சொன்னது. உள்ளடங்கிய கண்கள், கோணல் மாணலாகக் கட்டிய நாலு முழ வேஷ்டி.. கசங்கிய வ
- Get link
- X
- Other Apps
*பந்தளராஜனின் பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம்..!!* (கேட்ட., படித்த பலவிதமான கருத்துக்களில் ஒருசில கருத்துக்கள்) *காமம்* : பற்று உண்டானால் பாசம்., மோகம் ஏற்பட்டு புத்தி நாசமடைந்து அழிவு ஏற்படுகிறது. *குரோதம்* : கோபம் குடியைக் கெடுத்து., கொண்டவனையும் அவன் சுற்றத்தையும் சேர்த்து அழித்து விடும். *லோபம்* : பேராசைக்கு இடம் கொடுத்தால் இருப்பதும் போய்விடும்., ஆண்டவனை அடைய முடியாது. *மதம்* : யானைக்கு மதம் பிடித்தால் ஊரையே அழித்து விடும். அந்த யானையை அப்போது யாராவது விரும்புவார்களா.? அதுபோல் வெறி பிடித்தவனை ஆண்டவன் வெறுத்துவிடுவான். *மாத்ஸர்யம்* : மனதில் பொறாமையை நிலைநிறுத்தி வாழ்பவனுக்கு., வேறு பகையே வேண்டாம். அதுவே அவனை அழித்துவிடும். *டம்பம் (வீண் பெருமை)* : அசுர குணமானது நமக்குள் இருக்கக்கூடாது. *அகந்தை* : தான் என்ற அகந்தை கொண்டவன் ஒரு போதும் வாழ்வில் முன்னேற முடியாது. அகந்தை என்பது முடிவில்லா ஒரு சோகச் சுமை. *சாத்வீகம்* : விருப்பு., வெறுப்பு இன்றி கர்மம் (காரியம்) செய்தல் வேண்டும். *ராஜஸம்* : அகங்காரத்தோடு கர்மம் செய்தல் கூடாது. *தாமஸம்* : அற்ப புத்தியை பற்றி நிற்பது. மதி மயக்கத்தால் வின
- Get link
- X
- Other Apps
*Real Fasting of Navaratri in the intellectual level means purification of the soul in the following ways :* *Prathama* - I will leave all my Anger *Dwitiya* - I will stop Judging People. *Tritiya* - I will leave all my Grudges. *Chaturthi* - I will forgive myself & everyone *Panchami* - I will Accept myself & every one AS they are. *Shashti* - I will love myself & everyone unconditionally *Saptami* - I will leave all my feelings of Jealousy & Guilt *Ashtami (Durga Ashtami)* - I will leave all my Fears *Navami (Maha Navami)* - I will offer Gratitude for all the things I have and all which I will get. *Dashami (Vijaya Dashami)* There is abundance in the universe for all and I will always tap the same and create what I want through unconditional love, Sadhana, nishkama seva and faith. *Wishing all a blessed Navaratri*
- Get link
- X
- Other Apps
என்னை மிகவும் பாதித்த பதிவு ! படிக்கும்போதே உயிர் பிரிவதைப் போன்றவோர் உணர்வு ! பகிர்வு: அப்பா, நேத்து கேட்டேனே, எக்ஸாம் பீஸ் எடுத்துக்கவா...? கேட்டுக் கொண்டே அப்பா நேற்று போட்டிருந்த சட்டைப் பாக்கெட்டில் கை விடுகிறான். டேய், அப்பா வந்து எடுத்து தருவாங்க, பாக்கெட்டில் கை விடறது என்ன பழக்கம்...? அம்மாவின் அதட்டலுக்கு... என் அப்பா பாக்கெட்டில் நான் கை விடறேன், உனக்கு ஏம்மா வயிறு எரியுது...? அம்மாவிற்கு பதில் சொல்லிக் கொண்டே, எடுத்ததை தன் பாக்கெட்டில் நுழைத்தவாறு, தேங்க்ஸ்பா, பாய்... சொன்னவாறு ஓடிப் போனான், மூன்றாமாண்டு பொறியியலில் இயந்திரவியல் படிக்கும் ராஜா. எல்லாம் நீங்க கொடுக்கற செல்லம். எதுக்கும் ஒரு அளவு இருக்குதுங்க, பொறிந்தாள் அப்பளம் பொறித்தபடி. சிரித்தபடியே தலைதுவட்டிக் கொண்டு வெளியே வந்த குமாரசாமி, நேத்து ஒரு ஃப்ரெண்ட் கேண்டீன்ல செலவு பண்ணியிருப்பான், இவன் ஒருநாள் செலவு பண்ண ஆசைபடுவான், இதுக்கெல்லாம் உங்கிட்ட கணக்கு சொல்லமுடியுமா? அதுவுமில்லாம நீ பயப்படற மாதிரிலாம் தப்பா நீ வளர்க்கலய மகா...! காலையிலய கோபப்படாதடா, டாக்டர் சொன்னாரில்லையா... என்றபடி மனைவியின் கன்னத்தில் செல்லம
- Get link
- X
- Other Apps
Who is the Hero? When Dr.Abdul Kalam was the President, he visited Coonoor. On reaching , he came to know that Field Marshall Sam Manekshaw was in the Military Hospital there. Dr.Kalam wanted to visit Sam ,which was unscheduled. Arrangements were made. At the bedside, Kalam spent abt 15 minutes talking to Sam & enquiring abt his health. Just before leaving Kalam asked Sam " Are you comfortable? Is there anything I cld do ? Do you have any grievance ? or any requirement that wld make you more comfortable? Sam said"Yes Yr Excellency, I hv one grievance" .Shocked with concern & anguish , Kalam asked him what it was . Sam replied" Sir, my grievance is that I am not able to get up & Salute my most respected President of my beloved country" . Kalam held Sam's hand as both were in tears. But the remaining part of the tale with regarding this meeting is that Sam did tell APJ that he was not paid the pension of the Field Marshall’s rank till
- Get link
- X
- Other Apps
ஒரு சோப்பு தயாரிக்கும் நிறுவனம் ஒன்றிற்கு, வாடிக்கையாளர்களிடம் இருந்து தொடர்ந்து ஒரு புகார் வந்து கொண்டே இருந்தது. புகார் என்னவென்றால், சில சமயம் சோப்புகள் இல்லாமல் வெறும் கவர் மட்டுமே உள்ளது என்பதுதான். கம்பெனி நிர்வாகம் இதற்கு ஒரு தீர்வு காண முடிவுக்கு வந்து, நிர்வாகத்தின் முக்கிய பொறுப்பாளர்கள் அனைவரும் ஒரு அறையில் இணைந்து ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தினர். நிர்வாகத்தின் முதல்வர், "சில சமயம் சோப்புகள் இல்லாமல் வெறும் காகிதம் மட்டும் இயந்திரத்தால் கவர் செய்யப்படுகிறது. இதற்கு ஒரு நல்ல தீர்வு கூறுங்கள்" என்று அங்குள்ள பொறுப்பாளர்களிடம் கூறினார். அதில் ஒருவர், "நாம் ஒவ்வொரு இயந்திரத்தின் பக்கத்திலும் ஒரு வேலையாளை நிறுத்த வேண்டும். அவர்கள் ஒவ்வொரு சோப்பாக பரிசோதித்து, பின் சோப்பு இல்லாமல் வரும் வெறும் காகிதத்தை தனியாக நீக்கிவிட வேண்டும்" என்று ஆலோசனைக் கூறினார். மற்றொருவர்,"நாம் அவர்களுக்கு அதற்காகவே தனி சம்பளம் கொடுக்க வேண்டியது இருக்கும். இது வேலைக்காகாது. வேண்டுமென்றால் இவ்வாறு செய்யலாம், சோப்பின் எடையைக் கணக்கிடும் ஒரு இயந்திரத்தை, நம் இயந்திரங்களோடு இணைத்து
- Get link
- X
- Other Apps
"என்ன காமாட்சி ரத்தை.. ரத்து பண்ணிட்டாளா?"--பெரியவா (ஒரு அர்ச்சகர் மூலமாக, விவாகரத்தை முடிவுக்குக் கொண்டு வந்த பெரியவாளின் அற்புத நிகழ்வு) இரண்டே நிமிடத்தில் இணைத்து வைத்த மகிமை குமுதம் லைஃப் 27-02-2019 தொகுப்பு-ஆர்.என்.ஆர். தட்டச்சு- வரகூரான் நாராயணன். மகாபெரியவா திருத்தல யாத்திரைகள் முடித்துவிட்டு, காஞ்சிபுரம் மடத்துக்குத் திரும்பியிருந்த காலகட்டம் அது. பரமாசார்யார் மேல் தூய்மையான பக்தி உடைய பக்தர்கள் பலமாத இடைவெளிக்குப் பிறகு அவரை தரிசிக்க வந்திருந்ததால், பெரும் கூட்டம் கூடியிருந்தது. இடைப்பட்ட காலத்தில் அவரவர் இல்லத்தில் நடந்த விஷயங்களைச் சொன்னார்கள் சிலர். இதுவரை கஷ்டம் துரத்தியதாகக் கூறி ஆறுதல் தேடினார்கள் கொஞ்சம் பேர். இன்னும் சிலர் தங்கள் பிரச்னைகளைச் சொல்லி, அது நீங்க ஆசார்யாளின் ஆலோசனை ஆசி வேண்டினார்கள். அந்த சமயத்தில் இளம் வயதுப் பெண் ஒருத்தி, தன் பெற்றோரோடு வரிசையில் வந்து கொண்டிருந்தாள். அந்தக் குடும்பத்தினர் முகத்தில் ஏதோ ஒரு சோகம் ஒட்டிக் கொண்டிருந்தது. மகாபெரியவாளின் பார்வை படும் இடத்துக்கு அவர்கள் வந்து கொண்டிருந்த சமயம், திடீரென்று தன் அருகே இருந்த அணுக்கத்
- Get link
- X
- Other Apps
உள்ளே - வெளியே : ஒரு மத்யான வேளை. மும்பை லோக்கல் ட்ரைன். அப்போ தான் கூட்டம் கொறச்சலா இருக்கும். மட்டுங்கா போகணும். திரு திருன்னு முழிச்சுண்டு எனக்கு தெரிஞ்ச ஹிந்திலே நாலு பேரு கிட்டே விசாரிச்சுண்டு ஒரு ட்ரைன்ல ஏறினேன். உள்ளே கொஞ்சம் இடம் இருந்தது. போய் நின்னுண்டு பக்கத்துலே இருந்தவன் கிட்டே, எ காடி மட்டுங்கா ஜாயேகி என்று கேட்டேன். அவ்வளவு தான். அவன் என்னமோ ஷாக் அடிச்சபோல பாத்துட்டு, அரே, தேரே கோ மாலும்நஹி ? எ பாஸ்ட் ஹை, பாஸ்ட் ட்ரைன். ஹூஹும், யே காடி நஹி ருகேகான்னு சொல்லிட்டு சுவாரஸ்யமா காது குடைய ஆரம்பிச்சான். நான் பாவமா நிக்கறேன். நாலு பேர் கிட்ட விசாரிச்சோம். அத்தனை பேருமா தப்பா? இல்லே நம்ம ஹிந்தி தான் தப்பா.? ட்ரைனோ ஸ்பீட் எடுத்து ஓடுது. அப்போ பக்கத்திலே இன்னொரு ஆள் பையில் இருந்து ஜூனியர் விகடனை உருவ, அப்பாடா, நம்மாள் ஒருத்தன் கிடைச்சான்னு பாஞ்சு போய், சார் இந்த ட்ரைன் மட்டுங்கா போகும்ல்லே என்று கேட்க, அவர் கண்ணாடியின் கீழ் வழியாக பார்த்து விட்டு, வடிவேலு ஸ்டைலில் இது மட்டுங்கா போகும் ஆனா ..... நிக்காது. இது பாஸ்டு. நீங்க மட்டுங்கா போகனுமா? அப்போ ஒன்னு சொல்றேன் கேளுங்கோ. நா
- Get link
- X
- Other Apps
"நானும் நீயும் ஒண்ணுதான்" ("மூன்று மணி நேரம் பேசியும் 'தட்சிணாமூர்த்தியின் சின்முத்திரைக்கு''சரியான விளக்கம் சொல்லாத பண்டிதருக்கு பெரியவாளின் எளிமையான விளக்கம்) கட்டுரையாளர்;எஸ்.கணேச சர்மா தட்டச்சு;வரகூரான் நாராயணன். வேத சாஸ்திர இதிகாச புராணங்களில் பெரியவா எப்படிப்பட்ட மேதாவி என்பதை உலகம் நன்கறியும். ஒரு சதஸ் நடக்கிறது. தட்சிணாமூர்த்தியின் சின்முத்திரை குறித்து ஒரு பண்டிதர் மூன்று மணி நேரம் பேசினார். அது முடிந்ததும் பெரியவா, "எதைப் பற்றி பேசினாய்?" என்று கேட்டார். "சின்முத்திரையின் தாத்பர்யம்!" என்றதைக் கேட்டு, "ஒரு சின் முத்திரையில் இத்தனை விஷயமா? மூணு மணி நேரம் பேசினியே .....எல்லாரும் புரிஞ்சிண்டாளா?" என்றார். "புரிஞ்சிண்டாளா இல்லையான்னு எனக்கெப்படித் தெரியும்?" என்றார் அவர். அதற்குப் பெரியவா, "நாம் சொல்வதை சரியாக புரிந்து கொள்கிறார்களா,இல்லையா என்பதைக் கேட்பவர் முகபாவத்தைப் பார்த்தே புரிந்து கொள்ளலாம். அது தெரியாமல் பேசிக்கொண்டே போவதில் பயனில்லை. கேட்பவர் திறமையை எடை போட்டு அதற்கு ஏற்றாற் போல் பேச வேண்டும்!&quo
- Get link
- X
- Other Apps
அவர் இறந்து விட்டார் அடக்கம் செய்யணும் சொல்லிக் கொண்டே சென்றார்கள்..!! . மெல்ல எட்டிப் பார்த்தேன் மூச்சு இல்லை – ஆனால் இப்போதுதான் இறந்திருந்தார் என்பதை மட்டும் நம்ப முடியவில்லை..!! . இருபது வருடங்கள் முன்னாடி – அவர் மனைவி இறந்த பிறகு – சாப்பிட்டாயா..!! என்று யாரும் கேட்காத நேரத்தில் – அவர் இறந்திருந்தார் யாருமே கவனிக்க வில்லை...!! . பொண்டாட்டி போனதுமே போய்த் தொலைய வேண்டியதுதானே – என்று காதுபட மருமகள் பேசியபோது அவர் இறந்திருந்தார் அப்போதும் யாருமே கவனிக்க வில்லை...!! . தாய்க்குப் பின் தாரம் தாரத்துக்குப் பின் .. வீட்டின் ஓரம் ...!!! என்று வாழ்ந்த போது – அவர் இறந்திருந்தார் யாருமே கவனிக்க வில்லை ..!!! . காசு இங்கே மரத்திலேயா காய்க்குது - என்று மகன் அமிலவார்த்தையை வீசிய போது..!!! அவர் இறந்திருந்தார் யாருமே கவனிக்க வில்லை...!! . என்னங்க...!!! ரொம்ப தூரத்திலே இருக்குற முதியோர் இல்லத்திலே விட்டு தலை முழுகிட்டு வந்திடுங்க...!!! என்று காதிலே விழுந்த போதும் அவர் இறந்திருந்தார் யாருமே கவனிக்க வில்லை...!!! . உனக்கென்னப்பா...!!! பொண்டாட்டி தொல்லை இல்லை என்று வாழ்த்
- Get link
- X
- Other Apps
🕉️🌹🌷🌸🍎*நவராத்திரி பற்றிய 50 சிறு குறிப்புகள் வருமாறு* இவ்வாண்டு நவராத்திரி விழா ஐப்பசி மாதம் அக்டோபர் 17முதல் விஜயதசமி அக்டோபர் 26 வரை கொண்ட டாப்படுகிறது. சோழர் காலத்தில் நவராத்திரி திருவிழா அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டது. 🕉️நவராத்திரி நாட்களில் பெண்கள் கன்யா பூஜை செய்வதால் சகல செல்வங்களையும் பெறலாம். 🕉️விஜயதசமி தினத்தன்று பெருமாள் கோவில்களில் வன்னி மரக்கிளையை வைத்து அதில் பெருமாளை எழுந்தருளச் செய்து பூஜை நடத்துவார்கள். இந்த வழிபாட்டில் கலந்து கொண்டால் கிரக தோஷங்கள் விலகி ஓடி விடும். 🕉️ நவராத்திரி பண்டிகையை முதன் முதலில் ராமர்தான் கொண்டாடியதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. 🕉️நவராத்திரி பூஜை நாட்களில் இரவு 7 மணி முதல் 9.30 மணி வரை தேவி வழிபாடு செய்ய உகந்த நேரமாகும். 🕉️ஈசனும், அம்மையும் ஒன்று சேர்ந்து ஊஞ்சலில் ஆடுகின்ற தரிசனத்தை 9 நாட்களும் கண்டால் நவராத்திரி பூஜை செய்த பலன் கிடைக்கும். 🕉️ சென்னை திருப்போரூர் அருகில் உள்ள செம்பாக்கம் கிராமத்தில் உள்ள பாலா திரிபுரசுந்தரி. ஔஷத லலிதா மூலிகை அம்பாள் ராஜ் தர்பார் ஆலயத்தில் வருட த்திற்க்கு நான்கு நவராத்திரிகள்
- Get link
- X
- Other Apps
ஞான ரூபிணி!! ஞானமே வடிவான அம்பிகையை நவராத்திரியில் வழிபடுவது மிகச் சிறப்பானது. நவராத்திரியின் தத்துவமே தீமைகளில் இருந்து விடுபட்டு, ஆனந்தத்தில் திளைத்து, ஞானத்தில் சேர்வது தானே?! ஞானம் என்பதுதான் எல்லாவற்றுக்கும் எல்லை நிலம். அதை அடைந்த பிறகு, அடைய வேண்டியது என்று எதுவுமே இல்லை. ஆனால், அதை அடைவதற்கு முன், மனித வாழ்வின் ஆசாபாசங்கள், போராட்டங்கள், கவலைகள், எதிர்ப்புகள், ஏமாற்றங்கள் என்று எதிர்கொள்ள வேண்டிய விஷயங்கள்தான் எத்தனை? கவலையினால் இளைத்தும், களைத்தும், தளர்ந்தும் போன மனத்துக்கு ஆறுதலும், தேறுதலும் தர அன்னையைத் தவிர வேறு யாரால் முடியும்? அப்படி பக்தர்கள் பிரார்த்திக்கின்ற அனைத்தையும், அவர்கள் வேண்டியவண்ணம் அனுக்கிரகிப்பவள் ஸ்ரீ சாரதாம்பாள் என்கிறது இந்த ஸ்லோகம். ‘யா சாரதாம்பேத்யபிதாம் வஹந்தீ க்ருதாம் ப்ரதிக்ஞாம் பரிபாலயந்தி | அத்யாபி ச்ருங்கேரிபுரே வஸந்தி வித்யோத்தேண்பீஷ்டவரான் திசந்தி ||’ சாரதாம்பாள் என்கிற திருநாமத்தைக் கொண்டு துலங்குபவள்; தாம் அளித்த வாக்குறுதியை காப்பாற்றி வருபவள்; இன்றும் சிருங்கேரியில் வாசம் செய்பவள்; அவள் பக்தர்கள் பிரார்த்திக்கும் அனைத்தையும் அருள்பவ
- Get link
- X
- Other Apps
🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️ *நீங்களே எதிர்பாராத மிகப்பெரிய திருப்புமுனை உங்கள் வாழ்க்கையில் ஏற்பட வேண்டுமா? புரட்டாசி மாதம் முடிவதற்குள் உங்களுடைய வீட்டில் பெருமாளுக்கு இந்த ஒரு தீபத்தை ஏற்றுங்கள்.* புரட்டாசி மாதம் இறுதி வாரம் வந்துவிட்டது. இந்த புரட்டாசி மாதம் முடிவதற்குள் பெருமாளை ஒரே ஒரு நாளாவது, இந்த முறைப்படி வழிபாடு செய்து பாருங்கள். எதிர்பாராத அதிர்ஷ்டங்களையும், எதிர்பாராத திருப்பு முனையையும், எதிர்பாராத முன்னேற்றத்தையும் அள்ளி அள்ளி தருபவர் எம்பெருமான். ஆடம்பரத்தையும் செல்வ வளத்தையும் அதிகப்படியாக விரும்பும் எம்பெருமானை, வழிபடுபவர்களுடைய வாழ்க்கையும் நிச்சயம் செல்வ செழிப்போடு தான் இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது. இன்றைய சூழ்நிலையில் மனிதர்களாகப் பிறந்தவர்கள் எல்லோரது மனதிலும், வாழ்க்கையின் அடுத்த நிலைக்கு செல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தான் இருக்கும். நாம் இருக்கின்ற நிலையில் இருந்து, விரைவாக பொருளாதார ரீதியான, நிறைவான முன்னேற்றத்தை அடைவதற்கு பெருமாள் வழிபாடு நிச்சயம் கைகொடுக்கும் என்ற பிரார்த்தனையோடு இந்த பதிவினை தொடங்கலாம். பெருமாளுக்கு சில பேர் வீடுகளில்