Posts

Showing posts from March, 2021
 நன்றி 🙏(  பகிரப்பட்டது) 🐺ஒரு விருந்தில்கலந்து கொள்கின்றோம். 🐺முதலில் அனைவருக்கும் மைசூர்பாகு இரண்டு இரண்டு துண்டுகளை இலையில் வைக்கிறார்கள்.  🥺உங்கள் இலைக்கு வரும் போது வைப்பவர் ஏதோ நினைவில் வேகமாக மிகச்சிறிய துண்டுகளை வைத்து போகிறார்.  😦”நீங்கள் தம்பி இன்னொன்னு வை” என்று சொல்லும் போதே அவர் அவசரத்தில் அந்த இடத்தை விட்டு விலகி வேறு வேலைக்கு போகிறார்.  அதன் பிறகு வரும் விருந்தை நீங்கள்.  1. சுவைத்து சாப்பிடுவீர்களா ? 2. சுவைக்காமல் சாப்பிடுவீர்களா ?  சுவைத்து சாப்பிட்டால் நீங்கள் வாழ்க்கையை ரசித்து வாழ்கிறீர்கள் என்று அர்த்தம். வாழ்க்கையை அர்த்தமாக வாழ்கிறீர்கள் என்று அர்த்தம்.  உங்களுக்குள் இருக்கும் சிகப்பு ஒநாயை புறக்கணித்து நீல ஒநாய்க்கு தீனி போட்டு வளர்க்கிறீர்கள் என்று அர்த்தம். சுவைக்காமல் ஏதோ அவமானம் நடந்து விட்டது மாதிரி சாப்பிட்டால் நீங்கள் வாழ்க்கையை வீணடித்து மற்றவர்களையும் கஷ்டப்படுத்துகிறீர்கள் என்று அர்த்தம். உங்களுக்குள் இருக்கும் சிகப்பு ஒநாய்க்கு தீனி போட்டு எதிர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்கிறீர்கள் என்று அர்த்தம். ஒருவருடைய...
 "எனக்கு ரவாதோசை திங்கணும் போல இருக்கு...  பண்ணித் தர்றியா?"  -பெரியவா வரப் போறவாளைப் பத்தி முன்கூட்டியே தெரிஞ்சுண்டு, அவாளுக்குப் புடிச்ச ரவா தேசையை தனக்கு வேணும்னு கேட்டு செய்யச் சொல்லிய சம்பவம் (பெரியவா நடத்தின லீலை) கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன் புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன். நன்றி-17-12-2015 தேதியிட்ட குமுதம் பக்தி (ஒரு பகுதி)முன்பு படித்தது- இது வேறு ஆசிரியர். ஆசார்யா காஞ்சிபுரத்துல இருந்த காலகட்டம் அது. ஒருநாள் ராத்திரி வழக்கமான மடத்துக் காரியங்கள் எல்லாம் முடிஞ்சு எல்லாரும் தூங்கப் போறதுக்கு தயாராகிண்டு இருந்த நேரம் அது.  கிட்டத்தட்ட பத்தரை,பதினொரு மணி இருக்கும். அந்த சமயத்துல ரொம்ப தொலைவுல இருக்கிற ஒரு ஊர்ல இருந்து வயசான பெண்மணி ஒருத்தர் பரமாசார்யாளை தரிசனம்  பண்ண வந்தா. பரமாசார்யா அந்த பெண்மணிக்கு   ஆசிர்வாதம்  பண்ணிட்டு, மடத்துல கைங்கர்யம் செஞ்சுண்டிருந்த ஒருத்தரைக் கூப்பிட்டார். "எனக்கு ரவாதோசை திங்கணும் போல இருக்கு...  பண்ணித் தர்றியா?" அப்படின்னு கேட்டார். எல்லாருக்கும் ஆச்சர்யமான ஆச்சரியம்.  அமிர்தமாவே   இருந்தாலும்...
 பாவங்கள் போக்கி நன்மைகள் அருளும் பெருமாளின் சயன திருக்கோலங்கள் தலங்கள் : பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் பரந்தாமன், தன் திரு உருவத்தைப் பூவுலக மாந்தர்கள் அனைவரும் தரிசிக்க வேண்டுமென்று திருவுள்ளம் கொண்டு, அர்ச்சா மூர்த்தியாகப் பூவுலகில் பல திவ்யதேசங்க ளில் எழுந்தருளியிருக்கிறார்.  அவற்றுள்ளும் பல தலங்களில் பாற்கடலைப்போலவே சயனக் கோலத்தில் காட்சிதருகிறார். உலக மக்களில், பெருமாளை வழிபடும் அன்பர்கள் அனைவரும் வாழ்க்கையின் நிறைவில் வைகுண்டத்திலிருக்கும் பரந்தாமனின் திருவடிகளை அடைய வேண்டுமென்றே விரும்புவார்கள். அதன் பொருட்டே பூவுலகின் 108 திவ்ய தேசங்களில் எழுந்தருளியிருக்கும் பெருமாளை தரிசித்து வழிபடுகிறார்கள்.  திவ்ய தேசங்களில் பெருமாள் ஸ்தாபனா (நின்ற திருக்கோலம்) ; அஸ்தாபனா (அமர்ந்த கோலம்); ஸமஸ்தாபனா (படுத்திருக்கும் கோலம்); பரஸ்தாபனா (வாகனத்தில் எழுந்தருளியிருக்கும் கோலம்) போன்ற பல்வேறு சயனத் திருக்கோலங்கள் மூலம் காட்சிதருகிறார். 108 திவ்ய தேசங்களையும் தரிசிப்பவர்களுக்கு, வைகுண்ட பதவி கிடைக்கும்’ என்பது வைஷ்ணவர்களின் நம்பிக்கை.   இங்கே, சயனக் கோலத்தில் பெருமாள் காட்...
 #ஆரூர்_தொழுது_உய்யலாம் பகுதி - 3 41, திருவாரூர் திருக்கோயிலில்தான் தருமபுர ஆதீன குரு முதல்வர் ஸ்ரீ குருஞானசம்பந்த ஸ்வாமிகள் கமலை ஞானப் பிரகாசரைத் தம் குருவாக ஏற்றுக் கொண்டு உபதேசம் பெற்று சொக்கலிங்க மூர்த்தி பூஜையினை ஏற்றுக் கொண்டார்கள். 42, இக்கோயிலில் கமலை ஞானப் பிரகாசருக்குத் தஞ்சை மன்னனும் கிருஷ்ண தேவராயனும் வீதி விடங்கப் பெருமானுக்கும் வன்மீக நாதப் பெருமானுக்கும் ஆராதனைக்காக அளித்த தேவ தானங்கள் இராஜாங்கக் கட்டளை என்ற பெயரோடு விளங்கி வருகின்றன. இது இப்பொழுதும் தருமை ஆதீன நிர்வாகத்திலேயே நடைபெற்று வருகிறது. 43, திருவாரூரில் பூங்கோயில் அமைந்துள்ள முதல் சுற்றில் மூலாதார கணபதி வேறு எங்கும் இல்லாத விதத்தில் காட்சி தருகிறார். ஐந்து தலை பாம்பு சுருண்டு படுத்துக் கிடக்க அதன் நடுவில் தாமரையின் மேல் பாசம் அங்குசம் மோதகம் தந்தத்துடன் நர்த்தன கணபதி காட்சி தருகிறார். 44, திருவாரூர் திருக்கோயிலில் வீதி விடங்க விநாயகர், ஐங்கலக்காசு விநாயகர், வாதாபி கணபதி, கமலாலயக் குளக்கரையில் மாற்றுரைத்த பிள்ளையார், ஆசை விநாயகர், உச்சிஷ்ட விநாயகர், பொற்கம்ப விநாயகர் முதலியன சிற்பச் சிறப்பாலும் தெய்வீக பக்தி...
 கணபதி ஹோமம் செய்வதால் வரும் நன்மைகள். மகாகணபதியின் அருளைப் பெறக் கணபதி ஹோமம் மிகவும் முக்கியமானது.  வெள்ளிக்கிழமை, சதுர்த்தி ஆகிய நாட்களில் விடியற்காலையில் ஹோமம் செய்வது விசேஷம்.   அஷ்டத்திரவியம், தேங்காய்த்துண்டு ஆகியவை அதற்குச் சிறந்த ஹோமத்திரவியங்கள்.  1000 தேங்காய்க் கீற்றினால் ஹோமம் செய்ய செல்வம் வளரும்.  ஸத்துமா, நெல் பொரி, திரிமதுரம் ஆகியவை ஸர்வ வச்யம் நல்கும்.   திரிமதுரம் கலந்த நெல்பொரி கல்யாண ப்ராப்தியைத் தரும்.   நெல் கலந்த அன்னம், நெய் ஆகியவை விருப்பத்தை ஈடேற்றும்.  தேன் தங்கம் தரும்.  நெய்யில் நனைத்த அப்பம் மந்திர சித்தி, ராஜ வச்யம் தரும்.  மோதகம் போரில் வெற்றி தரும்.  மட்டை உரிக்காத தேங்காய் (1 மண்டலம்) மந்திர சித்தி நல்கும்.  தாமரை செல்வ வளர்ச்சி தரும்.  வெண்தாமரையால் வாக் சித்தி ஏற்படும்.  அருகம்புல் குபேர சம்பத்து தரும்.  மோதகம் நினைத்ததைத் தரும்.  வில்வ இலை, நெய்யில் நனைத்த சமித் ஆகியவையும் அப்படியே.  தேங்காய், அவல் மிளகு ஆகியவை ஸர்வ வசியம் தரும்.  இவ்வாறு ஹோமத்திற்குரிய ஆகுதிகள்...
 👆👆 *சங்கடஹர சதுர்த்தி*  பௌர்ணமியில் இருந்து 4-ம் நாள் வருவது சங்கடஹர சதுர்த்தி. கணபதிக்கும் மிகவும் உகந்த சங்கடஹர சதுர்த்தி தினத்தில் நாம் சொல்ல வேண்டிய முக்கிய ஸ்லோகத்தை இங்கு தெரிந்து கொள்வோம்... வினை தீர்ப்பான் விநாயகர் என்பார்கள். அதிலும் குறிப்பாக நாம் விநாயகருக்குக்கு மிகவும் உகந்த அவர் அவதரித்த சதுர்த்தி திதி நாளில் நாம் விரதமிருந்து வழிபட்டு வர அனைத்து சங்கடங்களும் விலகி நாம் வேண்டக் கூடிய வரங்களை வாரி வழங்கக் கூடியவர் நம் விநாயகர். அப்படிப்பட்ட உன்னத தினமான மஹா சங்கடஹர சதுர்த்தி தினம் இன்று. இன்று நாம் விரதமிருந்து, விநாயகரை அருகம்புல் மாலையை சாற்றி, அருகம்புல அர்ச்சனை செய்வதால் எல்லா நன்மைகளும் வந்து சேரும். *ஓம் ஸ்ரீம் கணாதிபதயே ஏகதந்தாய லம்போதராய |* . *ஹேரம்பாய நாலிகேர ப்ரியாய மோதபக்ஷணாய || .* *மமாபீஷ்ட பலம் தேஹி ப்ரதிகூலம் மே நஸ்யது | .* *அநுகூலம் மே வஸமானய ஸ்வாஹா || .* *விநாயகர் ஸ்லோகம்:* *கஜானனம் பூத கணாதி ஸேவிதம்* *கபித்த ஜம்பூ பலஸார பக்ஷதம்* *உமாஸுதம் சோக வினாச காரணம்* *நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்.* இந்த ஸ்லோகத்தை நாம் மனதார கூறிவருவதன் மூலம் எடுத்த காரியங...
 👆👆 *சங்கடஹர சதுர்த்தி 31-03-2021 விரதம் இருப்பது எப்படி?* சதுர்த்தி விரதம் இருந்தால் வேண்டிய வரங்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். முழு முதற்கடவுளான விநாயகப் பெருமானை நினைத்து இருக்கும் விரதம் ‘சங்கடஹர சதுர்த்தி விரதம்’ ஆகும். மாதம் தோறும் இவ்விரதம் வந்தாலும் அதனை தவற விடாமல் கடைபிடித்து வழிபாடு செய்பவர்களுக்கு மனதில் என்ன குறை இருந்தாலும் அது உடனடியாக நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அத்தகைய விஷேச பலன்களை தரும் சங்கடஹர சதுர்த்தி விரதம் புதன்கிழமை அன்று வருகிறது. இது மிகவும் விசேஷமானது ஆகும். புதன் கிழமையில் சதுர்த்தி விரதம் முறையாக எளிமையாக எப்படி இருப்பது?. 11 சதுர்த்தி விரதங்கள் கடைபிடிப்பது என்பது நினைத்ததை அடைய செய்யும் என்று நம்பிக்கை. அவ்வகையில் தொடர்ந்து சதுர்த்தி விரதத்தைக் கடைப்பிடிப்பவர்கள் சதுர்த்தி அன்று அதிகாலையிலேயே குளித்து முடித்து விட்டு அருகில் இருக்கும் பிள்ளையார் கோவிலுக்கு சென்று அவரை 11 முறை வலம் வந்து பிரதட்சணம் செய்ய வேண்டும். விநாயகருக்கு அர்ச்சனை செய்பவர்கள் அருகம்புல் சாற்றி அர்ச்சனை செய்து கொள்ள வேண்டும். உங்கள் மனதில் இருக்கும் குறைகளை விநாயகரிடம்...
 ஒன்பது கிரகங்களுக்கும் தானியம் உள்ளது.சூரியனுக்கு கோதுமை சந்திரனுக்கு நெல் செவ்வாய்க்கு துவரை புதனுக்கு பச்சை பயிறு வியாழனுக்கு கொண்டைக்கடலை சுக்கிரனுக்கு மொச்சை சனிக்கு எள் இராகுவுக்கு கறுப்பு உளுந்து கேதுவுக்கு கொள்ளு ஆகும் .   #திசையாண்டு சூரியனுக்கு ஆறு சந்திரனுக்கு பத்து செவ்வாய்க்கு ஏழு புதனுக்கு பதினேழு சனிக்கு பத்தொன்பது இராகுவுக்கு பதினெட்டு கேதுவுக்கு ஏழுவருடங்கள்#உதாரணமாக சூரியனுக்கு உரிய தானியம் கோதுமை ஆகும் சூரியனின் திசையாண்டு ஆறு ஆகும் .சூரியதிசை நடந்தால் ஆறுவெற்றிலையில் கொஞ்சம் கோதுமையும் ஆறுபாக்கும் வைத்து ஒரு வெள்ளைத்துணியில் தலையணைக்கு அடியில் வைத்து தூங்கவும் இப்படி ஆறு ஞாயிற்றுக்கிழமை செய்து ஆற்றில் ஒடும் நீரில் விடலாம் இதே போல மற்ற திசைகளுக்கும் செய்யலாம் இதனால் திசா காலங்களில் நன்மையுண்டாகும்
 *மனைவி:* என்னங்க சாயங்காலம்  சீக்கிரம் வாங்க சினிமாக்கு போகணும்...! 😂 *கணவன்:* வேலையிருக்கு Late ஆகும்.. 😟 *மனைவி:* சீக்கிரம் வந்தா பாஜக சின்னம் கொடுத்து வரவேற்பேன். 🙂 Late'ah வந்தா காங்கிரஸ் சின்னத்தால் அடி விழும். 😜 ரொம்ப late ஆனா ஆம் ஆத்மி சின்னம் தான் பேசும் 😳 Night full'ah வீட்டுக்கே வரலனா கம்யூனிஸ்ட் சின்னத்துடன் நா அங்க வருவேன்.  எப்படி வசதி...? 😂 யாருப்பா  அது பொண்டாட்டிக்கு  அரசியல்  தெரியாதுன்னு சொன்னது..?  😂😂😂
 ♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️ *12 ராசிக்காரர்களும் வழிபட வேண்டிய சிவ ரூபங்கள் பற்றிய பதிவுகள்* ⚜️‘சிவாய நம’ என்கிற நாமத்தை உச்சரித்தாலே பாவங்கள் நீங்கி விடுவதாக புராணங்கள் குறிப்பிட்டு கூறுகிறது. அத்தகைய வலிமை வாய்ந்த சிவ மந்திரம் உச்சரிக்கும் பொழுது நம்மை அறியாமலேயே நமக்கு பக்தி பரவசம் வந்து விடுகிறது.  ⚜️12 ராசியில் ஒவ்வொரு ராசிக்காரர்களும் தங்களுக்கு உரிய சிவ பெருமானை வழிபடுவதன் மூலம் முன்ஜென்ம பாவ வினைகளும், இந்த ஜென்மத்தில் நீங்கள் செய்த பாவங்களும் கூட கலைந்து விடும் என்பது ஐதீகம்.  *மேஷம் :* மேஷத்தில் பிறந்தவர்கள் திருவண்ணாமலையில் காட்சி தரும் அண்ணாமலையாரை ஒருமுறையாவது வணங்கி வந்தால் நல்லது நடக்கும். நீங்கள் பொதுவாக மலை மேல் அமைந்துள்ள சிவபெருமானை வணங்கி அபிஷேகம் செய்தால் நன்மைகள் நடைபெறும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். *ரிஷபம் :* ரிஷபத்தில் பிறந்தவர்கள் உங்களுடைய ராசிக்கு திருவாரூர், திருவானைக்காவல், கங்கை கொண்ட சோழபுரம் இந்த ஊர்களில் இருக்கும் சிவபெருமானை ஒரு முறையாவது சென்று வணங்கி வந்தால் நல்லது நடக்கும். அப்படி அங்கெல்லாம் செல்ல முடிய...
 •#தேவ_ரகசியம்  `#பொறுமையா_படிக்கவும்_பெரிய_பதிவு தேவ ரகசியம் ஒரு தாய் அப்போதுதான் ஒரு குழந்தையை பிரசவித்திருந்தாள். அந்தக் குழந்தையின் தந்தை ஒரு வாரத்துக்கு முன்னால்தான் இறந்து போனான். எமதர்மன் ஒரு எமதூதனை அனுப்பி “அந்த அம்மாவுடைய உயிரை எடுத்துக் கொண்டு வந்துவிடு” என்றான். இந்த எமதூதன் “ஐயோ பாவம் அப்பாவும் இல்லை, அம்மாவையும் நான் எடுத்துக் கொண்டு போய்விட்டால்  இந்தக் குழந்தைக்கு யார் கதி” என்று தாயின் உயிரைக் கவராமல் திரும்பி விட்டான். நீங்களெல்லாம் அந்த நிலையில்தான் இருக்கிறீர்கள். உங்களுக்கு என்று ஒரு எண்ணங்களை, அளவுகோல்களை வைத்திருக்கிறீர்கள். எமதூதன் அந்த குழந்தைக்கு வேறு யார் கதி என்று நினைத்து பரிதாபப்பட்டதனால் உயிரை எடுக்காமல் போய்விட்டான். ஆனால், எமராஜாவோ, “இதோ பார். உனக்கு தேவலோக ரகசியங்கள் தெரியவில்லை. கடவுளுடைய அருளாட்சி எப்படி நடக்கிறது என்பதும் உனக்குத் தெரியவில்லை. அது தெரிகிற வரைக்கும் நீ பூமியில் போய் கிட” என்று கூறி அவனைத் தூக்கி பூமியில் போட்டு விட்டார். அவன் கன்னங்கரேலென்ற உருவில் ஒரு பூங்காவில் முனகிக் கொண்டு  கிடக்க, அந்த வழியாக வருகிற ஒரு தையற்...
 ராமேஸ்வரம் பற்றி அறியாத 120 தகவல்கள்... 1. ராமேஸ்வரத்தில் உள்ள ஜோதிலிங்கம் வீபீணனால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த லிங்கத்தின் பின்புறம் கற்பூர ஆரத்தி காண்பித்தால் முன்புறம் அந்த ஜோதியை விளக்கின் இளஞ்சிவப்பு நிறத்தை அப்படியே காணலாம்.  2. ராமேஸ்வரம் கோவிலில் உள்ள அதிகார நந்தி வாகனம், விக்கிரகம், உற்சவர் ஆகிய மூன்று சிறப்புகளையும் பெற்று இருப்பது வேறு கோவில்களில் இல்லாத சிறப்பு. அதிலும் இந்த நந்தி வாகனம் முழுவதும் பொன்னாலானது. 3. பஞ்ச மூர்த்திகள் புறப்பாட்டின் பொழுது நந்தி தேவர், சுவாமிக்குப் புறங்காட்டாமல் சுவாமிக்குப் பின்புறமாக சுவாமியை முன்னோக்கியவாறு செல்வது இங்கு மரபு. 4. கோவிலின் முதல் பிரகாரத்தில் 144 விக்கிரகங்களும் இரண்டாம் பிரகாரத்தில் 17 விக்கிரகங்களும் பூஜைக்காக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இவை தவிர கோவிலில் உள்ள 381 விக்கிரகங்களுக்கும் நாள் தோறும் பூஜை நடத்தப்படுகிறது. 5. வெள்ளிக்கிழமை இரவு மலைவளர்க் காதலி அம்மன் கொலு முடிந்து தங்கப் பல்லக்கில் மூன்றாம் பிரகாரத்தில் பவனி வரும் பொழுது மேல் கோபுர வாசலுக்கு அருகில் உள்ள மன்னர் முத்துராமலிங்க சேதுபதியின் சிலைக்கு பரிவட...
 *நந்தி கல்யாணம் பார்த்தால்ஒரு வருடத்தில் திருமணம் நடக்கும்* அதிசிய திருத்தலம் திருமழபாடி! பூலோகத்தில் *நந்தியம் பெருமானுக்கு திருமணம் நடக்கும் ஒரே திருத்தலம் திருமழபாடி* #திருமழபாடி_நந்திதேவர் - சுயசாம்பிகை #திருக்கல்யாணம் -நாள் *23.03.2021- செவ்வாய்க்கிழமை* சாயங்காலம் 6 மணி முதல் 7 மணிக்குள் *#சவாலுக்கு நான் #ரெடி நீங்க ரெடியா ????* திருமணத்துக்கு ஏத்த வயசுன்னு நம்மாளுங்க  வகுத்து வச்சுருக்குறது ஆணுக்கு 21 வயசு , பெண்ணுக்கு 18 வயசு. நம்ம பிள்ளைகளுக்கும்  வயசு ஆச்சு. அதுவும் பல வருஷத்துக்கு முன்னாடியே. இதுவரைக்கும் கல்யாணம் #ஆகலையே. எவ்வளவோ தேடியும், ஒண்ணுமே #வரன் #அமையலையே. என்னென்னவோ #காரணம் சொல்றாங்க. #செவ்வாய் தோஷம்ங்கிறாங்க. கல்யாண #யோகம் இல்லைங்கிறாங்க. #ராகு_கேது சரி இல்லைங்கிறாங்க ... அது சரியில்ல,இது #சரியில்லங்கிறாங்க...  என்னென்னவோ #பரிகாரமும் பண்ணியாச்சு. இப்போ #நான் என்னதான் #பண்றது. நம்ம பிள்ளைகளுக்கு கல்யாணம் #ஆகுமா ? #ஆகாதா..? இந்த மனநிலையில இருக்கீங்களா நீங்க? இல்ல,உங்களுக்கு தெரிஞ்ச யாராச்சும் இப்படி #இருக்காங்களா..?  இந்தப் பதிவை படிக்கிற உங்...
 இன்றைய சிந்தனை. 🗑️🗑️🗑️🗑️🗑️🗑️🗑️🗑️🗑️🗑️🗑️ இன்னொருவரின் ரகசியம் சொல்லி.... நீங்கள் பெறும் நெருக்கங்களுக்கு ஆயுள் குறைவு....!!!!! ரோஜா செடியில் மல்லிகையை எதிர்பார்ப்பது போலத்தான்.... நாம் பிறர் போல வாழ நினைப்பதும்....!!!!! நீ பேசல அதான் நானும் பேசல என்கிற உறவை விட.... நீ பேசல அதான் நான் பேசுறேன் என்கிற உறவு கிடைச்சா வரமே....!!!!! வாழ்க்கை ஒரு நெடுந்தூரப் பயணம் தான், ஆனால்.... எப்படி இருக்கும், எங்கே முடியும் என்று யாருக்கும் தெரியாது...!!!! நாம் வாழும் நாட்களில் ஒவ்வொரு மணித்துளியையும் , மகிழ்ச்சியானதாய் மாற்றுவோம்.....!!!! முடிந்த பயணம் யாருக்கும் தொடர்வதில்லை இயற்கையின் நீதியிலே..... மகிழ்ச்சியில் பிறப்பதே மனிதம், மகிழ்வித்து மகிழ்வோம்.....!!!!! முட்களையும் ரசிக்கக் கற்றுக்கொள்.,...!!!! வலிகளும் பழகிப்போகும்....!!!! உடல் காயத்திற்கு மருந்திடுங்கள்....!!! மனக்காயத்திற்கு அனைத்தையும் மறந்திடுங்கள்...!!!! *தலைக்கனம்* இருப்பதால் தான் என்னவோ..... தட்டி இறுக்கப்படுகின்றன  *ஆணிகள்*....!!!! சிலர் காயப்படுத்தும் போது வராத வலி.... அதை நியாயப்படுத்தும் போது வந்துவிடுகிறது....!!!...
 **சர்வம் கிருஷ்ணார்ப்பணம்! என்று சொன்னால் போதும். கவலை இனி இல்லை!!!.** யமுனைக் கரையில் கண்ணனின் தோளில் சாய்ந்தவாறு கண்ணன் தலையில் சூடியிருந்த மயில்பீலி காற்றில் படபடக்கும் அழகை ராதை ரசித்துக் கொண்டிருந்தாள். ஓவியமாக ராதை தன் தோளில் சாய்ந்துக் கொண்டிருந்த போதிலும், கண்ணனின் கவனம் அக்கரையிலேயே இருந்தது. "என்மேல் ஒரு சிறிதும் அக்கறையில்லாமல் அக்கரையில் என்ன பார்வை?'' என்றாள் பொய் கோபத்ததுடன். "எனக்குப் பசிக்கிறது!"என்றான் அந்த மாயாவி. இதோ உடனடியாக நானே சமைத்து உங்களுக்கு உணவு எடுத்து வருகிறேன். அதற்கு அக்கரையைப் பார்ப்பானேன்?'' என்றாள் ராதை. "அக்கரையிலும் ஒருவருக்குப் பசிக்கிறது!''. "யார் அவர்?'' ராதை கூர்மையாகத் தானும் அக்கரையைப் பார்த்தாள். அங்கே ஆலமரத்தடியில் ஒரு முனிவர் அமர்ந்திருப்பது தெரிந்தது. "துர்வாச மகரிஷி!'' என்றான் கண்ணன்."அறிவேன்! கோபத்திற்கும் அதனால் தாம் கொடுக்கும் சாபத்திற்கும் பெயர்பெற்றவர்!'' என்றாள் ராதை. "ராதா! என் மனத்தில் நீ இருக்கிறாய். அவர் மனத்தில் நான் இருக்கிறேன்! அவர் என் ப...
 “There were *three ships* which were nearby when the *Titanic* sank.   One of them was known as the *Sampson*. It was 7 miles away from the Titanic and they saw the white flares signaling danger, but because the crew had been hunting seals illegally and didn't want to be caught, they turned and went the opposite direction away from the Titanic. *This ship represents those of us who are so busy in our own lives that we can't recognize when someone else is in need.* The next ship was the *Californian*. This ship was only 14 miles away from the Titanic, but they were surrounded by _ice fields_ and the captain looked out and saw the white flares, but because the conditions weren't favorable and it was dark, he decided to go back to bed and wait until morning. The crew tried to convince themselves that nothing was happening.  *This ship represents those of us who say I can't do anything now. The conditions aren't right and so we wait until conditions are perfect before ...
 *மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் - நான் வைத்யசாஸ்த்ரம் படிச்சதில்லே* அந்தப் பையனுக்கு மிஞ்சி மிஞ்சி போனால் பதினஞ்சு, பதினாறு வயஸ்தான் இருக்கும். பாவம், தாங்க முடியாத தலைவலியால் அவதிப்பட்டான்! டாக்டர்கள், வைத்யம் இதெல்லாம் ஒரு பக்கம் அதுபாட்டுக்கு போய்க் கொண்டிருந்தாலும், அவனுக்கு பேரிடியாக ஞாபகசக்தியும் குறைந்து கொண்டே வந்ததது. சோதனை காலத்திலும் ஒரு நல்ல காலம், ஞாபகம் நன்றாக இருக்கும் போதே ["அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்" என்று ஆழ்வார் பாடியது போல்] பெரியவாளிடம் வந்து கண்ணீர் விட்டான். “எனக்கு தலைவலி தாங்க முடியலே பெரியவா….அதோட மறதி ரொம்ப இருக்கு. பாடத்தை ஞாபகம் வெச்சுக்கவே முடியலே…பெரியவாதான் காப்பாத்தணும்” அழுதான். “கொழந்தே! நா…..வைத்யசாஸ்த்ரம் படிச்சதில்லேடா…..வேதாந்த சாஸ்த்ரந்தான் படிச்சிருக்கேன்…..” பையன் நகருவதாக இல்லை. பெரியவாளிடம் prescription வாங்காமல் போவதாக இல்லை. அதற்கு மேல் அவனை சோதிக்க பெரியவா விரும்பவில்லை. எனவே அவனிடம், ” சரி, நான் சொல்ற வைத்யம் ரொம்ப கடுமையா இருக்குமேப்பா! ஒன்னால follow பண்ண முடியாதேடா கொழந்தே!…” “அப்டீல்லாம் இல்லே பெரியவா……ஒங்க வார்த்தைப...
 இன்றைய சிந்தனை. 🔏🔏🔏🔏🔏🔏🔏🔏🔏🔏🔏 ஒவ்வொரு பிரச்சினைக்கும் மூன்று வகையான தீர்வுகள் உள்ளன.... ஏற்றுக் கொள்வது.... மாற்றிக் கொள்வது.... விட்டு விடுவது....!!!! ஏற்றுக்கொள்ள முடியாத விஷயங்களை மாற்றிக் கொள்ளுங்கள்....  மாற்றவே முடியாத விஷயங்களை விட்டுத் தள்ளுங்கள்....!!!!! புதிய உறவோ, பழைய உறவோ.... உங்கள் மீது யார் அன்பாக இருக்கிறார்களோ.... அவர்களை யாருக்காகவும் விட்டுக் கொடுக்கவும் கூடாது.., விட்டுப் போகவும் கூடாது....!!!!! எல்லோருடைய கனவுகளும் ஒன்றாய் இருப்பதில்லை..... ஒரு வேளை உணவு என்பதே சிலருக்கு கனவாய் இருக்கிறது....!!!!! மனிதன் துன்பப்படாமல் தன்னையே மறு உருவாக்கம் செய்து கொள்ள முடியாது...!!! ஏனென்றால், அவன் துன்பப்படுவதற்கு முன்... வெறும் கல்லாகவும்..,. துயரங்களுக்குப் பின் ..... மீண்டும் தன்னைத்தானே உருவாக்கிக் கொள்வதில் .... சிற்பியாகவும் இருக்கிறான்....!!!! அனைத்துக் கேள்விகளுக்கும் காலம் பதில் சொல்லத்தான் செய்கிறது...... நாம் தான் கவனிக்கத் தவறி விடுகிறோம்....!!!! தூய காற்று அதிகரிக்க அதிகரிக்க தீய காற்று குறையும்.., நற்குணங்கள் அதிகரிக்க அதிகரிக்க .... தீய குணங்கள்...
 இறைவன் கணக்கு...? ஒரு கோவில் மண்டபத்தின் வாசலில் இரண்டு வழிப்போக்கர்கள்  அமர்ந்திருந்தனர்.  இரவு நேரம்.. பெருத்த மழை வேறு... அப்போது அங்கே மற்றொருவரும் வந்து சேர்ந்தார். வந்தவர் "நானும் இரவு இங்கே தங்கலாமா..?" என்று கேட்டார்.  "அதற்கென்ன? தாராளமாய் தங்குங்கள்.." என்றார்கள். சிறிது நேரம் கழித்து "எனக்கு சாப்பிட ஏதாவது கிடைக்குமா?" என்றார் வந்தவர். இருவரில் முன்னவர் சொன்னார், "என்னிடம் ஐந்து ரொட்டிகள் இருக்கின்றது." இரண்டாமவர் "என்னிடம் மூன்று ரொட்டிகள் இருக்கின்றது" என்றவர், "ஆக மொத்தம் எட்டு ரொட்டிகள், இதனை நாம் எப்படி மூவரும் சமமாய் பிரித்துக்கொள்ள முடியும்?" என்றார். மூன்றாம் நபர், "இதற்கு நான் ஒரு வழி சொல்கிறேன்" தேவை உள்ளவன்தான் தீர்வு சொல்வான்.. "நீங்கள், உங்களிடமுள்ள ஒவ்வொரு ரொட்டியையும் மூன்று துண்டுகள் போடுங்கள். இப்பொது இருபத்து நான்கு துண்டுகள் கிடைக்கும்..! நாம் மூவரும் ஆளுக்கு எட்டு துண்டுகள் எடுத்து கொள்ளலாம்.." என்று கூற, 'இது சரியான யோசனை' என்று அப்படியே செய்தனர். ஆளுக்கு எட்டு துண்ட...
 எவருக்கும் தெரியாமல் தமிழன்னை பார்த்துக் கொண்டிருந்தாள் கண்ணதாசனை ! அந்த விசாலமான அறையின் ஒரு ஓரமாக அமர்ந்திருந்தாள் அவள். எம்.எஸ்.விஸ்வநாதனும் கண்ணதாசனை பார்த்துக் கொண்டிருந்தார். 'பெரிய இடத்துப் பெண்' படத்திற்கான பாடல் எழுதும் வேளை அது. இயற்கை எழில் கொஞ்சும் ஆற்றங்கரையில், இரு இளம் பெண்களோடு இணைந்து  ஆடிப்பாடி வருகிறார் எம்ஜிஆர். இதுதான் காட்சியமைப்பு. கண்ணதாசன் கண்களை மூடியபடி சிந்தித்துக் கொண்டிருந்தார்.  அவர் கண்களுக்குள் தேவாரம், திருவாசகம், சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, சீவக சிந்தாமணி, கம்ப ராமாயணம், திருக்குறள்... அத்தனையும் ஓடி வந்து அழகாக நடனம் ஆடின. எதை எடுப்பது, எதை விடுப்பது ? எதுவும் புரியவில்லை கண்ணதாசனுக்கு. கண் திறந்து பார்த்தார் கண்ணதாசன். அந்த அறைக்குள் அமர்ந்திருந்து, தன்னையே இடைவிடாமல் உற்று நோக்கிக் கொண்டிருக்கும் தமிழன்னையின் தரிசனத்தை கண்டு கொண்டார். கண் மூடி, கை கூப்பி வணங்கினார் தமிழன்னையை ! "தாயே, தமிழே ! நான் படித்த ஆயிரக்கணக்கான இலக்கியங்களில், இந்த இடத்துக்கு பொருத்தமான வரிகள் எவை தாயே ? எடுத்துச் சொல் அன்னையே,  வேண்டிக...
 *நேனெந்து வெதுகுதுரா* – சொல்வனம் | இதழ் 242 *By Smt Lalitha Ramachandran* வேம்பு மணியாச்சி ரயில் நிலையத்தின் நடைமேடையில் தன் வழக்கமான இடத்துக்குச் சென்று கூடையை இறக்கி வைத்தார். ஸ்டேஷன் மாஸ்டரின் அலுவலகத்துக்குச் சென்று சிறிய மேஜை ஒன்றைத் தூக்கிவந்து கூடைக்கு அருகில் வைத்தார். மேஜையின்மேல் வெள்ளைத் துணியை விரித்து, அதன்மேல் மந்தாரை இலைகளைப் பரப்பினார். அதன்பின் கூடையில் கொண்டு வந்திருந்த கடம்பூர் போளிகளை ஒவ்வொன்றாக எடுத்து இலைகளின்மேல் அடுக்கி வைத்தார். அவர் வாய் முனக அன்று மோகன ராகத்தை எடுத்துக்கொண்டது. அத்தனை போளிகளையும் எடுத்து வைத்தவுடன், வெறும் கூடையை எடுத்துக் கொண்டு ஸ்டேஷன் மாஸ்டரின் அலுவலகத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தார். இன்னும் ரயில் வர அரைமணி இருந்தது. மோகனத்தின் தைவதத்தின் சௌந்தர்யத்தை வியந்தபடி அவர் நடக்கும் போது எதிரில் யாரோ வருவதுபோலத் தோன்றியது. வருபவர் வேம்புவை நோக்கி கையை ஆட்டிக்கொண்டிருந்தார். ஆள் நெருங்கியதும் வருபவர் பெரிய அருணாசலம் என்று தெரிந்தது. காருகுறிச்சி அருணாசலத்தின் உடன் பிறவா சகோதரர். இருவர் ஊரும் பெயரும் ஒன்று என்பதால் இவர் பெரிய அருணாசலம். இரண்டு அர...