Posts

Showing posts from April, 2021
 இரண்டு சின்ன பசங்க,  ஒரு கூடை நிறைய ஆரஞ்சுப் பழங்களை எடுத்துட்டு ஓடி வந்தாங்க. ஒரு அமைதியான இடத்துக்கு போய்  இரண்டுபேரும் அதை பங்கு போட்டுக்க நினைச்சாங்க. பக்கத்துல உள்ள  சுடுகாட்டுக்கு போவோம்னு  ஒருத்தன் சொன்னான்.  சுடுகாட்டின் கேட் பூட்டி இருந்துச்சு.... கேட் மேல ஏறி உள்ள குதிச்சாங்க. அப்படி குதிக்கும்போது  ரெண்டு ஆரஞ்சுப்பழம் மட்டும்  கீழ விழுந்துடுச்சி.  கூடைல நிறைய பழம் இருந்ததுனால, அதை அவங்க கண்டுக்கல. கொஞ்சநேரம் கழிச்சி சுடுகாடு வழியா ஒரு குடிகாரன் வந்தான். அவன் உள்ள இருந்த சத்தத்த கேட்டு அங்கேயே நின்னுட்டான். "உனக்கொன்னு, எனக்கொன்னு" "உனக்கொன்னு, எனக்கொன்னு"  ''உனக்கொன்னு, 'எனக்கொன்னு" இதை கேட்ட அவனுக்கு   போதை மொத்தமும் தெளிஞ்சிடுச்சி.. அவன் பயந்து போய் அங்கிருந்து விழுந்தடிச்சி ஓடினான். அவன் போற வழியில  ஒரு மரத்தடியில சாமியார் ஒருத்தர்  தவம் பண்ணிக்கிட்டு இருந்தார்.   இவன் உடனே   அங்க இருந்த சாமியார் கிட்ட விஷயத்தைச் சொன்னான். "சாமி!  தயவு செய்து என் கூட வாங்க.  கடவுளும், சாத்த...
 சிரிப்போ சிரிப்பு.😂😂 😁😁😁😁 அவர்: ஏன்டா உங்க அப்பன் பேர பிரிஜ்ஜூக்குள்ள எழுதி வச்ச?? இவன்: என் பெயர் கெட்டுப் போகாம பாத்துக்கன்னு அவர்தான் சொன்னாரு.. 😁😁😁😁😁 பேராசிரியர்: சாப்ட்வேர்னா என்னா, ஹாடுவேர்னா என்னா? இவன்: செடியில உள்ளது சாப்ட்வேரு.. மரத்துல உள்ளது ஹார்டுவேரு. 😂😂😂😂 அவர்: ஜிம்முக்கு போற பசங்கள ஈசியா கண்டுபிடிச்சிடலாம். இவர்: எப்படி.? அவர்: ரெண்டு கைலயும் சாம்பார் வாளிய தூக்கிட்டு போறமாதிரி நடப்பானுங்க. 😁😁😁😁 அவர்: ஆண்கள்ல 65% பேர் மனைவி சொல்றத கேப்பாங்க. இவர்: அப்ப மீதி பேர்? அவர்: இன்னும் கல்யாணம் ஆகல. 😂😂😂😂 சோமு: நாட்ல அநியாயம் நடக்குது.. பாபு:எப்புடி சொல்றீங்க.? சோமு: வெயில் காலத்துல மோர் பந்தல் வைக்கிற மாதிரி, மழை காலத்துல டீபந்தல் வைக்கமாட்றாங்களே.! 😁😁😁😁 😂😂😂😂 அவர்: அபராதத்திற்கும், வரிக்கும் வித்தியாசம் தெரியுமா? இவர்: தெரியாது சொல்லுங்க. அவர்: தவறான செயலுக்கு தண்டம் கட்டுனா அபராதம்.. சரியான செயலுக்கு தண்டம் கட்டுனாஅது வரி.! 😂😂😂 அவன்: இதோ போறானே அவனுக்கு பொது அறிவு சுத்தமா இல்ல. இவன்: எப்டி சொல்றீங்க? அவன்: பழமொழிக்கு இங்லீஸ்ல என்னன்னு கேட்...
 #பூர்வ_ஜென்மத்தில் #புண்ணியம்_செய்தால்_தான் #திருமீயச்சூர்_வரமுடியும் தமிழகத்தில் ஸ்ரீலலிதாம்பாள் எனும் திருநாமத்துடன் அம்பிகை குடியிருந்து அருள்பாலிக்கும் தலம் திருமீயச்சூர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது , இந்தத் தலத்துக்கு ஏகப்பட்ட பெருமைகள் உள்ளன. ஸ்ரீசனீஸ்வரர், எமதருமர், அருணன், கருடன், வாலி, சுக்ரீவன் ஆகிய ஆறு பேரின் அவதாரத் திருத்தலம் இது! திருமீயச்சூர் தலத்துக்கு, ஆந்திரம், கர்நாடகம், கேரளம் என எங்கிருந்தெல்லாமோ ஏராளமான அன்பர்கள், தினமும் வந்தபடி இருக்கின்றனர். சிலிர்ப்பும் பக்தியும் பொங்க, தரிசித்துச் செல்கின்றனர். காரணம்… இந்தத் தலத்தின் நாயகி, ஸ்ரீலலிதாம்பாள்! உலகின் எல்லா இடங்களில் இருந்தும், ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்து, அவளை அனுதினமும் மனமுருகிப் பிரார்த்திப்பவர்கள் மிக மிக அதிகம்! அதனைப் பாராயணம் செய்தாலே, மன பாரமெல்லாம் போய்விடும். அப்பேர்ப்பட்ட, சக்தியும் சாந்நித்யமும் கொண்ட ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் உருவான திருத்தலம், திருமீயச்சூர்! பண்டாசுரன் எனும் அரக்கனால், துன்பங்களுக்கு ஆளான தேவர்கள், ஈசனின் திருவடியைச் சரணடைந்து கதறினர். அரக்கனை அழிக்க, ஸ்ரீபார்வதியை ஸ்...
 கிருஷ்ணர் வணங்கும் ஆறுபேர் யார் நாம் எல்லோரும் கிருஷ்ண பரமாத்மாவை வணங்குகிறோம். ஆனால் கிருஷ்ணரும் யார் யார் யாரையோ கும்பிடுகிறார். வியப்பாக இருக்கிறது அல்லவா? கள்ளக் கிருஷ்ணனின் இந்த ரகசிய செயலைக் கண்டு பிடித்தது வேறு யாரும் இல்லை. கிருஷ்ணனின் மனைவி ருக்மிணிதான் இதைக் கண்டுபிடித்தார். ஒரு நாள் கிருஷ்ணரும் வழிபாடு செய்வதைப் பார்த்துவிட்டு, “அன்பரே! நீர் யாரையோ வணங்குவது போலத் தெரிகிறது. அவர்கள் யார்? என்று கேட்டாள்.  கிருஷ்ணர் கொஞ்சமும் தயங்காமல் பதில் சொன்னார்: நித்யான்ன தாதா,  தருணாக்னிஹோத்ரி,  வேதாந்தவித்,  சந்திர சஹஸ்ர தர்சீ,  மாஸோபாவாசீச,  பதிவ்ரதா ச ஷட் வந்தனீயா மம ஜீவ லோகே பொருள்: இந்த மனிதர்கள் வாழும் பூமியில் நான் ஆறு வகையான மக்களை வணங்குகிறேன்:  தினமும் அன்னதானம் செய்வோர்,  தினமும் அக்னிஹோத்ரம் செய்வோர்,  வேதாந்தம் அறிந்தவர்கள்,  சஹஸ்ர சந்திர தரிசனம் செய்து சதாபிஷேகம் செய்துகொண்டோர், மாதா மாதம் உபவாசம் இருப்போர்,  பதிவ்ரதையான பெண்கள். அவர் சுருக்கமாகச் சொல்லி முடித்தாலும், பெரியோர்கள் இதற்குச் சொல்லும் விளக்கத்தை நாம்...
 சென்னை மாநகரின் முதல் கருணை இல்லம்! கஞ்சித்தொட்டி ஆஸ்பத்திரி ஸ்டான்லி மருத்துவமனையாக மாறியது! ரயில் நிலையங்கள், வணிக நிறுவனங்கள், கோட்டைகள் என பழமையான வரலாற்றுச் சின்னங்களைக் கொண்ட சென்னை மாநகரில் முதல் கருணை இல்லம், இராயபுரத்தில் தான் தொடங்கப்பட்டு உள்ளது.  ராயபுரத்தின் பிரதான சாலையாக இருப்பது ‘எம்.சி.ரோடு’ என அழைக்கப்படுகிற மணியக்காரர் சத்திரம் சாலை. இந்தச் சாலை இப்பெயர் பெற்றதற்கான காரணம் அந்தச் சாலையின் தொடக்கத்தில் அமைந்து இருந்த மணியக்கார சத்திரத்தால்தான். சுமார் ஐம்பது முதியவர்கள் இன்றும் தங்கியுள்ள இந்தக் கருணை இல்லம் முந்நூறு ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்தது. 1700-களில் பஞ்சமும், போரும் அடுத்தடுத்து ஏற்பட்டு மக்கள் கொத்து கொத்தாக இறந்துகொண்டிருந்தனர். அப்போது இந்தப் பகுதியில் வசித்த மணியக்காரர் ஒருவர் 1782ஆம் ஆண்டு தனது தோட்டத்தின் ஒரு பகுதியில் கஞ்சித்தொட்டி அமைத்தார். காலையிலேயே கஞ்சி காய்ச்சி தொட்டியில் ஊற்றிவிட, மக்கள் தாங்கள் கொண்டு வரும் லோட்டாவில் கஞ்சியை எடுத்துப் பருகுவர். இதன் மூலம் அந்தப் பகுதி மக்களைப் பஞ்சத்தில் மடியாமல் காத்துள்ளார். வரலாறு எப்பொழுதும...
 □□□தெய்வ தரிசனம்□□□ ஸ்கூட்டரை ஓரமாக நிறுத்திவிட்டு கோவிலில் சாமி கும்பிடச் சென்றான் ஆனந்த்! கோவில் வாசலில் இருந்த பூக்கடை அருகே செருப்பை விடப்போனான்.  அங்கு ஒரு முதியவர் தலை சுற்றிக் கீழே விழுந்துவிட்டார்! இதைப் பார்த்த ஆனந்த் பெரியவரை மெல்ல எழுப்பி அருகிலிருந்த தூணில் சாய்த்து உட்காரவைத்துவிட்டு அருகிலிருந்த கடையில் ஒரு சோடா வாங்கி வந்து, முகத்தில் தெளித்து சற்று குடிக்கவும் கொடுத்தான்!  முதியவரிடம் விவரம் கேட்டபோது, ""இரண்டு நாளா சாப்பிடலே..., அதான் மயக்கமா வந்திடுச்சு'' என்றார்.  அப்போது கோவிலுக்குள் செல்ல இருந்த சற்று வயதான தம்பதியரிடம், ""இவரைக் கொஞ்சம் பாத்துக்கோங்க...,நான் இவருக்கு ஏதாவது உணவு வாங்கி வருகிறேன்''என்று சொல்லிவிட்டு ஸ்கூட்டரில் விரைந்தான். அவர்களும் காத்திருந்தனர்.  சிற்றுண்டியும் கொஞ்சம் தண்ணீரும் வாங்கி வந்து மிகவும் சோர்வாயிருந்த முதியவரை கைத்தாங்கலாக அருகிலிருந்த மரத்தடிக்கு அழைத்துச் சென்றான். உணவைச் சாப்பிட வைத்து சிறிது தண்ணீரும் கொடுத்தான். பெரியவர் அவனிடம், ""ரொம்ப நன்றி தம்பி'' என்றார்.  இதெல்லாம் வேட...
 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 🔥அக்னீநட்சத்திரமும் காண்டவ தகனமும் 🔥 🌞  அக்னி நட்சத்திரம் குறித்து புராணம்                   கதை ஒன்று உள்ளது.* 🌞 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 ⚡ புராண காலத்தில் 12 வருடங்கள் இடைவிடாமல் நெய்யூற்றி சுவேதகி யாகம் செய்தார்கள்.  யாகத்தீயில் வார்க்கப்பட்ட நெய்யை அதிகமாக உண்ட அக்னி தேவனுக்கு மந்த நோய் தாக்கி விட்டது. அந்த நோய் நீங்குவதற்கு மூலிகை செடிகள் நிறைந்த காண்டவ வனத்தை 21 நாட்கள் எரித்த காலமே அக்னி நட்சத்திர நாட்கள் என்று புராணம் கூறுகிறது 🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞 *🔥 அதை தெரிந்து கொள்வோம். யமுனை ஆற்றங்கரைக்கு அருகிலுள்ள காட்டின் பெயர் காண்டவ வனம்.* இந்தக் காட்டிற்குள் அரிய மூலிகைச் செடிகள் இருப்பதால் அதன் மணம் ஆற்றங்கரைக்கு வருபவர்களைக் கவரும். இந்திரனின் காவலில் உள்ள அந்த வனத்தில் அரிய மூலிகைகள் செழித்து வளர, அவ்வப்போது மழைபெய்யச் செய்தான் மழையின் அதிபதியான இந்திரன். 🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿 🌿 இயற்கையின் எழிலுடன் மூலிகையின் மணமும் வீசிக்கொண்டிருந்த இதமான சூழ்நி...
 மீள் (72,000 நாடி நரம்புகள் சேரும் இடம் பாதம்......) சமீபத்தில் ஒரு புகழ்பெற்ற  மருத்துவர் என்ன சந்தித்தார்.  வயது 70களில் இருப்பவர்.. அவர் ஒரு ஈ.என்.டி. ஸ்பெஷலிஸ்டும் கூட!  தனக்கு நேர்ந்த ஒரு பிரச்னை பற்றி அவர் பகிர்ந்து கொண்ட விஷயம் மிக ஆச்சர்யமாக இருந்தது..  அன்று காலை எழுந்தவுடன்  அவருக்கு ஒரு பிரச்னை.  சிறுநீர் போகவேண்டும் போல அவரின் அடிவயிறு முட்டிக்கொண்டு இருக்கிறது..  ஆனால், போய் உட்கார்ந்தால் வரவில்லை.  இந்த வயதில் இதுபோல் சிலருக்கு வராமல் கொஞ்ச நேரம் போக்கு காட்டுவது சகஜம், பிறகு முயற்சித்தால் வந்துவிடும் என்பதால்,  சற்று நேரம் கழித்து முயற்சித்து பார்த்திருக்கிறார். அப்போதும் வரவில்லை. தொடர்ந்து முயற்சித்தும் சிறுநீர் வரவில்லை என்றதும்தான்,  ஏதோ பிரச்னை என்று புரிந்தது.  டாக்டராக இருந்தாலும்,  தசையும் ரத்தமும் கொண்ட மனிதர்தானே அவரும்! அடிவயிறு கனத்துப் போய்,  உட்காரவும் முடியாமல், நிற்கவும் முடியாமல் படு அவஸ்தையாக, ஒருவித பயத்துடன் இருந்த அந்த நிலையில், உடனே தனக்குப் பழக்கமான ஒரு சிறுநீரக இயல்துறை மருத்துவ...
 திருச்செந்தூர் ஆலயத்தில் தினமும் மூலவர் நடை திறப்பதற்கு முன்பாக முதன்முதலில் ஆலயத்தின் கொடிமரத்துக்குத்தான் பூஜை நடைபெறும்.... இந்த கொடி மரம் பொதிகை. மலையிலிருந்து வரப்பெற்ற சந்தன மரமாகும் இந்த கொடிமரம் சந்தன கொடிமரம் என்பது பல பேருக்கு தெரியாது. இந்த கொடிமரம் திருச்செந்தூர் ஆலயத்திற்கு வந்த வரலாற்றை பற்றி தெரிந்து கொள்வோமா? திருச்செந்தூருக்கு கொடிமரம் வந்த கதை! முன்னொரு காலத்தில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி திருவிழா நடைபெறவில்லை.  காரணம் அங்கு கொடிமரம் இல்லை. ஆகவே திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு கொடிமரம் வைக்க வேண்டுமென்று ஊர் கூடி பேசி முடிவெடுத்தனர்.  உடனே ஆறுமுகம் ஆசாரி என்பவர் தலைமையில் 21 பேர் கொண்ட குழு காக்காச்சி மலைக்கு (மேற்கு தொடர்ச்சி மலை) கொடி மரம் வெட்ட கிளம்பினர்.  திருச்செந்தூர் மந்தை அருகே உள் அம்மன் கோயிலில் அந்தக் குழுவினர் வேண்டச்சென்றனர்.  அம்மன் கோயில் முன்பு மற்றவர்கள் நின்று கொண்டனர்.  அம்மனை வணங்க ஆறுமுகம் ஆசாரி மட்டும் கருவறைக்குள் நுழைந்து அம்மனை வணங்கினார். அப்போது அம்மன் கண்களில் இருந்து நீர் வழிந்தது. பயந...
 *What's important while eating, taste or the stone in the bite*  *A great thought* 🕹🕹🕹 *In a restaurant, one well-known chef cooked  very tasty pulav using high quality rice. As soon as the pulav was ready, its aroma spread all over. Everyone's mouth started watering 😋* *Now they were all eager to taste the pulav. About a hundred people were served the pulav.*  *Just when every one was about to take the first bite & put it in their mouth, the  chef came and said that there is a small stone in the pulav. As it was of the same color and size of the rice grain, he couldn't find it. He said as it may come in anybody's plate he would want them to be carefull while eating & the stone might injure them if it comes in between the teeth.* 🤔🤭😯 *The flavor of the pulav is  good.... the taste is also great but now the fun of eating has gone. Everyone was like forcefully swallowing one bite after other without paying attention to the taste while eating. ...
 *DRINK DRINK DRINK DRINK* By: Arnaldo Liechtenstein, physician  Whenever I teach clinical medicine to students in the fourth year of medicine, I ask the following question. What are the causes of mental confusion in the elderly? Some offer: "Tumors in the head".  I answer: No! Others suggest: "Early symptoms of Alzheimer's".  I answer again: No! With each rejection of their answers, their responses dry up. And they are even more open-mouthed when I list the three most common causes: - uncontrolled diabetes; - urinary infection; - dehydration It may sound like a joke, but it isn't.  People over 60 constantly stop feeling thirsty and consequently stop drinking fluids. When no one is around to remind them to drink fluids, they quickly dehydrate.  Dehydration is severe and affects the entire body  It may cause abrupt mental confusion, a drop in blood pressure, increased heart palpitations, angina (chest pain), coma and even death. *This habit of forgettin...
 *BREAKING NEWS* Lockdown New guidelines ! The ladies here by declare their new guidelines &  policies during lockdown period with immidiate effect. The Kitchen will be opened for only Emergency Services. Emergency services includes: 1. breakfast  8 am to 9 am 2. lunch.         1 pm to 2 pm 3. Dinner.       8 pm to 9 pm (In Limited quantity & varierty) Afternoon & night snacks stands cancelled. Tea or Coffee only 2 cups per day - 1 in morning & 1 at night.  (Can further be reduced to one per day if needed) The same shall be served in disposable plates & cups. If this lock down continues for few more weeks, ( from the above mentioned time frame ), yet other services may have to be cancelled as well, either partially or completely. No guests or friends will be allowed either for breakfast, luch or dinner. Only neighbours will be permitted to join for the morning tea. Food parcels will be allowed only on S...
 இனிய காலை வணக்கங்கள் .. 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 நான் Five. star hotel ஒன்றிற்கு உணவருந்த சென்றேன்.Menu படித்து விட்டு உணவுக்கு ஆர்டர் கொடுத்தேன். சுமார் 20 நிமிடங்கள் கழித்து, ஆண்களும் பெண்களுமாக 10 பேர் நான் அமர்ந்திருந்த டேபிள் அருகே அமர்ந்தார்கள். தேவைக்கு order கொடுத்தார்கள். சிறிது நேரத்திலேயே உணவு வந்தது. கூச்சலும் கும்மாளமுமாக உணவு உண்டர்கள். எனக்கு இன்னும் உணவு வராததை கவனித்த ஒருவர் அதை கிண்டலாக குறிப்பிட்டார். தனக்கு அந்த ஹோட்டலில் எல்லோரையும் தெரியும். அதனால்தான் quick and better service...no need to wait like begger என்றார். என்னால் பொறுக்க முடியவில்லை.Order ஐ Cancel செய்து விட்டு புறப்படலாம் என்று யaiter ஐ கூப்பிட்டேன். Waiter அமைதியாக என்னிடம் கூறினார். Sir உங்களுடைய order Very special எங்களுக்கு. அதை எங்கள் Chief Chefஅவரே தயாரித்து கொண்டிருக்கிறார். அவர்களுக்கு தரப்பட்ட உணவு அவசரமாக, இங்கே பயிலும் மாணவர்களால் தயாரிக்க பட்டது. ஏனென்றால் உங்கள் உணவை எங்கள் தலைமை சமையல்காரர் தயாரித்து கொண்டிருக்கிறார். நான் அமைதி ஆனேன். பொறுமை காத்தேன். சிறிது நேரத்தில் என் உணவு வந்தது. அத...
 Recommedations from *Psychologists*.  *1*. *Isolate yourself from news about the virus. (Everything we need to know, we already know* ). *2*.  *Don't look out for death toll*. It's not a cricket match to know the latest score. Avoid that. *3*. Don't look for *additional information on the Internet,* it would weaken your mental state.  *4  *Avoid sending fatalistic messages.*  Some people don't have the same mental strength as you (Instead of helping, you could activate pathologies such as depression). *5*. *If possible, listen to music at home at a pleasant volume.* Look for board games to entertain children, tell stories and future plans.  *6*.  *Maintain discipline in the home by washing your hands,* putting up a sign or alarm for everyone in the house. *7*.  *Your positive mood will help protect your immune system,* while negative thoughts have been shown to depress your immune system and make it weak against viruses.
 *பெரியவா திருவடி யே சரணம்*. ஒரு முறை, ஸ்ரீ மகாபெரியவா திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் முகாமிட்டிருந்தார். மகாபெரியவர் பாபநாசத்தில் முகாமிட்டிருக்கும் செய்தி  காட்டுத்தீ  போல் எங்கும் பரவியபோது  அந்த பக்கம் இருந்த பக்தர்கள் எவ்வளவு மகிழ்வார்கள்.  சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்து ஸ்ரீ மகாபெரியவாளை தரிசித்து அனுக்ரஹம் பெற்றுச் சென்றனர். மகாபெரியவா முகாமிட்டிருந்த இடத்திற்கு வெளியே   அந்தப் பக்கத்திலேயே  ஒரு இடத்தில் கண் பார்வையற்ற தம்பதியர் கையில் பார்வையில்லா கைக்குழந்தையுடன்   வருவோர்  போவோர்  தயவில் பிக்ஷை எடுத்துக் கொண்டிருந்தனர்.                                                                                                      ...
 #பெரியவரே, ஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கின்றீர் ? #ஒரு சமயம் வாரியார் சுவாமிகள் ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தார்.  #காலையில் கண் விழித்து எழுந்தவர், கை,கால், முகம் கழுவித்துடைத்துக் கொண்டு வந்து, தன் இருக்கையில் அமர்ந்து, திருநீற்றைக் கை நிறைய எடுத்துத் தன் நெற்றி நிறையப் பூசிக் கொண்டார். அவர் எதிரில் அமர்ந்திருந்த இளைஞன், நக்கலாகக் கேட்டான்.  ‘‘பெரியவரே, ஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கின்றீர்?”. வாரியார் சுவாமிகள் வேறு யாராவது பணிவாகத் திருநீறு பூசுவதைப்பற்றிக் கேட்டிருந்தால், திருநீற்றின் அருமை, பெருமைகளைப் பற்றி அற்புதமாக விளக்கம் கொடுத்திருப்பார். ஆனால் இந்த மாதிரி நக்கலடிக்கும் ஆசாமிகளுக்கு எப்படிப் பதில் சொல்வது?  அல்லது எடுத்துச் சொன்னால்தான் விளங்கப் போகிறதா?  கேட்டுக் கொள்ளப் போகிறார்களா?. வாரியார் சுவாமிகள் அவனை பார்த்து , ‘‘தம்பி, குடியிருக்கும் வீட்டிற்குத்தான் வெள்ளையடிப்பார்கள்.  என் நெற்றிக்குள் இறையன்பு குடியிருக்கின்றது.  நல்லுணர்வுகள் குடியிருக்கின்றன.  ஆகவேதான் வெள்ளையடித்தேன்.  காலி வீட்டிற்கு யாரும் அடிக்கமாட்டார்கள்,’’...
 தினமும் திருப்பதிப் பெருமாள் யார் முகத்தில் கண் விழிப்பார் தெரியுமா?  காஞ்சி மகாபெரியவா ஒருமுறை திருப்பதி சென்று, வேங்கடவனை தரிசித்துத் திரும்பியபோது அங்குக் கூடியிருந்த பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.  பக்தர்கள், அவரின் நல்வாக்கைக் கேட்கக் காத்திருப்பதை அறிந்து அவர்களிடம், ";நான், உங்களுக்கு ஓர் உபதேசம் பண்ணுகிறேன். காலையில் எழுந்ததும், 'ஸ்ரீவேங்கடேசாய நம:' என்றும், இரவில் படுக்கப் போகும்போது, ஸ்ரீ வேங்கடேசாய மங்களம் என்றும் சொல்லணும்"; என்றார். ஒருநாள் தொடங்கும்போது,  நாம் வேங்கடவனை வாழ்த்தியும், இரவு உறங்கும் முன் அவனைப் போற்றியும் முடித்தால் அந்த நாள் முழுவதும் புண்ணிய பலத்தால் நிறைந்த நாளாக அமையும் என்பது பெரியவர்களின் நம்பிக்கை.  நாமெல்லாம் அந்த மலையப்பன் முகத்தில் விழிக்க விரும்புகிறோம், அவன் யார் முகத்தில் தினமும் விழிக்கிறான் தெரியுமா? அனுதினமும் அதிகாலையிலேயே சுப்ரபாத சேவை நடைபெறும்.  இரவு இட்ட திரை விலக்க, மங்களப் பொருள்களோடு வேதியர்கள் அவன் சந்நிதி முன் வந்து நின்று வேதகோஷங்களை இசைப்பர். 'கௌசல்யாவின் புதல்வனான ராமனே, ஞாயிறானவன் வந்துவிட்டான்....
 *🔱ராகு காலத்தில் துர்க்கை வழிபாடு செய்ய வேண்டிய விபரம் கிழமை பற்றிய பகிர்வுகள் : *🔱ஞாயிறு : துர்க்கை சன்னதியில் மாலை 4:30-6:00 மணிக்குள் விளக்கேற்றி சர்க்கரை பொங்கல் நைவேத்யம் செய்ய வேண்டும். செல்வம் பெருக இதைச் செய்வர்.🙏 *🔱திங்கள் : காலை 7:30- 9:00 மணிக்குள் வெண்ணெய் காப்பு செய்து வெண்பொங்கல் நைவேத்யம் செய்ய வேண்டும். மூட்டு நோய் நீங்கவும், கல்வியில் சிறக்கவும் இதைச் செய்யலாம்.🙏 *🔱செவ்வாய் : மதியம் 3:00- 4:30 மணிக்குள் வடக்கு நோக்கி எரியும் வகையில் தீபமேற்றி, தக்காளி சாதம் நைவேத்யம் செய்ய வேண்டும். மாங்கல்ய பலம், குழந்தை பாக்கியத்திற்கு இந்த வழிபாடு. 🙏 *🔱புதன் : மதியம் 12:00 முதல் 1:30மணிக்குள் பஞ்சுத்திரி விளக்கேற்றி, புளியோதரை நைவேத்யம் செய்ய வேண்டும். பதவி உயர்வு, ரத்த சம்பந்தமான நோய் தீர இதைச் செய்யலாம்.🙏 *🔱வியாழன் : மதியம் 1:30- 3:00 மணிக்குள் விளக்கேற்றி, எலுமிச்சம்பழம் சாதம் நைவேத்யம் செய்ய வேண்டும். வியாபார லாபத்திற்கும், இருதய நோய் நீங்கவும் இதைச் செய்யலாம்.🙏 *🔱வெள்ளி : காலை 10:30- 12:00 மணிக்குள் நல்லெண்ணெய் அல்லது நெய் தீபமேற்றி, தேங்காய் சாதம் அல்லது பாயாச...
 #திதியும்_விதியும் மாறிய திருத்தலம் தன்னை தஞ்சமடைந்த பக்தன் மார்கண்டேயனுக்காக, காலனை சம்ஹாரம் செய்ததோடு, 16 வயதில் முடியும் மார்க்கண்டேயனின் விதியை, என்றும் சிரஞ்சீவியாக இருக்க அருளி மாற்றம் செய்தவர் அமிர்தகடேஸ்வரர். அதுபோல தம் பக்தனின் வாக்கை மெய்ப்பிப்பதற்காக, அமாவாசை திதியையே பவுர்ணமி திதியாக மாற்றிக் காட்டியவள் இத்தல அபிராமி அன்னை. இப்படி விதியும், திதியும் மாறிய திருத்தலமாக சிறப்பு பெற்று விளங்குகிறது திருக்கடையூர் திருத்தலம். இதில் அபிராமி அன்னையின் திருவிளையாடல் சிறப்புக்குரியதாகும்.  அபிராமி அம்மன் “அன்பனே! வாய் தவறி மன்னனிடம் கூறிய நின் சொல்லையும் மெய்யே என நிரூபித்தேன். தொடங்கிய அந்தாதியை தொடர்ந்து பாடி நிறைவு செய்க' என்று கூறியதும், எஞ்சிய 21 பாடல்களையும் சுப்பிரமணியன் பாடினார். மன்னன் உள்பட அங்கு கூடியிருந்த அனைவரும், அபிராமியின் அருளையும், சுப்பிரமணியத்தின் பக்தியையும் எண்ணி மெய்சிலிர்த்தனர். சுப்பிரமணியத்திற்கு ‘அபிராமி பட்டர்’ என்ற பட்டத்தை மன்னன் சூட்டினான். அபிராமிபட்டர் மறுத்தாலும், அவரது சந்ததியினருக்காக நிலபுலன்களும் அளித்தான். அதற்கான உரிமைச் செப்பு பட்டய...
 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏     🍒  #சனிக்கிழமையும்_பெருமாளும்  🍒 ⭐ ஏன் சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது? சனிக்கிழமைக்கும் பெருமாளுக்கும் என்ன தொடர்பு? இதற்கான விடை பிரம்ம வைவர்த்த புராணத்தில் உள்ளது. ⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐ 🌕 சூரியனுக்கு சஞ்ஜனா, சாயா என இரண்டு மனைவிகள். சூரியனுக்கும் சஞ்ஜனாவுக்கும் பிறந்தவர்கள் யமதர்ம ராஜாவும், யமுனா நதியும். சாயாவுக்குப் பிறந்தவர் சனீஸ்வரன்.கண்ணபிரான் யமுனையில் உள்ள காளியனை அடக்கி யமுனா நதியைத் தூய்மையாக்கிய பின் அனைத்துத் தேவர்களும் யமுனையைப் போற்றத் தொடங்கினார்கள். கங்கையை விடப் புனிதமான நதியென அதைக் கொண்டாடினார்கள். அதைக் கண்ட சனீஸ்வரன் யமுனையிடம் வந்து, “சகோதரியே! உன்னை மங்களமானவள் என எல்லோரும் கொண்டாடுகிறார்கள். ஆனால் என்னை முடவன் என்றும் அமங்களமானவன் என்றும் கூறுகிறார்களே. உன்னைப் போல நானும் மங்களகரமானவனாக ஆக வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார்.அங்கே வந்த நாரதர், “சனீஸ்வரா! யமுனை கண்ணனின் திருவுள்ளத்தை மகிழ்வித்தாள். அதனால் மங்களகரமானவளாக இருக்கிறாள். நீயும் கண்ணனின் திர...
 1960 எப்ப பாரு கதை புக் படிக்கிறதே வேலையா போச்சு, பாட புத்தகம் படிக்கிற நேரத்தை விட விகடன் கல்கி அப்புறம் இந்த கருமம் புடிச்ச குமுதம் இன்னொரு வாட்டி கையில் குமுதத்தை பார்த்தேன் அவ்வளவுதான்.... 1970 புத்தகத்தை விட்டாச்சு எப்ப பாரு transistor radio அதுல இந்த இலங்கை வானொலி 12 மணி நேரமும் காபி கடை மாதிரி ஒரே சத்தம்..எஸ்.பி.பியா, ஜேசுதாஸான்னு ஜானகியா லதா மங்கேஷ்கர் யார் நல்லா பாடறாங்கன்னு ஒரே இம்சை.. ஒரு பக்கம் ஹிந்தி பாட்டு ஒரு பக்கம் தமிழ் பாட்டு... 1980 புதுசா வந்திருக்கிற இந்த டிவியை போட்டு உடைச்சிடணும் மழை காலத்துல கோடு கோடா கோர்ன்னு ஒரே சத்தம்... வராத ரூபவாஹினி யை கூட்டிட்டு வர்றேன்ன்னு பாதி நேரம் மொட்டை மாடியில ஒத்த கால தவம்... வெள்ளிக்கிழமை விளக்கேத்தி வைச்சா இந்த செளகார் ஜானகி வெள்ளை புடவை கட்டிண்டு ஓன்னு அழற பாட்டா போடறானுங்க 1990 எவண்டா இந்த வீடியோ கேசட் ப்ளையரை கண்டுபிடிச்சவன் 18 மணி நேரம் கேசட் வாடகைக்கு எடுத்துட்டு வந்து வீட்டையே தியேட்டராக்கி வைத்திருக்காங்க... Evil dead எத்தனை வாட்டி போட்டு உயிரை எடுப்பிங்கடா ஓடி போயிடு வெளியில 2000 கேபிள் 📺 போட்டுட்டு எப்ப பாரு அதுக்க...
 கொரனோவால் எந்த உயிரிழப்பும் இல்லாமல் சிறப்பாக கட்டுப்படுத்தி, குணப்படுத்தியதாக  சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டிய சித்த மருத்துவர் திரு.வீரபாபு அவர்கள் கொரோனாவைக் குணப்படுத்த கபசுரக் குடிநீருக்கு துணை மருந்தாக அவர் கண்டுபிடித்த மூலிகை தேநீரையும் சேர்த்துக் கொடுத்து தமிழக அரசின் ஒத்துழைப்புடன் ஆங்கில மருந்து இல்லாமல், முழுவதும் சித்தா மருந்துகளைக் கொண்டே #கொரோனாவை ஒரே வாரத்தில் குணப்படுத்தி வருகிறார். அவ்வாறு தாம் கொடுக்கும் மூலிகை தேநீரில் சேரும் பொருட்களை  மக்களுக்கு வெளிப்படையாகத் தெரிவித்து உள்ளார். அதன் விபரங்கள்  #மூலிகை #தேநீர்: சுக்கு - 100 கிராம், அதிமதுரம் - 100 கிராம், சித்தரத்தை - 30 கிராம் கடுக்காய்த்தோல்- 30 கிராம் மஞ்சள் - 10 கிராம், திப்பிலி - 5 கிராம், ஓமம் - 5 கிராம் கிராம்பு- 5 கிராம், மிளகு - 5 கிராம் மேற்குறிய அனைத்து பொருட்களும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இவற்றை இடித்துப் பொடிசெய்து ஒரு டப்பாவில் பத்திரப்படுத்தவும்.  ஒரு பாத்திரத்தில் 400 மி.லி நீர் விட்டு அதில் இந்த பொடியை 10 கிராம் அளவு போட்டு நன்கு கொதிக்க விடவும். இக்கசாய நீர் 10...
Image
 வணங்குவோம்... வாழ்த்துவோம்... இந்த மாமனிதரை.... #மனித #நேயத்தின் #மற்றொரு #பெயர் #ஆட்டோ #ரவி...  ரவி என்கின்ற ரவிச்சந்திரன்....மழைக்கு கூட பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்காதவர் கடந்த 25 வருடங்களாக ஆட்டோ ஒட்டிவருகிறார்.பழைய வண்ணாரப்பேட்டையில் வாடகை வீட்டில் மனைவி, இரண்டு மகள்களுடன் வாழ்க்கையை நடத்திவருகிறார். சென்னைக் வரும் பல்வேறு மாநில பயணிகளுடன் பேசி பேசி கொஞ்சம் இந்தி கொஞ்சம் தெலுங்கு கொஞ்சம் மலையாளம் பேசக்கூடியவர். சமீபத்தில் அவர் செய்த ஒரு காரியத்தால் இன்று மக்களின் இதயத்தில் இடம் பிடித்துள்ளார். அப்படி அவர் செய்த காரியம் என்ன? கோல்கத்தாவை சேர்ந்தவர் சங்கரதாஸ்(52)தன் தொழில் நிமித்தமாக சென்னை வந்தவர் சேப்பாக்கத்தில் இருந்து ரவியின் ஆட்டோவில் பயணம் மேற்கொண்டார். சங்கரதாஸ்க்கு தமிழ் தெரியாது, இந்தியில் தான் போகவேண்டிய இடத்தை சொல்லிக்கொண்டே வந்தவருக்கு திடீர் என பேச்சு தடைபட்டது, கண் இருண்டது, வேர்த்து கொட்டியது, அப்படியே மயக்கம் போட்டு ரவியின் தோளில் சாய்ந்தார். வண்டியில் வந்த பயணி இப்படி மயக்கம் போட்டு விழுந்துவிட்டாரே என நினைத்த ரவி கொஞ்சமும் தாமதிக்காமல் பக்கத்தில் இருந்த தனிய...
 🌷தயவு செய்து படியுங்கள் நண்பர்களே...🌷 *"http" மற்றும் "https" என்னும் வார்த்தைகள் வெப்சைட்டின் ஆரம்பத்தில் பார்க்கிறோம் அல்லவா? இரண்டுக்கும் உள்ள வேற்றுமை என்ன?  பாதுகாப்பிற்காக அறியவேண்டிய முக்கிய தருணம்,  இதை அறிய 32 லட்சம் டெபிட் கார்டுகள் பறிகொடுத்துள்ளோம்.  இருந்தபோதும் வித்தியாசம் என்னவென்று சிலர் அறிந்திருப்பீர்கள். அறியதவருக்கு இப்பதிவு. நம் டெபிட் கார்டின் பாதுகாப்பு பற்றிய அறிகுறி தான் "http" மற்றும் "https" இவற்றின் வித்தியாசம். "http" என்பது "Hyper Text Transfer  Protocol" என்பதைக் குறிக்கும். "s" என்பது இணைந்தால்,  "Secure" என்பதைக் குறிக்கும். இணையதளத்தில் நாம் பார்த்தால் முதல் வார்த்தை "http://" என்றுதான் வரும்.    இதன் பொருள் தங்கள் இணையதளம் பாதுகாப்பற்ற இணைய முகவரியில் தங்களை இணைத்துள்ளது என்பதே.. இது தங்கள் கணினியின் மொழிகளை தாங்கள் உள்நுழைந்த இந்த இணையமுகவரி மூலம் ஒட்டுக்கேட்கவும் வகை செய்யும். இப்படிப்பட்ட இணையமுகவரியில் தாங்கள் நுழைந்து பூத்தி செய்யும் தனிப்பட்ட விண்ணப்பங்க...
 *சகுனி* தன் முன்னே கை நீட்டி விரல்கள் விரித்து கண்மூடி அமர்ந்து இருக்கும் தந்தை சுபலனைக் கண்டான் சகுனி,  இந்த கைகள்தானே என்னை வாரியணைத்தவை. இந்த விரல்கள்தானே என் கண்ணி துடைத்தவை. இந்த கைகள் தானே எனக்கு வாள்வீசக் கற்றுத் தந்தவை. இதன் விரல்களை என் கைகளாலேயே வெட்டவேண்டிய நிலை வந்ததே. இடையில் இருந்த குறுவாளால் ஒவ்வொரு விரலாய் வெட்டினான் சகுனி அவன் தந்தையோ வலிதாளாமல் உதடு கடித்து கடித்து சத்தம் வராமல் வாய் மூடி கண்கள் தெறிக்க அமர்ந்து இருந்தார்.  கண் திறந்தான் சுபலன். எதிரே கண்ணீரோடு அமர்ந்திருக்கும் மகனைப் பார்த்தான். மகனே சகுனி. எவ்வளவு அழகான குடும்பம் நமது. காந்தாரி என்ற அழகு மகள். வீரத்திற்கு இலக்கணமாக மூன்று புதல்வர்கள். அதில் இளையவனாய் நீ. இன்றோ அனைவரையும் இழந்து அநாதைகளாய் நிற்கிறோம். இதோ. இன்னும் சிறிது நேரத்தில் நானும் இறந்துவிடுவேன். நீ இருக்க வேண்டும். நம் குலத்தையே அழித்த பீஷ்மரின் குலத்தை ஒட்டுமொத்தமாய் வேரறுக்க நீ இருக்கவேண்டும் என்பதாலேயே எங்கள் அனைவருக்கும் இந்த சிறையில் அளிக்கப்பட்ட ஒரு பிடி உணவை உனக்கே தந்து ஒவ்வொருவராய் இறந்து கொண்டிருக்கிறோம். எங்கள் ஒவ்வொ...